On the day of Thiruvadipuram (02/08/2011) – At the Thiruvallikkeni divyadesam, there was the grand purappadu of Andal with Sri Parthasarathi. Here are some photos taken during the purappadu.
நேற்று திருவாடிப்புரம் - ஆண்டாள் அவதரித்த புண்ணிய தினம். ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சொல்லழகும் பொருள் அழகும் சிறப்புற மிளிர்பவை. "நம்மையுடைவன் நாராயணன்" என மானுடவரான நாம் 'பரம்பொருளின் உடமை' என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.
நாச்சியார் திருமொழியில் பத்து பாடல்களில் 'வெண் சங்கத்தின்' பெருமையை சிறப்பாக பாடி உள்ளார். அதில் ஒன்று :
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறி த் தீயவசுரர்
நடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே"
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறி த் தீயவசுரர்
நடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே"
திருமாலின் கரத்தில் எப்போதும் இருக்கும் சங்கம். (சக்கரம் கூட பெருமாளை விட்டு அகலும்; சங்கு எப்போதும் அவனிடத்தே குடி கொண்டிருக்கும்} ; சங்கம் கடலில் பிறந்ததாம்; பஞ்சசனன் என்ற அரக்கன் உடலில் வளர்ந்ததாம். பிறப்பையும் வளர்ப்பையும் கவலைப்படாமல் ஊழிக் காலத்தை நிர்ணயிப்பவனான மணிவண்ணனின் கைதலங்களில் குடி புகுந்து, அசுரர்களை அழிப்பதற்காக முழங்கும் பேறு பெற்றது" என பாராட்டுகிறார்.
02/08/2011 திருவாடிப்புரம் அன்று இரவு 08.30 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளும் ஆண்டாளும், ஒரே கேடயத்தில் மிக அழகாக புறப்பட்டு கண்டு அருளினார். பார்த்தர் சிறப்பான காசு மாலை அணிந்து இருந்தார்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
No comments:
Post a Comment