To search this blog

Wednesday, March 13, 2019

Sri Parthasarathi Thavana Uthsavam 1 @ Thiruvallikkeni 2019


Thiruvallikkeni is replete with Festivities.  After 7 days of happy  Theppothsavam, comes the Thavana Uthsavam;  It would amaze one to understand the significance of each Uthsavam and the care with which our elders have designed them.  There are palaces [bungalows] specially built for providing rest to Perumal on different occasions ~ at Thiruvallikkeni, there is Thavana Uthsava Bungalow situated in Thulasinga Perumal Koil Street, Komutti Bungalow in Peyalwar Koil Street and Vasantha Uthsava Bungalow in Venkatrangam Street ~ sad that the big spacious sprawling premises of Vasantha Uthsava Bungalow is no longer there……..


Today 13.3.2019, in the morning Sri Parthasarathi Perumal had purappadu to Thavana Uthsava bungalow – had thirumanjanam – evening purappadu inside the bungalow and then periya mada veethi purappadu.  It was Muthal Thiruvanthathi rendering in the veethi.  Here is a file photo of Perumal at Thavana uthsava bungalow.

தெப்போத்சவம் திருவல்லிக்கேணியில் முடிந்த உடனே தவனோத்சவம்.  இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதி மிக அழகாக பக்தர்களுக்கு அருள் பாலித்து தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளினார்.  சென்னையில் இந்த வருடம் சரியான மழையில்லை; தண்ணீர் கஷ்டம், தெருக்களிலே மக்கள்  தண்ணீர் குடங்களுடன் அலைகின்றனர் (இந்த குடங்கள் கூட பிளாஸ்டிக் தானே ! ~ உரக்கச் சொன்னால் உதைக்க வருவார்களோ !).  காலையிலேயே வெய்யில் சுட்டெரித்தது.  ஓர் குளிர்பதன வண்டி இருந்தால் நல்லது என தோன்றியது. 

பொய்கையார் , பூதத்தார், பேயார் -  எனும் மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள்.  இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும் மதிட்கோவல்  இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர். முதலில் பொய்கையாழ்வார் 'சுட்டெரிக்கும் சூரிய ஓளியை (நாம் பாடுபடுத்துகிறதே என்ற அதே கதிரவனின் கிரணங்கள்) கொண்டு பரம்பொருளான ஸ்ரீமன் நாரணனை தரிசித்து, ஆனந்தித்து, முதல் திருவந்தாதி நமக்கு அளிக்கிறார்.
perumal at thavana uthsava bungalow (file photo)

திருவோணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார் எளிமையான வார்த்தைகளில் நாம் எம்பெருமானை அடைய அளித்த அற்புத வரிகள் :

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்  சொன்மாலை,
இடராழி நீங்குகவே என்று.

இந்த அழகான பூமியே அகலாகவும், இப்புவியை  சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும், உஷ்ணகிரணனான ஸூர்யன் விளக்காகவும் கொண்டு, செஞ்சுடர்ச் சக்கரைக்கையனான எம்பெருமானது திருவடிகளில் வணங்கி முதல் திருவந்தாதி எனும் நூறு பாடல்கள் கொண்ட  பூமாலையை சாற்றி,  'இடர் ஆழி நீங்குக' (மேம்போக்காக நம்மை பீடித்துள்ள கழ்டங்கள் எல்லாம் விலகுக !)  -  ஆழ்வார் தம் மனத்து : (பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக.


Poigai Alwar – at Thirukkovalur, standing alongside Bootathazhwar and Peyazhvar – has darshan of Sriman Narayana with Earth as the lamp, the surrounding Ocean as the ghee (oil), the radiant Sun flame providing light – offering his Muthal thiruvanthathi songs as garland to the lotus feet of Chakrathari Sriman Narayana, seeking that the very sight of His would dispel all trouble. 

இப்படி காலை வெய்யிலில் ஸ்ரீ பார்த்தசாரதி தவன  உத்சவ பங்களா எழுந்தருளினார். பங்களா என்றால் நீங்கள் நினைக்கும் ஒரு பணக்கார வீடல்ல.  இது துளசிங்க பெருமாள் தெருவில் - மேட்டின் மேல் பெரிய  மண்டபமும், நடுவே மேடையும், இரண்டு கோரி எனப்படும் (சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளது போன்ற அமைப்பும்)  அக்காலத்தில் இதனுள் நிறைய வௌவ்வால்  இருக்கும் / படபடவென பறக்கும்  எனவே மேலே தைரியமனாவர்கள் மட்டுமே பிரவேசிப்பார்கள்.  மேடை சுற்றி அரளி போன்ற செடிகளும், மணற்பரப்பும், ஒரு பக்க வீடுகளும் என ஒரு அமைப்பு - அந்நாள் கிரிக்கெட் மைதானம்.    சிறுவர்களை டீமில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் எனினும் பக்கத்தில் நின்று, பந்து பொறுக்கி போட்டாலே ஆனந்தமாக இருக்கும்.  தவன உத்சவத்திற்கு பெருமாள் ஏளும் சிறப்பு இதற்கு.

இந்த மேடையில் தவணை கூராளத்தின் கீழ் எழுந்து அருளி, திருமஞ்சனம் கண்டருளி, இளைப்பாறி, மாலை பங்களா உள்ளேயே புறப்பாடு கண்டருளி, பின்னர் பெரிய மாடவீதி குளக்கரை எழுந்தருள்கிறார், நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்.

~ adiyen Srinivasa dhasan.









No comments:

Post a Comment