ஒரு பங்களாவின் கதை
!! ~ இன்று பூட்டப்பட்டு யாரும் கவனிப்பார்
இல்லாமல் இருக்கும் இடத்தின் பின்னே !!
Of the
many lanes and by-lanes, is Venkatrangam (Pillai) Street, running parallel to
the Beach Road. The future generation may not get to know that these
gates for many decades opened to have the Lord enter a big spacious sprawling
pleasant premises, replete with flower plants, little ponds, trees, a big well
with steps for walking inside. It was the ** Vasantha Uthsava Bungalow
** where Sri Parthasarathi would visit for Vasantha Uthsavam, Kodai
Uthsavam, Vijayadasami, 5th day and 7th day of
Brahmothsavam [of Sri Parthasarathi and Sri Azhagiya Singar] ~ have had
darshan of Perumal inside the sprawling premises around which there was so much
space. sadly, it is no longer there……..
பங்களா என்றவுடன் அரண்மனையோ
வேறு எதையோ கனவு காணாதீர். திருவல்லிக்கேணி
தனிலே 'பங்களா' என மூன்று இடங்கள் பிரசித்தம்.
ஒன்று துளசிங்கபெருமாள் கோவில் தெருவிலே (மஹாகவி சுப்ரமணிய பாரதியார் வாசித்த
வீதியாம்) - இரண்டு கோரிகள், ஒரு பெரிய கிணறு, நடுவில ஒரு மோடு - சுற்றிலும் வீடுகள் என அமைப்பு. இங்கே நாங்கள் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடினோம். மழை பொய்த்த நாட்களிலே கைரவிணி குளத்தினுள்ளும்
ஆடினோம். தவன உத்சவத்திற்கு பெருமாள் ஏளும்
சிறப்பு இதற்கு.
பிறிதொன்று பேயாழ்வார்
கோவில் தெருவினிலே - கோமுட்டி பங்களா என்றழைக்கப்பட்ட சரஸ்வதி பண்டாரம் கமிட்டி இடம். ஸ்ரீ நம்பிள்ளை சன்னதி பற்றி முன்னம் எழுதி இருந்தேன்.
நூறு வருடங்கள் முன், யோகி பார்த்தசாரதி ஐயங்கார் அவரது மனைவி யோகி சிங்கம்மா - பல்வேறு
ஸ்ரீவைஷ்ணவ கிரந்தங்களை புத்தக வடிவாக்கியபோது - அந்த துறை பண்டிதர்களுக்காக உருவாக்கிய
இடமாம் இது.
~ வசந்தம் என்பது
பருவம். வசந்த ருது எனவும் இளவேனில் எனவும் பெயர் பெற்றது இது. சித்திரை. வைகாசி இரண்டையும்
இளவேனில் என்பார்கள். வசந்தகாலம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம். தளிர்க்கும்,
பூக்கும் தாவரங்கள்,பாடித் திரியும் பறவைகள் என கூர்ந்து நோக்கினால் மகிழ்ச்சியாகவும்,
வியப்பாகவும் இருக்கும் காலம் இது.
வெங்கடரங்கம் பிள்ளை தெருவிலே
இருந்தது 'வசந்தோத்சவ பங்களா' .. .. .. சாதாரண நாட்களில் இங்கே உட்செல்ல முடியாது. பெருமாள் கோடை உத்சவம், வசந்த உத்சவம், பிரம்மோத்சவத்திலே
ஐந்தாம் நாள், திருத்தேரன்று இரவு திருமஞ்சனம்,
விஜயதசமி பார்வேட்டை நாட்களில் புறப்பாடு கண்டு அருளும் அற்புத இடம் இது. கச்சி மடத்து சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் 70களின்
ஆரம்பத்தில் இங்கே சில நாட்கள் தங்கி இருந்தார்.
வாசலில் இரு மருங்கிலும்
அழகாக வெட்டப்பட்ட செடிகள். உள்ளே ஒரு அழகான மண்டபம். சுற்றிலும் எம்பெருமானின் படங்கள் - நடுவே பெருமாள்
இளைப்பாறும் மண்டபம். மண்டபத்தின் வாசலில் இரு தடாகைகள் - அவற்றில் அல்லி மலர்கள்,
துள்ளி விளையாடும் மீன்கள், சுற்றிலும் நிழல் தரும் மரங்கள், நடைபாவி கிணறு என இறங்கி
குளிக்கவல்ல கிணறு. பெருமாள் எழுந்து அருளி
இருக்கும்போது - செடிகள் சூழ, பறவைகள் ஒழிக்க ரம்மியமாக கதை பேசுவது ஆனந்தம். பெருமாள் புறப்பட்டு, திருமஞ்சனம் எல்லாமே சிறக்கும்.
நிற்க ~ இவையெல்லாம் இனி
அனுபவித்தவர்கள் மனக்கண்ணில் மனதிலும் உள்ளவை.
