To search this blog

Thursday, May 2, 2013

Kannadi Pallakku ~ Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - day 9


On the  Ninth day evening of the Sri Parthasarathi Swami Brahmothsavam, at Thiruvallikkeni divyadesam  [2nd May 2013]it is  – ‘Kannadi Pallakku’  – the palanquin embedded with beautiful mirror work.   There was a big, captivating, eye-capturing palanquin made of glass – rather with glasses fitted all over and with chandelier like things suspended on its arms.  Slowly it faded into oblivion as it was not maintained properly and glass pieces started falling as it was not maintained in the proper manner. 


For a few years, when there was no ‘Kannadi Pallakku’, Sri Parthasarathi had purappadu on ‘punniyakodi vimana chapparam’.  Then a newly made one – looking differently than the earlier one was submitted.  Now there is purappadu in the ‘kannadi pallakku’ – literally the palanquin made of glass.

திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பிரம்மோத்சவம் முடியப் போகிறது. ஒன்பதாவது நாள் ஆன இன்று மாலை 'கண்ணாடி பல்லக்கு'. 

"மின் இலங்கு திரு உருவும் பெரிய தோளும், கைத்தலமும், அழகான திருக்கண்களும்' உடைய எங்கள் பெருமாளுக்கு எதை சேர்வித்து மேலும் மிளிரச் செய்வது !  முத்துப் போன்றவனும்  ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனும் ஆனா எம் முகில் வண்ணனை பல வாகனங்களில் சேவித்த நமக்கு இன்று 'பெருமாள் கண்ணாடி பல்லக்கில் சேவை சாதித்து அருளினார் 
கண்ணாடி கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது.  முக்கியமாக பளபளக்க வல்லது. இன்று ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். கைரவிணி குளக்கரையினிலே, தெற்கு குளக்கரை தெருவில் ஒரு மண்டபம் உள்ளது.  இது கண்ணாடி பல்லக்கு மண்டபம்  என்றே வழங்கப்படுகிறது. பல வருடங்கள் இங்கே 'அழகான கண்ணாடி பல்லக்கு' வைக்கப்பட்டு இருந்தது.  பெரிய பல்லக்கு - முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன், பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும் கண்ணாடிகள் உடன் அழகாக இருந்தது இது. இதில் இருந்த முப்பட்டகங்கள் பிரமிக்க வைக்கும்; ஒளிக்கற்றைகளை சிதறடித்து வண்ண ஜாலங்கள் செய்யும்.  
உத்சவத்துக்கு சில மணி நேரங்கள் முன்பு, இந்த மண்டபத்தில் இருந்து படோபடமாக ஏளப்பண்ணப்பட்டு  கோவில் வாகன மண்டபத்தை வந்து சேரும்.  காலப்போக்கில் கண்ணாடிகள் உதிர்ந்து, பல்லக்கு பொலிவு இழந்து இந்த புறப்பாடு நின்று போனது.  பெருமாள் ஒன்பதாம் உத்சவம் இரவு, புண்ணியகோடி  விமானத்தின், விமானம் இல்லாமல் சப்பரம் மட்டும் உள்ள அமைப்பில், சில வருடங்கள் ஏளினார்.  இந்த மண்டபம்  அலுவலக அதிகாரிகள் கார் நிற்கும் இடமாக மாறிப்போனது வருத்தமே!  

சில வருடங்கள் முன் ஒரு பக்தர்      (திரு. என் சி ஸ்ரீதர்) புதிதாக மற்றொரு கண்ணாடி பல்லக்கு சமர்ப்பித்தார்.  கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ பார்த்தசாரதி   பெருமாள், எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்க, சிறப்பு நாதஸ்வர கச்சேரி, வாண வேடிக்கைகளுடன்,   விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது.  இந்த ஏற்பாடுகள் திரு N.C. Sridhar  அவர்களால் செய்யப்பட்டவை. புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 









1 comment:

  1. What time will kannaadi pallakku start from the temple and do the rounds on Monday, 7th May, this year?
    Thanks,

    ReplyDelete