To search this blog

Friday, May 24, 2013

Swami Nammazhwar Sarrumurai Purappadu at Thiruvallikkeni.

Swami Nammazhwar Sarrumurai Purappadu at Thiruvallikkeni.- 2013

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்*
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர்உண்டோ*
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ*
ஒருபார் தனில் ஒக்குமூர்**

Great words of our Acharyar Sri Manavala Maamunigal when hailing the birth of Swami Nammazhwar.   Today 24th May 2013,  is a great day for all of us- today is  ‘Vaikasi Visakham’ –  commemorating the birth celebrations of  Swami Nammazhwaar.  Acharyan Manavalamaamunigal in his ‘Upadesa Rathinamalai’ says :   there is no other day matching Vaikasi Visakam; there is none matching Sadagopar; there is nothing equivalent to ‘Thiruvaimozhi’ and there is no place on earth which can be treated on par to Thirukurugai – the birthplace of Swami Nammalwar.

The Greatest among Alwars preached to us – “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,” – that when we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we must do service by being with HIM throughout our life and do as a slave would serve his master.  

Swami Nammazhwaar was born on the auspicious poornima day of Tamil Vaikasi month in Visakha nakshathiram at Thirukurugur, now famously known as ‘Azhwar Thirunagari’.  He was born to Kari and Udayanangai. Nammazhwaar has greatly contributed and his works are Thiruvaimozhi (1102 verses), Thiruvirutham (100), Thiruvasiriyam (7) and Periya Thiruvanthathi (87)

On 24th May 2013,  Azhwar’s sarrumurai was celebrated in a grand manner at Thiruvallikkeni and in the evening there was the Grand purappadu of Sri Parthasarathi with Swami Nammazhwar.  Some photos taken during the purappadu are here: 
வைகாசி விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும்  (இவர் திருவண்பரிசாரத்தில் பிறந்தவர்) - நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம். சடம் என்றால் காற்று.  வாயுவை முறித்ததனால் சடகோபன் என பெயர் பெற்றார்இந்த சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மரப்பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார்.
திருக்கோளூர் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளிய .  மதுரகவியாழ்வார் ஒரு சமயம்  அயோத்தியில் இருந்து  தென் திசை நோக்கி  வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத் தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு  வந்ததும் மறைந்து விட்டது. மதுரகவிகள் இவ்வாறாக 16 வருடங்கள் பிறகு  ஆழ்வாரது ஞானத்தை வெளிப்படுத்தி அவரது திண்ணிய சீடராக திகழ்ந்தார்.
திருவாய்மொழி திராவிட வேதசாகரம் என போற்றப்படுகிறது.  ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தையும் அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்ய வேண்டியதையும்  மிக சிறப்பாக அழுத்தமாக ஆழ்வார் நிலை நாட்டியுள்ளார்.  இதோ இங்கே ஒரு துளி

கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,* 
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. 
குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து, வள்ளல் என்றும் உயர்ந்தவன் என்றும் போற்றுவதால்  நீங்கள் பெறும் பலன் சிறிதுமில்லை. உங்கள் வாய்மையை இழப்பதை தவிர;  நீங்கள் பாடுகிற துதிமொழிகளுக்கு  மிகப்பொருத்தமானவன் - , பக்தர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும் எவ்வித குறைகளும் இல்லாதவன் ஆன மிக சிறப்பான நீலமணி வண்ணனுமான மணிவண்ணன் மட்டுமே; நம் நா அவனை மட்டுமே எவ்வெப்பொதும் துதி பாட வேண்டும் !
O Mankind and Poets, there is absolutely no point in wasting your efforts in praising those who are only trash.  Come and sing in praise of the Supreme blemishless Manivannan, the most perfect, most benevolent Lord who only is capable of giving us everything in His own sweet will.  Our voice should raise only in praise of Him..
ஆனதிருவிருத்தம் நூறு மருளினான் வாழியே
ஆசிரியமேழு பாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதி யெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழியாயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே
வானணியும்மாமாடக் குருகைமன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர் கோனவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே.

With regards – S. Sampathkumar.

No comments:

Post a Comment