To search this blog

Monday, July 16, 2012

Thiruvallikkeni Thiruvadipura Uthsavam - Day 2


15.7.2012 திருவல்லிக்கேணி திருவாடிப்பூர உத்சவம் இரண்டாம் நாள்.

During Thiruvadipuram, on all days there is purappadu of Sri Andal in the evenings.  Day 2 fell on Ekadasi day and hence there was the grand purappadu of Sri Andal alongwith Sri Parthasarathi. Here are some photos taken during the purappadu 

ஆழ்வார்கள் பாடல்கள் - பைந்தமிழுக்கும் பக்தி இலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன ! -  ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழியில் வரும் வரிகள் இவை " தொழுதுமுப்போதும் உன் அடி வணங்கித் தூமலர் தூய்த்தொழுதேத்துகின்றேன், பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப்" -  :  காலை, சாயம், உச்சி என மூன்று காலங்களிலும் பெருமாளின் திருப்பாத கமலங்களிலே நல்ல மனமுள்ள மலர்களை தூவி, பெருமாளையே  ஆச்ரயித்து, அவனடிகளையே தொழும் ஆண்டாளின் பக்தி பிரமிக்க வைப்பது அல்லவா ! பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கு பணி செய்து வாழ்தலே, நமக்கு எல்லா நற்பயன்களையும் தரும்.

இன்று 15/7/2012 இரண்டாம் நாள் - ஏகாதசி சேர்ந்து வந்ததால் ஆண்டாள் ஸ்ரீ பார்த்தசாரதியுடன் பெரிய மாட வீதி புறப்பட்டு கண்டு அருளினார்.  வீதியில் பூதத்தாழ்வாரின் 'இரண்டாம் திருவந்தாதி" சேவிக்கப் பெற்றது. 

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன். 








No comments:

Post a Comment