2004 முதல் இவ்வுத்ஸவம் தடை பெற்று போனது.
இப்போது பெருமாள் வசந்தோத்சவத்தில் சிறிய மாட வீதி புறப்பாடு மட்டுமே கண்டு
அருள்கிறார்.
Thiruvallikkeni is replete with Festivities. After the Theppothsavam, came the Thavana Uthsavam; Pallava Uthsavam, Sri Rama Navami Uthsavam, then came Emperumanar Uthsavam and Sri Parthasarathi brahmothsavam. It would amaze one to understand the significance of each Uthsavam and the care with which our elders have designed them. There are palaces [bungalows] specially built for providing rest to Perumal on different occasions ~ at Thiruvallikkeni, there is Thavana Uthsava Bungalow situated in Thulasinga Perumal Koil Street, Komutti Bungalow in Peyalwar Koil Street and Vasantha Uthsava Bungalow in Venkatrangam Street ~ sad that the big spacious sprawling premises of Vasantha Uthsava Bungalow is no longer there……..
Now is the time for the 7
day Vasanthothsavam at Thiruvallikkeni Divyadesam and today 19th May
2018 is day 2. ‘Vasantham ‘ is a season – a pleasant one at that.
Vasantham corresponds to Spring season. While they have only 4 seasons in
the West, we have six seasons. Here it is Vasantha Ruthu also known as
‘Ilavenil’. Spring is the season of new beginnings. Fresh buds bloom, animals
awaken and the earth seems to come to life again. Farmers and gardeners plant
their seeds and temperatures slowly rise. The timing of these changes varies
depending upon location. Animals that spent the winter in hibernation come out
of their dens, while those that travelled to warmer regions return. Many
animals give birth in the spring.
Spring is a season. We
have seasons because the earth takes a year to move round the sun, which gives
us light and warmth, and because the earth tilts at an angle of 23.5
degrees. Spring is the season when one can see lots of flowers
blossoming. There existed a bungalow known as Vasantha Uthsava Bungalow
in Venkatrangam Street abound with many trees, fragrant flowers, ponds and a
big well [nadai bavi kinaru] which had steps for getting inside. All that
is gone. Till a few years back, Sri Parthasarathi Perumal used to visit
this Vasantha Uthsava Bungalow in the morning and ‘thirumanjanam’ would be
performed there. In the evening, He would return.
In the year 2004, after
Samprokshanam, when Perumal was to visit here on the 4th day, it was
found that the promenade deck had been razed to the ground and a pandal
erected. On the 7th day
of the Uthsavam ~ kuthirai vahana purappadu, Sri Parthasarathi did not go
inside the bungalow and sadly never after that. Now it is only ‘periya
mada veedhi’ purappadu.
The property owners were
keen on promoting the property for apartments leaving some portion for the
Perumal; a couple of years later, they constructed one mantap with entrance in
TP Koil 2nd lane. Meantime, there was litigation on the property between those
claiming to be owners and Temple authorities.
Without going into the merits of the case, it is sad for all
Bakthas that the beautiful sprawling premises where Sri Parthasarathi and Sri
Azhagiya Singar visited is no longer there and the grand Vasantha uthsavam got
stopped permanently. Perhaps with the property owned by the Temple,
Authorities can easily construct another mantap – may be at the erstwhile
premises where Post office functioned at Big Street, have a beautiful mantap,
surrounded by fragrant trees aka Nandavanam and conduct Vasantha Uthsavam and
many others there…………
எம்பெருமானுடைய வாத்ஸல்யகுணம் மற்றவற்றைவிட உயர்ந்து நிற்கும். நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்”
என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும் - இதோ பொய்கை
ஆழ்வாரின் அமுத வரிகள்
குன்றனைய குற்றஞ்
செய்யினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே,
- என்றும்
புறனுரையே யாயினும்
பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்
திரு.
ஆழ்வார் தன மனதுக்கு இடும்
ஆணை : என் நெஞ்சே, எப்போதும் தங்கமாக பளபளக்கும் பொன்னாழி உடைய சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இருப்பாயாக. அனுதினமும் மலைபோல் பெரிய
குற்றங்களைச் செய்தாலும், அவற்றையெல்லாம்
கூட எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் குணமாகவே திருவுள்ளம் பற்றுவன் ~ அவனடி அல்லது நமக்கு
உறைவிடம்தான் ஏது ????
Concluding with the
thoughts of Poigai Alwar who directs heart to think only about the lotus feet
of that Emperumal wielding the golden Chakkaram – Emperuman who likes so much
that He choses to ignore the mountainous amount of faults, yet only accept the
good deeds and direct us towards salvation.
From this moment, every moment, let our life be spent only on
contemplating Him, doing service unto Him and discussing His glorious deeds
only. Here are some photos taken during Vasantha
Uthsava purappadu today….
Adiyen Srinivasadhasan (
S. Sampathkumar)
19th May 2018.
No comments:
Post a Comment