To search this blog

Tuesday, February 18, 2020

Ekkattuthangal Thiruvooral Uthsavam - Thirumylai Peyalwar mangalasasanam 2020


திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உத்சவம்".  அடையாறு ஆற்றங்கரையில் கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டைக்கு  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் எழுந்து அருள்கிறார். திருநக்ஷத்திரம் கணக்கு இல்லாமல் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காடுத்தாங்கல்  திருவூறல் உத்சவம்".  கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டை பிரசித்தி பெற்றது. இது அடையாறு ஆற்றங்கரையில் உள்ளது.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் இங்கு எழுந்து அருள்கிறார்.  மாசி மாதம்  மற்ற சிறப்பு உத்சவங்கள் ஏதுவும் இல்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமை இவ்வுத்சவம் நடைபெறுகிறது.   இவ்வருடம் இவ்வுத்சவம்  19.1.2020 ன்று  சிறப்புற நடைபெற்றது.



On the banks of ‘Adayaru’ lies Ekkattuthangal, now an industrial belt.  At Ekkadu there is a piece of land owned by Perumal.  Sri Parthasarathi Perumal visits this place once an year and has thirumanjanam – this sojourn starts  @ 3 am when even cows would be  asleep.  Sri Parthasarathi perumal had purappadu in palanquin – traversing through the city, halting at many a places including Thirumylai Sri Madhava Perumal templs and Sri Adhi Kesava Perumal temple; has purappadu with Sri Peyalwar at Chithiraikulam;  reaches His land at around 11 am, has thirumanjanam, again starts around 3 pm, purappadu at Saidapet, reaches back Thiruvallikkeni in the night.




mandagappadi at Thiru Parasaran veedu

I have recently posted on Ekkattu Thangal Thiruvural Uthsavam .. … On 19.1.2020, day started so well.  Around 3 am, Sri Parthasarathi Perumal started his sojourn.  After brief halts at Thavana uthsava bungalow, Vijay Avenue, Solicitor Parasaran house  .. ..  He visited Sri Madhava Perumal temple at Thirumayilai, office of Sri Kapaleeswarar temple.  Then at Chithirai kulam, Sri Peyalwar was waiting for Him.  He was received with all honours and in purappadu with rendering of Moonram Thiruvanthi, taken to the temple of Sri Adhi Kesava Perumal.  After a brief rest and prasadam, He had veethi purappadu in Thirumayilai – at Chithra kulam, Alwar took leave as Perumal continued His winding journey to the banks of Adyaru. 


ஈக்காட்டுத் தாங்கல் உத்சவத்திலே, ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் நேராக எழுந்தருளாமல் வழியில் பல இடங்களில் இளைப்பாறுகிறார்.  திருக்கோவில்கள், சில நிறுவனங்கள், தனியாரின் வீடுகள் சில இந்த வரிசையில் உண்டு.  பல வருடங்களாக இவ்விடங்களில் பெருமாளுக்கு 'மண்டகப்படி' உண்டு.  பெருமாள் இவ்விடங்களில் எழுந்து அருளி, காத்து இருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  அதிகாலை 3 மணியளவில் திருக்கோவிலில் இருந்து துவங்கிய புறப்பாடு  திருமயிலை மாதவப்பெருமாள் கோவிலில் எழுந்து அருளிய பிறகு - ஸ்ரீகேசவப்பெருமாள் கோவிலுக்கு எழுந்து அருளினார்.


சித்திரை குளம் அருகே  தமிழ்த்தலைவனாம் ஸ்ரீ பேயாழ்வார் காத்திருந்து  ~ பெருமாளை மங்களாசாசனம் செய்து, மரியாதைகளை பெற்று, எம்பெருமானை  வரவேற்றார்.  தாரை போன்ற இசைக்கருவிகள் ஒலிக்க புறப்பாடு நடைபெற்றது.  எம்பெருமானும் ஆழ்வார்  அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி கோஷ்டியுடன் குளக்கரை புறப்பாடு கண்டு அருளி, ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலுக்குள் எழுந்து அருளினார்.  திருக்கோவிலில் இளைப்பாறி திருவமுது செய்வித்தபிறகு, மாட வீதிகளில் எழுந்து அருளி, குளக்கரையில் கோஷ்டி சாற்றுமுறையுடன் ஆழ்வார் பிரியாவிடை பெற, பெருமாள் தம் பயணத்தை தொடர்ந்தார்.  19.1.20  அன்று காலை ஐந்து மணியளவில் நடைபெற்ற புறப்பாட்டின் போது  எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.

ஆழ்வார் பாடல்களிலே தமிழும், அற்புத உரையும், பக்தியும் கமழும்.  பேயாழ்வார் இடைகழியில் மற்ற இருவர் ஏற்றிய விளக்கினிலே பெருமாளை சேவித்து 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என இசைத்தவர்.  அவரது வரிகள் இங்கே :  நாம் கண்ணுறும் சாதாரண விளக்குகள் எ ண்ணெய் திரி போன்றன  சேர்க்கையினால் அழுக்கேறுதலுண்டு, ஞானமாகிற விளக்கு அங்ஙனன்றியே நிர்மலமாயிருக்கும்  

உய்த்துணர்வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி*,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன்*, - மெத்தெனவே
நின்றானிருந்தான் கிடந்தானென்னெஞ்சத்து*,
பொன்றாமை மாயன் புகுந்து,

மனத்தினாலும் அறிவினாலும் உய்ந்து உணர்ந்த விவேக உணர்ச்சி எனும் மாசற்ற தீபத்தை ஏற்றி, ஸ்ரீமன் நாராயனான எம்பெருமானை தனது இதயத்திலே வலைப்படுத்தி தனதாக்கிக்கொண்டால், அவ்வெம்பெருமான் குறை ஒன்றுமில்லாமல்  ஹ்ருதயத்திலே குடி புகுந்து, அமைதியாக, முதலில் நின்று, சற்று பிறகு,   வீற்றிருந்து அதன் பிறகு அங்கேயே  பள்ளிகொண்டருளினான் ~ என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார். 

Sri Peyazhvaar at Thirukkovalur had darshan of Sriman Narayanan with the help of lights lit by Sri Poigaiyaar and Boothathaar.  In his Moonram thiruvanthathi, he revels – that he brought the Emperuman in to his heart lighting a lamp of consciousness, a lamp that does not accumulate any sort of dirt as the other wordly lights may get,  prayed to Him and got Him inside.  The Lord so entering into his heart, stood for a while, sat and enjoying the warmth and comfort of Alwar and his devotion, happily reclined as Sri Ranganatha. 

Here are some photos taken at Mylapore during Sri Peyalwar mangalasasanam and purappadu.         


அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)

 photo above Thirumylai Sri Madhava Perumal kovil








No comments:

Post a Comment