To search this blog

Tuesday, August 16, 2016

* Alavandar Sarrumurai * தூய்நெறிசேர் எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் ஆளவந்தார் சாற்றுமுறை

இன்று (16.08.2016) ஆடி  மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை**


ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா?

Wonder what the description is all about ~ it is the immortal writing of Kalki ‘Ponniyin Selvan’ novel.  The lake spoken about is 235 km away from Chennai, yet becoming its lifeline, supplying roughly 50 to 180 million litres of water to the city every day.  The lake owes its existence to Chozha  prince Rajaditya  who in  the 10th  century  assigned his men the task of excavating this tank, to collect the surplus waters of the Kollidam River. In the 1830s,  Arthur Cotton, the engineer who later harnessed the waters of the Krishna and Godavari, studied the tank in detail. He noted that there was no serious defect in the tank (this, 900 years after it was constructed) .. in recent decades much water has flown in concrete pipes becoming hotly debated corruption topic. 
Every summer gives Chennai residents -  trouble not only of sweltering heat but of the water shortage to the residents of Chennai.  Though there are four reservoirs of Poondi, Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for drinking water needs of Chennaites, Veernaam lake  supplements daily water supply to the city.  The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.  

Sri Vaishnavaites have more to know about this lake. The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.  It is here that our Acharyars Nathamunigal and later Sri Alavanthar were born. Yamunaaryar [Alavandar] born in Aadi Uthirada nakshathiram, was a genius – a child prodigy known for his prowess  of eka-santha–graha (remembering forever by learning only once). He was known for his sparkling intelligence, didactic logic and exceptional devotion to Sriman Narayanan.  His defeating a much learned Akkiyalvan is very famous.  After the debate, the Queen hailed Yamunar as 'Alavandar'-' one who came to rule /  save me'.

It was due to the ceaseless efforts of Sri Rama Mishra (Acharyar Manakkal nambi), the desciple of Uyyakkondar that Yamunacharyar was initiated back to the spiritual life. Sri Rama Misrar initiated Yamuna into the ultimate truths and passed to him the spiritual treasures bequeathed to him by Sri Nathamuni. After the initiation, Yamuna became the leader of Visistadvaita Vedantins and settled at the holy place of Thiruvarangam. He gave our Sampradhayam, priceless treasure-trove of 8 works of which most important are the : Chatusloki on Pirattiyar; Sthothra Rathinam extolling Emperuman; Sri Geethartha Sangraham, which formed the basis for Udayavar’s Gita Bashyam. He identified and gave us the Greatest of Acharyas – ‘Sri Ramanujar’ as he spontaneously called Udayavar ‘He is the First of all -   'ஆ முதல்வனிவன் [aa muthalvan ivan]’


ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார்சேனை முதலியார்ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார், மணக்கால்நம்பிஅடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்)ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர். 

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர்.  திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்'  யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். 

நிதியைப் பொழியும் முகில்என்று*  நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதி பெற்றுடைய*  இராமானுசனென்னைக் காத்தனனே.

-  மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று,  இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார்.

நாதமுனிகளும்யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில்  உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார  திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு     'ஆ முதல்வனிவன்என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம். 


ஆளவந்தார்  அருளிச் செய்த நூல்கள் "  எட்டு ""   -   இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகிசித்தித்ரயம்ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.

Here are some photos taken during today’s purappadu of Alavandar with Sri Parthasarathi Perumal  at Thiruvallikkeni divyadesam


Adiyen Srinivasadhasan                                                                                 16th Aug 2016.

No comments:

Post a Comment