To search this blog

Saturday, February 22, 2020

Masi Thiruvonam 2020 ~ என்னுள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே


Today  22nd Feb 2020  is  Masi Thiruvonam.  On every Thiruvonam day, at Thiruvallikkeni there will chinna mada veethi purappadu of Sri Parthasarathi.  Today too, there was grand purappadu @ 0530 pm.   Thiruvonam is also the birthstar of Sri Poigai Azhwar,  Sri Pillai Logachar and Sri Vedanthachar.



கண்ணன் அவதரித்ததால் கோகுலமே சந்தோஷப்பட்டது.  நந்தகோபருடைய இல்லம் சிறப்படைந்தது. ஊர்மக்கள் ஆர்ப்பரித்து கண்ணபிரானின் வரவை கொண்டாடினர்.  எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் தமது  திருமொழியில்  கண்ணன் பிறந்து வளர்வதை அழகாக பாடி வர்ணிக்கிறார்.

பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்*
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்*
ஆணொப்பார் இவன் நேரில்லைகாண்*
திருவோணத்தான் உலகாளுமென்பார்களே.

கண்ணன் பிறந்த சூழ்நிலை அசாதாரணமானது !  - கம்சனிடம் இருந்து பிறந்த சமயம் முதலே  பாதுகாக்கப்பட்ட அற்புத குழந்தை நம் கிருஷ்ணர். , பலவித சீரும் சிறப்பும் நிறைந்த, புகழ் மிகுந்த குழந்தை கண்ணன் பிறந்த மாளிகைக்கு மக்கள் அனைவரும் ஆசையுடன் சென்று அவரைக்கண்டனர்.  பால  கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, குழந்தையைப் பார்க்கச் சென்றவர்களும், பார்த்துவிட்டுத் திரும்புவர்களும்  - இந்த உலகத்திலேயே இதுவரைக்கும், இக்குழந்தைக்கொப்பான ஆண்மகன் பிறக்கவேயில்லை. திருவோணத்தில் பிறந்தவனான இவன் அகில உலகத்தையும் ஆளப்போகிறான் என பேசிக்கொண்டானாராம்.  அத்தகைய சிறப்பு வாய்ந்தவன் மாயக்கண்ணன்.




திருவோணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார் எளிமையான வார்த்தைகளில் நாம் எம்பெருமானை அடைய அளித்த அற்புத வரிகள் :

எளிதில் இரண்டு அடியும்  காண்பதற்கு*, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண்.

நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரயணன் -  அஹங்காரத்தாலே அடிபணியாதிருந்த இரணியனை தொலைத்து, தனது பக்தன் ப்ரஹ்லாதனுக்கு அருள்புரிந்தவன்.  அவ்வாறு சிறப்பு வாய்ந்த அவனது உபய பாதங்களை அடைவதற்கு எளிதான உபாயம் - நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய திருநாமங்களை, கலக்கம் இல்லாமல் உள்ளம் தெளிந்து - எப்போதும் அவற்றை எண்ணி உச்சரிப்பதே !!


Poigaialwar shows the easy way of reaching the Lotus feet of Sriman Naryaana by advising us :  0 Heart, don’t ever have any confusion ! – Sriman Narayana killed the pride-ridden Hiranya, for the sake of devout Prahalada.  Think of that Lord who took form of Narasimha to get rid of the enemy of Baktha Prahlada; chant thy name always – and there is no other easier recipe for reaching the most benevolent Lord Sriman Narayana.

After the purappadu,  Sri Poigai Azhwar, Sri  Pillai Logachar and Sri Vedanthachar were seated near Sri Parthasarathi and there was goshti of ‘Muthal thiruvanthathi’ given to us by Poigaippiran.   In the veedhi it was Peyalwar’s moonram thiruvanthathi.  Here are some photos taken during today’s purappadu at Thiruvallikkeni divyadesam.

~adiyen Srinivasadhasan [Mamandur veeravalli Srinivasan Sampathkumar]
22.02.2020.










No comments:

Post a Comment