To search this blog

Wednesday, August 24, 2011

Sri Jayanthi 2011 - celebrating the birth of Lord Krishna



Krishna Jayanthi, Janmashtami, Gokulaashtami, Sri Jayanthi and more – all various names celebrating the birth of Bhagwan Lord Sri Krishna in this Universe on the Ashtami (8th day of dark half of Krishna paksha) on the Rohini Nakshathiram.  This year, the festival fell on 23rd Aug 2011.

At Thiruvallikkeni Sri Parthasarathi Swami temple, His birth was celebrated at around 9 pm on 23rd and on the morning of 24th there was purappadu of Lord Sri Krishna dancing on kalinga.  Evening there was purappadu of Lord Parthasarathi in Punnai tree vahanam.  On this occasion, ‘uriyadi’ – the game of hitting the hanging gifts with sticks when others fiercely throw water is played.

Here are some photos of Lord Krishnar, Lord Parthar, Uriyadi, and Sri Parthar with flute and Lord Krishna returning to the temple from the vahana mantap.

**************************





திருவல்லிக்கேணியில் வாழ்ந்த மகாகவி சுப்ரமணிய பாரதியார் - கண்ணனது பக்தர்.  அவர் பாடுகிறார் : 
" கண்ணன் திருவடி, எண்ணுக மனமே; திண்ணம் அழியா, வண்ணம் தருமே;
தருமே நிதியும், பெருமை புகழும் ; கருமாமேனிப் பெருமானிங்கே"

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சரணாகதி அல்லது பெருமாளின் திருவடிகளில் பிரபத்தி செய்வதே உகந்தது.  நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் மிக அழகாக

" கண்ணன் கழலினை, நண்ணும் மனமுடையீர் *
எண்ணும் திருநாமம், திண்ணம் நாரணமே *

என சாற்றினார்.  கண்ணன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் எண்ணத்தில் கொள்ள வேண்டிய திருநாமம்,  நிச்சயமாக  நாராயண நாமம் ஆகும்.  மஹா விஷ்ணுவின் சிறந்த  அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும்  தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தார்.  ஆகஸ்ட் 23, 2011  அன்று ஸ்ரீ ஜெயந்தி.  24/08/11  அன்று காலை ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனின் திருவடியில்  எழுந்து அருளியிருந்து தினமும் சேவை அளிக்கும் நர்த்தன கண்ணன் காலை புறப்பாடு கண்டு அருளினார். 






மாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புன்னை கிளை வாஹனத்தில் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.   ஆயர் குலத்து உதித்த அரசர் நம் கண்ணனின் பிறப்பு  விமர்சையாக  எல்லா இடங்களிலும் கொண்டாடப்படும்.
திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர்.   நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறி பற்றி வருகிறது. - முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4)
உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்*
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து* எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.
அடுத்த பாசுரத்தில் " கொண்டதாளுறி கோலக்கொடுமழு" என்றும் வருகிறது.   இந்த உறியடி விளையாட்டில் உயரமான கம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசு பொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்க விடப்படுகிறது.  இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி. பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி வேகமாய் உறியடி அடிக்க வருவோர் மீது பலர் அடிப்பார். இது சாட்டை அடி போன்று விழும்.

சில வருடங்கள் முன்பு கோவில் வாசலில் உள்ள மண்டபத்திலும், நாகோஜி தெரு முன்பும் - தவிர பிற இடங்களிலும் உறியடி விமர்சையாக நடக்கும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களால் இப்போது அவ்வளவு சிறப்பாக இல்லாமல் சற்று வேகம் குறைந்தது. சமீப ஆண்டுகளில் சிங்கராச்சாரி / நாகோஜி தெருவில் நன்றாக நடக்கிறது.




பெருமாள்  புன்னை கிளை வாகனத்தில் 


நாகோஜி தெரு வாசலில் மின் விளக்கு அலங்காரத்தில் கண்ணன் 



உறியடி திருவிழா 

ஸ்ரீ பார்த்தர் புல்லாங்குழல் கண்ணனாக - நர்த்தன கண்ணனுடன் 

1 comment:

  1. Wonderful photos as also the write up. Long live. Adiyargal vazhi, arulicheyal vazhi - Kasturi Rangan

    ReplyDelete