Purattasi Sanikkizhamai at Thiruvallikkeni - Azhagiya Singar
Purappadu
The tamil month of
Purattasi has a pride of place. Devotees throng Vishnu temples, especially
Tirupathi. In this month, there will be the annual Brahmothsavam at
Tirupathi – it has commenced already and today 22nd Sept. 12 is the 5th
day of the Uthsavam.
Devotees in large numbers
visit Thiruvallikkeni Divyadesam. Every Saturday of the month of
Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya
Singar. Today, being the 1st Saturday of Purattasi, the
Purappadu was grand.
In the Purattasi month,
on the ascending Prathamai day starts the 9 day Navarathri
celebrations. This year Navrathri starts on 29th day of
Purattasi [15th Octobr 2012] During Navarathri, there will be
purappadu of Vedavalli Thayar inside the temple.
Here are some photos
taken during the Azhagiya Singar purappadu today.
திருவல்லிக்கேணி "ஸ்ரீ
அழகியசிங்கர்" புரட்டாசி சனிக்கிழமை புறப்பாடு
புரட்டாசி
மாதம் ஒரு புனித மாதம்; பக்தர்களுக்கு சிறந்த மாதம். எல்லா ஸ்ரீவைஷ்ணவ தலங்களிலும்
பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவேங்கடவன்
இப்புவியில் அவதரித்த மாதம் ஆனதால் பக்தர்கள் திருமலை திருப்திக்கு திரளாக சென்று வணங்குகின்றனர். புரட்டாசி மாதத்தில் திருமலையில் "பிரம்மோத்சவம்"
சிறப்புற நடைபெறுகிறது. மேலும் புரட்டாசி மாதத்தில்தான்
"நவராத்திரி" வருகிறது. புரட்டாசி
வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழா. இப்போது திருமலையில் பிரம்மோத்சவம் நடைபெற்று வருகிறது.
இன்று 22.9.2o12 ஐந்தாம் நாள் உத்சவம்.
திருவல்லிக்கேணி
திவ்ய தேசத்திலும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள்
கூட்டம் அலை மோதும். முக்கியமாக சனிக்கிழமைகளில்
பக்தர்கள் பெருமளவில் சேவிக்க வருகிறார்கள்.
புரட்டாசி சனி நாட்களில் மாலையில் "ஸ்ரீ அழகியசிங்கர்" வீதி புறப்பாடு
நடைபெறும். இன்று 22.09.2012, முதல் சனிக்கிழமை ஆனதால் சிறப்பான புறப்பாடு நடைபெற்றது.
புரட்டாசி
29 [Oct 15] முதல் நவராத்திரி ; நவராத்திரி
எல்லா நாட்களிலும் சாயம், வேதவல்லி தாயாருக்கு கோவில் உள்ளே புறப்பட்டு உண்டு. இந்த விமர்சையான புறப்பாட்டில் சிறிய திருமடல் சேவிக்கப்படுகிறது.
இன்று
அழகிய சிங்கர் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட
சில படங்கள் இங்கே :
அடியேன்
ஸ்ரீனிவாச தாசன்
No comments:
Post a Comment