To search this blog

Wednesday, December 22, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (4) - 21-12-2010


எம்பெருமான் பத்துடை அடியவர்க்கு எளியவன் (பக்தியுடன் தன்னை தொழும்  அடியவர்களுக்கு மிக எளிமையாக அடையக்கூடியவன் ஆகிறான் - ஸ்ரீமன் நாராயணன்). 

வைகுண்ட ஏகாதசியில் துவங்கி திருவரங்கம், திருவல்லிக்கேணி இன்ன பிற திவ்யதேசங்களிலும் இராப்பத்து உத்சவம் - பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறுகிறது. 
திருவல்லிக்கேணியில்  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தினமும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி நம்மாழ்வாருடன் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருள்கிறார்.   ஆசார்யன் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த "உபதேச இரத்தினமாலை" வீதியில் சேவிக்கப்படுகிறது. புறப்பாடு முடிந்து கோவிலின் உள்ளே திருவாய்மொழி அனுசந்திக்கப் படுகிறது.  

இராப்பத்து உத்சவம்  நம்மாழ்வாரின் அத்யயன உத்சவம்.  நம்மாழ்வார்  வைகாசி விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார்.  திருக்குருகூர் (இப்போது ஆழ்வார் திருநகரி) என்று அழைக்கப்படும் தலத்தில் அவதரித்தார்.   இவரது மற்ற பெயர்கள் சடகோபன், பராங்குசன், மாறன், காரிமாறன், வகுளாபரனணன், குருகைப்பிரான், ஞானப்பிரான், எனப் பல. 

 'சடம்' என்றால் வாயு. குறிப்பாக பூர்வஜென்ம வாயு. அந்தக் காற்று குழந்தையை முதலில் சூழ்ந்து கொள்ளும்போது அது அழுமாம். நம்மாழ்வார் பிறந்ததும் அழவே இல்லையாம். அதனால் சடம் என்னும் வாயுவை முறித்ததினால் சடகோபன் என்று பெயர் சூட்டினார்களாம்.   [சுஜாதா தனது ஆழ்வார்கள் கட்டுரையில்]

நேற்று [21/12/2010] அன்று ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கரத்தினில்   செங்கோலுடன் பாண்டியன்  கொண்டை  அணிந்து, அரச திருகோலத்தில் ஸ்ரீ ரங்கநாதர் ஆக சேவை சாதித்தார். 

பெருமாள் புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே காணலாம்.  மேலும் படங்களுக்கு :  http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniIraapathuUthsavam2010421122010#

ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்  



No comments:

Post a Comment