To search this blog

Sunday, April 16, 2017

Hanumantha Vahanam 2017 : எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான்

Today 16th Apr 2017  is the 5th day of Brahmothsavam at Thiruvallikkeni.  In the morning it was ‘NachiyarThirukolam’ and in the evening it was ‘Thiruvadi – Hanumantha vahanam’….. remember Lord Rama fought the battle sitting astride Hanumar.



ஆற்றல்மிகுதி, கூர்மையான அறிவு திண்ணமான எண்ணங்கள் – அமைதியான மனம், எடுத்துக்கொண்ட செயலை செவ்வனே செய்து முடிக்கும் தீர்மை, காரியத்தில் உறுதி, மனம் தளராமை, நம்பிக்கையின் முழுஉருவம் -  இவை அனைத்தும் அஞ்சனை மைந்தனான சிரஞ்சீவி ஹனுமான்.  வாலியினால் விரட்டப்பட்ட சுக்ரீவன் நாட்டை இழந்து திகைத்து மனம் குழம்பி கலங்கி நின்ற போது, சரியான அறிவுரை வழங்கி உடன் இருந்தவர்,   இராமரிடம் சென்று அவரது நட்பை சுக்ரீவனுக்கு பெற்றுதந்தவர்.


கவிச்சக்கரவர்த்தி  கம்பர் கிஷ்கிந்தா காண்டத்தில், அநுமானைப் பற்றி முதலில் குறிப்பிடுகையில் - "எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான்."   எந்த மலைக்கூட்டமும், தாழ்வுறும்படி,  புகழைச் சுமந்து கொண்டு,  உயர்ந்த தோள்களை உடையவனாகிய அனுமன் என்கிறார்.  பிறகு, ஸ்ரீராமபிரான், இலக்குவனிடத்தில்,  அனுமனைப்பற்றி ;  ''ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும், என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்'  என உரைக்கிறார்.  {அனுமனை விடச் சிறந்த குணங்களை உடையவர்கள் வேறு யாரும் இல்லை’  என்று உணர்ந்த ஸ்ரீராமபிரான்,  : ‘திறமை, முழுமை, கல்வி, அதனால் வரும் பணிவு, அறிவு என இவனிடம் இல்லாத குணங்களே கிடையாது’  என்று லட்சுமணனிடம்  உயர்வுற உரைக்கிறார். 



இலங்கையை நோக்கி பாய்ந்து சென்றபோது, மைனாகமலை குறுக்கிட்டு – இளைப்பாறி உண்டு செல்லுமாறு கூற – அனுமன் முகமலர்ச்சியுடன்"  என்தலைவன் இராமபிரான் கருணையினால் எனக்குப் பயணத்தில் களைப்பு ஏற்படாது ~ நான் மேற்கொண்டசெயல் முடியும்வரை எதனையும் உண்ணுவதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்"  என்றானாம். !!   தான் மேற்கொண்ட வேலை முடியும்வரை வேறுஎதையும் எண்ணாத திண்ணமும் சிறப்பும் வாய்ந்தவர்  ராம பக்த ஹனுமான்.  பெரியாழ்வார்வார்த்தைகளில்

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர்பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும் மலரவைத்துத் தாமோதரன் தாங்குதடவரைதான்
அடங்கச்சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ்பாடித் தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே.

கிருஷ்ணபகவான் ஆயர்களை காத்த கோவர்த்தனகுன்றத்தின் மீது மரங்களின் காய்களையும் கனிகளையும் உண்டு வாழும் மந்திகளும் கடுவன்களும் தங்கள் குட்டன்களைத் (குழந்தைகளை) தூங்கவைக்கும்போது தங்கள் முன்னோனாகிய அனுமனின் வீரதீரகதைகளைச் சொல்லித்தூங்கவைத்தனாவாம் !!


The son of Vayu – Hanumar is the epitome of great virtues ~  a great character – a warrior, mightily powerful, whose body was as hard as a diamond, whose speed equalled those of fastest flying eagles, who possessed great wisdom, who could organize a group of roaming ones, who can jump hundreds of miles, yet who remained at the feet of his Master, totally committed thinking of their welfare alone – unassuming, yet capable of telling the right things at the right moment – that is PavanaPuthra Hanuman – Aanjaneya, who is called ‘thiruvadi’ – bearer of Lord Rama – who carried Rama on his shoulders during the war in which the demon was killed. The very thought of Sri Hanuman brings to mind ~ his unparalleled devotion for Lord Ram and unrivalled physical strength. Perhaps this is one reason why Hanuman is quite often associated with celibates, wrestlers and bodybuilders. 

When Sukriva offered to help Lord Rama in search of Sitadevi, there were thousands of Vanarars in his Sena ~ there were old, wise, powerful, youthful, and all others – yet it was Hanuman who was preferred to go to Lanka; the wise Zambavan praised his qualities and encouraged him to jump across the Ocean ~ He accomplished the task manfully and tested the strength of the forces of Lanka too… such was his wisdom and power of accomplishment.  Even Sitadevi nursed a doubt when she stated that only three had the power of crossing the mighty Ocean ~ the son of Vainatheyan [Periya Thiruvadi Garudar known for his power of flying]; Lord Vayu and the most wise Hanuman – she wondered how the vast multitude in the Sena of Sukriva could cross the Ocean ?

Aanjaneyar with all his might,  always exhibited the rare qualities of kindness, humility, and deep attachment to Lord Rama.  The selfless spirit  of Hanuman  was rewarded by Lord Ram by stating that ‘whenever I am remembered, people will remember you too.’

Sri ParthaSarathi Swami in His resplendent splendour enraptured His devotees with darshan on  ‘HanumanthaVahanam’  which was a great sight to behold……..


AdiyenSrinivasadhasan.  








No comments:

Post a Comment