To search this blog

Thursday, August 31, 2023

New Golden thandus for Emperuman at Thiruvallikkeni

திருவல்லிக்கேணியில் புதிய தங்க தண்டுகள் சமர்ப்பணை 

தோளுக்கு  இனியான் என்னே  ஓர் அற்புத சொல்லாடல்.   இன்மை பயப்பவை, மனதுக்கும் உடலுக்கும் உகப்பானவை -   இனியவை  !! 



Here is a picture of Sri Parthasarathi Emperuman in Tholukku Iniyan at Paramapada vasal taken on Vaikunda Ekadasi day 2023. 

பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று -  இனியவை நாற்பது.  இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்  !  இயற்பெயர் சேந்தனார்; தந்தை பெயர் பூதனார்;  மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று இவரை அழைத்தனர். இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன.  இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவைநாற்பது எனப் பெயர் பெற்றது.  இத்தொகுப்பில் இருந்து ஓர் இனிய பாடல் :  

அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;

பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;

தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,

கொண்டு அடையான் ஆகல் இனிது. (பாடல்-7)  

அந்தணர் வேதம் ஓதுதல் மிக இனிது. குடும்பம் உடையவனைத் (இல்லறத்தானை) தளபதி ஆக்குதல் இனிது. தவறான ஒழுக்கங்கள் உடையவனாக இருப்பது தந்தையாகவே இருந்தாலும் அவர் சொற்களை ஏற்று நடக்காது இருத்தல் இனியது.  

இனியாள் என்றால் ' மனதுக்கு இனியவள்' என்று பொருள் படும்.  திருப்பாவையில் கோதை நாச்சியார்  ' மனத்துக்கு இனியானை பாடேல்' என உரைக்கின்றார்.  ஸ்ரீவைணவக் கோயில்களில்எம்பெருமான்  உற்சவ மூர்த்தியை எழுந்தருளப் பண்ணும் தண்டுகள் செருகிய பீடத்தை 'தோளுக்கு இனியான்' என்று கூறுவர், அதை சுமப்பது இன்பம்/பாக்கியம் எனக் கருதி!  

பெருமாள் புறப்பாடு கண்டருளும் பஞ்சபர்வ கேடயம் முதலானவை அழகாக 'தோளுக்கு இனியான்' என வழங்கப்பெறுகின்றன.  இந்த கேடயத்தில் எம்பெருமான் எழுந்து அருளி இருக்க - அதை 2 பெரிய தண்டுகள் பிணைத்து ஸ்ரீபாதம்தாங்கிகள் தம் தோள்களிலே ஏளப்பண்ணிக் கொண்டு வருவார்கள்.  

இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் எம்பெருமானுக்கு புதிய தங்க தண்டுகள் (நல்ல உயர்ந்த மரத்தில், செப்பு தகடு அடித்து, அதன் மேல் அழகு பூண்களுடன் தங்கரேக்குகள், முலாம் பூசி) அழகுற மிளிரும் தண்டுகள் திரு ஜெகன் எனும் ஒரு பக்தரால் சமர்பிக்கப்பட்டன.  பவித்ரோத்சவ புறப்பாடு முடிந்தவுடன், மங்கள இசையுடன், திருவீதிகளில் கரிக்கோல ஊர்கோலமாக அவை வலம் வந்தன.  

In every purappadu – there are so many attractions – Emperuman – arulicheyal goshti, sripadhamthangigal, Archakas (battacharyas) and many many kainkaryabarargal – one among them doing a tough kainkaryam are the bearers of  Emperuman .. .. other than vahana purappadu – Emperuman has thiruveethivalam in Kedayam, aesthetically known in Srivaishnava parlance as ‘Tholukku iniyan’.  

Today a new set of golden thandu (wooden ones with copper rakes embossed with gold) was presented to Emperuman and had karikkola purappadu.  Tomorrow they will have the fortune of carrying Emperuman.  

Here are some photos of the Golden thandu dedicated by a devotee – Sri Jagan.

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
31.8.2023 









No comments:

Post a Comment