To search this blog

Monday, July 2, 2012

Azhagiya Singar Brahmothsavam Day 4 (Eve) - Chandira Prabhai

திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் - நான்காம் நாள் - இராத்திரி புறப்பட்டு - சந்திரப்பிரபை 

On the 4th day Evening it was Chandra Prabhai for Sri Azhagiya Singar.  1st July 2012 was ‘Aani anusham’ – the birth star of our Acharyar Nadhamunigal.  He was born at Kattumannar Kovil which has a big lake and known as Veeranarayanapuram after the presiding deity ‘Veera Narayanar’.  The lake veeranam has its name thus.

In the evening Nathamunigal had purappadu with Lord Azhagiya Singar in Chandraprabhai.

நான்காம் நாள் காலை பெருமாள் சூர்யப் பிரபையிலும் மாலை, குளிர்ச்சியான வெள்ளி நிறமுடைய சந்திரப் பிரபையிலும் புறப்பட்டு கண்டு அருளினார்.

1-7-2012 அன்று 'ஆனி அனுஷம்' - நம் ஆசார்யரான 'நாதமுனிகள்' சாற்றுமுறை.  ஸ்ரீமந்நாதமுனிகள் ஆனி அனுஷத்தில் அவதரித்தார்.  திருமகள் கேள்வனிடமிருந்து தொடங்கும் வைணவ ஆசார்ய பரம்பரையில் நடுநாயகமாய்த் திகழ்பவர் ஸ்ரீமந்நாதமுனிகள்.  சோழ தேசத்தில் வீரநாராயண புரத்தில் (காட்டுமன்னார்கோயிலில்) (கி.பி. 823) சோபக்ருத்-வருடம், ஆனி மாதம், 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அனுஷ நக்ஷத்ரத்தில் இவர் அவதரித்தார். இந்த வீரநாராயணபுரமே இந்நாளில் வீராணம் என்று மருவி உள்ளது. 

இவரது இயற்பெயர் -  ஸ்ரீரங்கநாதன்;  யோகாப்யாஸம் கைவந்தவராகையாலே ஸ்ரீரங்கநாதமுனிகள் என்றும், சுருக்கமாக நாதமுனிகள் என்றும் வழங்கப்பட்டார்.  இவரே அரையர் சேவையின் முன்னோடி. பன்னிரு ஆழ்வார்கள் அருளிச்செய்த 'நாலாயிர திவ்யப்ரபந்தத்தை' தொகுத்து,  ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும்  அனுசந்தானம் பண்ணும்படியான அறிய செயலை செய்த மகான் இவர்.  

திருநக்ஷத்திர வைபவத்தன்று ஸ்ரீ அழகியசிங்கருடன், நாதமுனிகள் புறப்பாடு கண்டு அருளினார்.  திருவல்லிக்கேணியில் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட படங்கள் 
இங்கே :  



அடியேன் - ஸ்ரீனிவாச தாசன். 

No comments:

Post a Comment