To search this blog

Sunday, September 9, 2018

Sri Parthasarathi Avani Amavasai purappadu 2018.


Sri Parthasarathi Avani Amavasai purappadu 2018.

ஆழ்வார் பாடல்களிலே தமிழும், அற்புத உரையும், பக்தியும் கமழும்.  : -
அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,*
செறிவென்னும் திண்கதவம் செம்மி*, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்*
பைங்கோத வண்ணன் படி. **

Sriman Narayana is unparalleled in mercy and in His benevolent qualities to all human beings .. as we keep describing His attributes, some may develop a Q on whether this exalted Lord is too far away from us ~ also whether or how can one reach unto Him ? 

Today (9.9.2018) is Avani Amavasai and Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu at Thiruvallikkeni.  In the purappadu, it was Peyalwar’s moonram thiruvanthathi rendering.


Mylai Peyalwar has the simple answer – he says close the doors of the senses and keep them under locks of discrimination.  Study deeply the revelatory works repeatedly trying to understand its inner meaning .. .. it is only a matter of time that the Ocean-hued Sriman Narayana will reveal Himself through Yoga.

எம்பெருமானை எங்கே ! எவ்வாறு ? என்ன பண்ணினால் காணமுடியும் ??

வேதங்களை ஓதியுணர்ந்து அவற்றின் பொருள்களையும் நன்குணர்ந்து, வெளிவிஷயங்களில் இந்திரியங்களைப் போகவொட்டாமல் தடுத்து அவனைக் காணப்புகுந்தால் காணலாம்.என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார்.

**  நம் சம்பிரதாயத்துக்கு ப்ரமாணமான  வேதத்தை என்றும் இடைவிடாது நன்கு ஓதி,  அறிவு என்னும் ஜ்ஞாநமாகிற, தாழ்ப்பாளையிட்டு ஐம்புலங்களையும்  வெளியே பரவ விடமால் தம்முள்ளே அடக்கி,  நன்றாக தியானிக்குமவர்கள்,  அழகிய நீல நிற கடலை போன்று  நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை தினந்தோறும்  காணும் பெரும்பேறு அடைவார்கள் என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)










No comments:

Post a Comment