To search this blog

Monday, August 22, 2016

Thiruvallikkeni Sri Azhagiya Singar Samprokshanam 2016

Oh .. what a grand day today ~ 22nd Aug 2016 – today is Maha Samprokshanam at Thiruvallikkeni.   At Thiruvallikkeni, is the famous divyadesam of Sri Parthasarathi dating back to 8th century and beyond.  You would remember that in June 2015 too there was samprokshanam.  Today it was for the shrines of Shri Azhagiya Singar [Yoga Narasimhar]; Sri Varadha Rajar; Thirumazhisai Alwar and Sri Anjaneyar at East Tank Sq. St.

The consecration was performed as per the Vaikhanasa Agama and thousands of devotees assembled to worship the consecration, have darshan of the new looking Vimanas and Gopurams. 

வானையுந்துமதிள்சூழ் திருக்கண்ணபுரம்; தானயந்தபெருமான் சரணாகுமே.

திருவரங்கத்து மதில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. சுவாமி நம்மாழ்வார் : திருக்கண்ணபுரம் திவ்யதேசத்தின் மதில்களை பல்வேறு விதங்களில் உயர்த்தி கூறுகிறார்.    ஓரிடத்திலே மதில்கள் ஆகாசத்தை அளாவி இருப்பதாகவும் சிறப்பிக்கிறார்.  திருவல்லிக்கேணி மாட வீதிகள்  இந்நாளைய வாகனங்கள் இல்லாமல் பார்க்க ரம்மியமாக இருக்கும். 

இன்று  [22.8.2016] ஓர் அற்புத நாள்.  இன்று திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் - அருள்மிகு அழகிய சிங்கர், வரதராஜர்; திருமழிசை ஆழ்வார் மற்றும் கிழக்கு குளக்கரை திருவடி சன்னதி - ஸம்ப்ரோக்ஷணம்.

யாகசாலை; வேத பாராயணம் மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்த சேவைகள் இன்று காலை முடிவுற - பெருமான்கள் - திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் கும்பத்துடன் நடந்துவர புறப்பாடு கண்டு அருளி காலை சுமார் பத்து இருவது மணியளவில் ஸம்ப்ரோக்ஷணம் விமர்சையாக நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் இவ்வைபவத்தை கண்ணுற்று, இன்புற்றனர்.

Here are some photos of the samprokshanam that occurred this morning at around 10.20 am.  


Adiyen Srinivasa dhasan









No comments:

Post a Comment