For Sri Vaishnavaites,
the purpose of birth is kainkaryam to Emperuman and his devotees – One
needs to do kainkaryam at His abode ~ great it would be, when that happens to
be a Divyadesam – the great place sung by Azhwargal. The beautiful temple of Lord Srinivasa at
Thirumala Tirupathi in its present form owes a lot to the works of the greatest
Vaishnava Acharya – Sri Ramanujar. The very thought of Tirumala and
chanting the name of Lord of Seven Hills would cleanse our souls.
Hanumatha vahanams (Sri Parthasarathi & Sri Azhagiya Singar
at Thiruvallikkeni and on right Sri Govinda Rajar at
Kizh Thirupathi)
ஸ்ரீ இராமாயணத்திலே ஸ்ரீ
ஹனுமான் அற்புத பாத்திரம் ~ வாஹனங்களிலே நம்மை
கவர்வது கருட, ஹனுமந்த வாகனங்கள் ! ஆற்றல்மிகுதி,
கூர்மையான அறிவு, திண்ணமான எண்ணங்கள் – அமைதியான
மனம், எடுத்துக்கொண்ட செயலை செவ்வனே செய்து முடிக்கும் தீர்மை, காரியத்தில் உறுதி,
மனம் தளராமை, நம்பிக்கையின் முழுஉருவம் - இவை
அனைத்தும் அஞ்சனை மைந்தனான சிரஞ்சீவி ஹனுமான். கம்ப நாட்டாழ்வான், அனுமனை முதலில் வர்ணிக்கும்
போதே : எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான் ~ என்கிறார். வாயுபுத்ர அனுமானது
தோள்கள் மலைக்கூட்டத்தினும் உயர்ந்தும் வலிமையுடையனவாயும்
இருத்தலால் 'எம்மலைக் குலமும்' தாழ எனப்பட்டது; புகழ் ஆகிய சுமையைச் சுமந்தும்
தாழாமல் உயர்ந்த தோள் என்று மேலும் தோள்களின் சிறப்பை உணர்த்த, 'இசை சுமந்து எழுந்த' என அடைமொழி தரப்பட்டது
His Holiness Thirumalai Periya Kelviappan Sri Satakopa
Ramanuja Periya Jeeyar Swamigal ; His Holiness Thirumalai Ilaiya Kelviappan Sri
Govinda Ramanuja Chinna Jeeyar Swami &
Ekanki Sri Bharadwaj Balaji.
Thirumala has existed for
Centuries and Lord Venkateshwara provides to His devotees - riches, all wealth
and all goodness. Thiruvengadam, the
abode of Lord Balaji is the ‘Thilakam’ the shining glory of the whole
Earth. Lakhs of devotees of all ages, from all over the Country and from
other parts of the World throng to the hills, by walk, by vehicles of various
hues and wait in the queue for hours to have a glimpse of the Lord.
பேசும் இன் திருநாமம்
எட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,
பேசுவார்த் தம்மை
உய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,
வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தரும் உலகுக்கெல்லாம்,
தேசமாய்த்திகழும் மலை திருவேங்கடமடைநெஞ்சமே.
ஸ்ரீ வைணவர்கள் நலமந்தமில்லாதோர்
நாடு பெற அனுதினமும் அநுஸந்திக்கத் தக்கதும்
மிக இனிமையானதுமானது ' எட்டு எழுத்து திருவஷ்டாக்ஷர மஹா மந்திரம்: ஓம்
நமோ நாராயணாய:" ... இப்படி எம்பெருமான் பெருமைகளையும், அவனது திருநாமங்களை
மேன்மேலும் அநுஸந்திப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து, நமது பந்தங்களான ஸம்ஸார இதர பந்தங்களை அறுத்து உய்விக்கும் எம்பெருமான்
- மிக உகந்த மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற விசாலமான சோலைகளாலே சூழப்பட்டதும்,
எல்லாவுலகங்களுக்கும், திலகம்போன்று விளங்குவதுமான
- திருவேங்கடம் எனும் திருமலையை
மனமே! அடைந்திடு என்று நமக்கு அற்புத வழியை காட்டுகிறார் திருமங்கை மன்னன். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலையின் அடிவாரத்திலே
அமைந்துள்ளது - கீழ் திருப்பதியில் உள்ள, உயர்ந்த கோபுரத்தை கொண்ட திருப்பதி கோவிந்தராஜப்
பெருமாள் திருக்கோவில்.
At the foothills of most
divine Thirumala lies Thirupathi – having the ancient temple of Sri Govindarajar. . This temple was consecrated by
our Emperumanar but has existed perhaps even in earlier centuries too. Moolavar Sri Govindarajar is in reclining yoga nidra posture, facing east, keeping right hand under his head and left
hand straight over his body. Sridevi and Bhudevi nachimars are in sitting posture at the foot of Govindaraja.
This temple is remarkable
for its style of architecture, the tall and remarkable 7 storied gopuram with
11 kalasas – with sannathis for Sri Govinda Rajar, Sri Kalyana Venkateswarar,
Sri Parthasarathi in sitting posture, Sri Choodikudutha nachiyar, Sri Bashyakarar,
Sri Pundarikavalli thayar, Kaliyan, Koorathazhwan among others. In front of the
temple is our Acaryar Swami Manavala Mamunigal sannathi.
The son of Vayu – Hanumar is the epitome of great virtues ~ a
great character – a warrior, mightily powerful, whose body was as hard as a
diamond, whose speed equalled those of fastest flying eagles, who possessed
great wisdom, who could organize a group of roaming ones, who can jump hundreds
of miles, yet who remained at the feet of his Master, totally committed
thinking of their welfare alone – unassuming, yet capable of telling the right
things at the right moment – that is PavanaPuthra Hanuman. Sri Aanjaneyar is called 'siriya thiruvadi' - bearer of Lord Sri Rama ~ as he carried Rama on his broad shoulders during the slaying of Ravana asura.
In every divyadesam in Brahmothsavam, Hanumantha vahanam is enrapturing. In thondai mandalam, hanumantha vahanam will
be on the night of 5th day. On 26th May 2018, in the
ongoing Brahmothsavam at Tirupathi Sri Govinda Raja Perumal thirukovil – it was
day 6 and in the morning there was purappadu of Sri Govindarajar on Hanumantha
vahanam.
Was blessed to have darshan of Emperuman and here are some photos of
Garuda Sevai at Kizh Thirupathi.
~adiyen Srinivasa dhasan.
No comments:
Post a Comment