To search this blog

Tuesday, December 28, 2010

இயற்பா சாற்றுமுறை - Iyarpa Satrumurai 27/12/2011

இயற்பா சாற்றுமுறை    :    அத்யயன உத்சவத்தில் நான்கு ஆயிரமும் சேவை சாற்றப் பெறுகின்றன. 

முதலில் பகல்பத்து உத்சவத்தில் முதல் ஆயிரமும்,  இரண்டாவது ஆயிரமும் மதியம் கோவிலில் சேவிக்கப்படுகின்றன.  இராப்பத்து உத்சவத்தில் திராவிட வேத சாகரமான திருவாய்மொழி தினமும் இரவு சேவிக்கப்படுகிறது.
இராப்பத்து முடிந்த மறுநாள் இயற்பா சாற்றுமுறை.  நேற்று 27/12/2010 அன்று திருவல்லிகேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளும் அனைத்து ஆழ்வார் ஆச்சார்யர்களும் எழுந்து அருளி இருக்க - ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாம் இயற்பா சேவிக்கப்பட்டது.
மூன்றாவது ஆயிர பாசுரங்கள் :  முதல் திருவந்தாதி;  இரண்டாம் திருவந்தாதி ;  மூன்றாம் திருவந்தாதி;  நான்முகன் திருவந்தாதி;  திருவிருத்தம்;  திருவாசிரியம் ;  பெரிய திருவந்தாதி  திருவெழுக்கூற்றிருக்கை;  சிறிய திருமடல்;  பெரிய திருமடல் முதலியன அனுசந்திக்கப்பட்டு, பின்னர் திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த ப்ரபந்ந காயத்ரி   என பிரபலம்  வாய்ந்த  இராமாநுச நூற்றந்தாதி உடன் சாற்றுமுறை முடிவுற்றது.

No comments:

Post a Comment