To search this blog

Tuesday, August 30, 2011

Madurai - Sri Meenakshi Amman Temple and Mukkuruni Vinayagar



The city of Madurai is a very famous one -  it was here that Tamil flourished during Sangam literature.  Lots of tamil poets have emanated from here.  It is famous for Meenakshi Amman temple – the temple of Lord Sundareswarar and Meenakshi amman.  This temple forms the lifeline of the centuries old city.  It has tall gopurams and spreads over 17 acres. 

There is a beautiful lotus pond inside the temple named ‘Pottramarai kulam – the pond of Golden lotus’.  It is believed that good literary works were placed on a wooden base on the tank and good works would float.    Besides Lord Siva and His consort Parvathi (worshipped as Meenakshi) there is a famous Vinayaka idol known as ‘mukkuruni Vinayagar’ to which loads of kozhukkattais  are placed on the Vinayaka Chathurthi day.  Here are some photos taken during a recent visit to Madurai.

With regards – S. Sampathkumar.

விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாப்படும் நன்னாளில், நான் மதுரை சென்றபோது எடுத்த முக்குருணி விநாயகரின் படத்தை கீழே இணைத்துள்ளேன்.  

மதுரை மாநகரம் பழஞ்சிறப்பு வாய்ந்தது.  தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம் இவ்வூர். மதுரை  மாநகரத்தில் மையத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற "மீனாக்ஷி அம்மன் ஆலயம்" எனும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்தான். சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து  அமைந்துள்ள  அற்புதமான  திருக்கோவில்.     திருக்கோயிலில் அருள்மிகு சுந்தரேஸ்வரரும், அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சியும் எழுந்தருளியுள்ளனர். சுந்தரேஸ்வரருக்கு மட்டும் 5 கோபுரங்களும், அம்மனுக்கு 3 கோபுரங்களும் உள்ளன.  இத்திருக்கோயிலைச் சுற்றியே நகரின் வீதிகள் அழகுற அமைந்துள்ளன.  சித்திரை வீதிகள், ஆடி வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் என மதுரை நகரின் வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயரால் அழைக்கப்படுவது சிறப்பு அம்சம். சித்திரை வீதிகளில் ஒவ்வொன்றிலும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன.   தெற்குக் கோபுரம் வழியாக நுழைந்தால், எதிரே தெரியும் முக்குருணி விநாயகரை தரிசித்தபடியே அம்மன் சன்னதிக்குச் செல்லலாம். அம்மன் சந்நிதி எதிர்ப்புறம் பொற்றாமரைக்குளம் உள்ளது.  இந்த குளத்தில் மே மாதத்தில் தண்ணீர் இருக்கவில்லை. இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம் இக்குளம் எனப்படுகிறது . திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை  தோன்றிய தலமாம் இது !  
இக்குளத்தருகே விபூதி பிள்ளையார் சிலை உள்ளது.   சுவாமி  சந்நிதி வலது பிரகாரத்தில்  கூரையில் சுழலும் லிங்க ஓவியம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

தமிழகத்தின் புகழ் வாய்ந்த பிள்ளையார் திருவுருவங்களில், முக்குருணி பிள்ளையார்  குறிப்பிடத்தக்கவர். சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருக்கும் இப் பிள்ளையார் விக்கிரகத்தின் உயரம் - பத்திலிருந்து பன்னிரண்டு அடி!  முக்குருணி என்பது அரிசியின் அளவைக்குறிக்கும் – சுமார் 18 மரக்கால் என்கிறார்கள்.   விநாயக சதுர்த்தி அன்று இவருக்கு பதினெட்டு மரக்கால் கொழுக்கட்டை  சமர்ப்பிக்கப்படுகிறது.


The famous Potramaraikulam (Golden lotus tank)

the picture of rotating Lingam and Viboothi pillaiyar (below)


Mukkuruni Vinayagar


One of the many Gopurams




the prakaram inside the temple

No comments:

Post a Comment