The main tenet
of Vaishnavism is ‘total surrender’ (saranakathi) to God. In one of his poems – “OOrilen Kaaniyillai” –
this Azhwar has sung :
“ I have no place; no properties; no relatives;
none other than you; I know only your Lotus feet in this material world and
cannot but cling to your Lotus feet; O Lord of Blue hued sky colour! You are my
only refuge. I am crying towards you, Oh the Lord of Arangam (Srirangam)
only you can clear me of all my sins and do good for me”
- ~~~
That is one of the pasurams of Thondaradipodi Aazhwar whose birthday
mahothsavam was celebrated on Sunday – 2nd Jan 2011 (kettai nakshathiram in the
month of Margazhi)
Thondaradipodiar
gave us the “Thirumalai” (45 songs) and
Thirupalli Ezhuchi (10) which are sung everyday to wake up the
Lord. He sang about Thiruvarangam and Paramapatham.
This Azhwar at
birth was named Vipra Narayanar and is also known as Bhaktanghri renu . Thondaradippodi Alvar was born in a small
village by name 'Thiru mandaggudi' in Prabhava year, Margazhi month, Krishna
chaturthi, Tuesday in Kettai (Jyestha) Nakshatram (star). This Thirumandangudi is in Chozha nadu near
Kumbakonam, the nearest landmark being
Thiruvarooran sugars factory. There is
an ancient temple near the birth place, which I understand is not in great
shape.
Here is
something about the Azhwar and some photos taken during the purappadu yesterday
at Thiruvallikkeni
===========================================================
இன்று மன்னிய
சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம். சோழநாட்டில் திருமண்டங்குடி
என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பெருமானின்
வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த
தினம். ஆழ்வார் சாற்றுமுறை இன்று :
முதல் ஆயிரத்தில்
திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11-ம் பாடியுள்ளார். எளிய தமிழில் உள்ளத்தைக்
கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப் பொடியுடையவை. இவர் பாடிய தலங்கள் ~ : திருவரங்கமும் நாம் பார்க்க முடியாத பரமபதமும். தொண்டரடிப்பொடி என்பது ஒரு வகையான புனைபெயர். வைணவ மரபில் பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற
நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என வைத்துக்
கொண்டார்.
இவரது இயற்பெயர் விப்ர நாராயணன்.
திவ்ய பிரபந்தத்தில் பிறிதோர் இடத்தில கூட 'இப் பாத தூளி படுதலால் இவ்வுலகம்
பாக்கியம் செய்ததே' என்று வருகிறது. அனுதினமும்
காலை எல்லா திவ்ய தேசங்களிலும் எம்பெருமானை பள்ளி எழுப்பும், திருப்பள்ளியெழுச்சி இவரது
பாசுரம்.
சூரியன்
கிழக்கே தோன்றி விட்டான்; இருள் அகன்றது. காலைப் பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது.
தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன.
முரசு கடல்அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்து அருள்வாய் – “அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே” என திருவரங்கனை துயில் எழுப்புகிறார். தனது திருமாலையில்
திருவரங்கனையும், அவனது இடமான திருவரங்கத்தின் பெருமையையும் உரைக்கிறார். அங்கே உள்ளதால் காவிரி கங்கையை விட புனிதம் ஆகிறது.
கங்கையிற்
புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர்
பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்
மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம்
மறந்து வாழ்கேன்? ஏழையேன், ஏழையேனே!
ஆழ்வார் பூலோக வைகுண்டம் என்று கொண்டாடப் படும் தலத்தில் எம்பெருமானுக்கு கைங்கரியம்செய்ய ஒரு அழகிய நந்தவனம் அமைத்து அதில்
பகவானுக்கு உகந்த மலர்களை வளர்த்து, மாலை தொடுத்து அந்த அரங்கனுக்கு சாற்றி
மகிழ்ந்தார். இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக்
கொள்ளாமலும் கைங்கரியமே கண்ணாக இருந்தவர்.
திருவரங்கனை
அனுபவிக்கும் சுகத்தை விட இந்திர லோகம் ஆளும் பதவி கொடுத்தாலும் கூட வேண்டேன் என பாடிய
ஆழ்வாரின் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :
அடியேன்
: ஸ்ரீனிவாச தாசன்
சென்ற நூற்றாண்டின் நடுவில்
பல புராணங்கள் சினிமா படங்களாக எடுக்கப்பட்டன. 12-12- 1938 இல் 14000 அடியில் எடுக்கப்பட்ட புராண படம் “விப்ர நாராயண" இயக்கம்
– ஏ.நாராயணன், வசனம்-சோமயாஜுலு, இசை.எஸ்.என்.ஆர்.நாதன், பாடல்-நாராயணன் வாத்தியார்,
ஒளி- டி.வி.கிருஷ்ணையா, கலை-அப்பு குட்டி குரூப்-பாலகிருஷ்ண குரூப். எடிட்டிங் – என்.கே.
கோபால்.
No comments:
Post a Comment