To search this blog

Sunday, August 14, 2011

Thiruvallikkeni Gajendra Moksham Purappadu - Parthar Aadi Garuda Sevai


13th Aug – 28th day in the month of Aadi – Thiruvonam Nakshathiram – Full moon day was a very auspicious day – the day when the elephant Gajendra got moksham (salvation).  Gajendra moksha  is a Puranic legend from Bhagavata Purana.   Lord Maha Vishnu himself  came down to earth to protect Gajendra(elephant) from the death clutches of Makara (Crocodile).

Gajendra was the King of elephants, was attacked and caught by a crocodile and death seemed imminent.  Gajendra had been rendering service to the Lord by offering Lotus and when he appealed to God to protect him, Maha Vishnu appeared on Garuda vahanam and saved the elephant by killing the crocodile with his ‘Chakram’.   It also explains that one who falls under the divine feet of Lord seeking salvation will surely be taken care of. 

In the sacred divyadesam of Thiruvallikkeni, the Emperuman is in five roopams – Lord Parthasarathi (Lord Venkata Krishnar is the Moolavar); Lord Azhagiya Singar; Lord Rama, Lord Ranganatha and Lord Varadharaja.  Varadharaja Moolavar is depicted as on “Garuda vahanam” which is very unique. 

Here are some photos taken during the Garuda vahana purappadu of Lord Parthasarathi on the evening of 13th Aug 2011. 


***************************
13th Aug - ஆடி மாதம் 28  திருவோணம் நக்ஷத்திரம் கூடிய பௌர்ணமி நன்னாள் - இன்று கஜேந்திர மோக்ஷம் - பெருமாள் ஆனைக்கு அருள் செய்த புனித நிகழ்ச்சி. 
திருவல்லிக்கேணியில் ஐந்து திவ்யதேச எம்பெருமான்கள் எழுந்து அருளி உள்ளனர்.  ஸ்ரீ பார்த்தசாரதி (மூலவர் வேங்கட கிருஷ்ணன் திருநாமத்துடன்) ; ஸ்ரீ ராமர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ தெள்ளிய சிங்கர் எனும் அழகிய சிங்கர் (மூலவர் : யோகா நரசிம்ஹர் திருகோலத்தில்) மற்றும் வரதராஜ பெருமாள் எழுந்து அருளி அருள் பாலிக்கின்றனர்.  வரதராஜர் மூலவர் வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லாத படி - கருட வாஹனத்தில் சேவை சாதிக்கிறார். 
இவரை திருமங்கை மன்னன் :

மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த  *
கானமர் வேழம் கையெடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ *
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை * 
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.
--- என மங்களாசாசனம் செய்துள்ளார். 
முன்னொரு நாள் கஜேந்திரன் எனும் யானை தினமும் எம்பெருமானுக்கு தாமரை மலர் கொணர்ந்து சேவை செய்து வந்தது. ஒரு நாள்  முதலையிடத்தில் சிக்குண்ட போது  (வேழம் - யானை; கரா - முதலை) - எம்பெருமானே சரணாகதி என 'ஆதிமூலமே' என பிளிற, உடனடியாக பெருமாள் கருட வாஹனத்தில்   கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர்  தீர்த்து மோக்ஷம் அளித்த வைபவமே "கஜேந்திர மோக்ஷம்" 

அல்லிக்கேணியில்  மாலையில் ஸ்ரீ பார்த்தசாரதி, மிக அழகாக கருட வாஹனத்தில் சேவை சாதித்து 'கஜேந்திர மோக்ஷம்' அளித்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :





அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

No comments:

Post a Comment