To search this blog

Tuesday, February 9, 2021

Thiruvallikkeni Sri Parthasarathi Perumal Thiruther 2021

In the ongoing Special Brahmothsavam for Sri Parthasarathi Swami  at Thiruvallikkeni divyadesam today  9.2.2021  is the seventh  day – a very important day ~ it is Thiruther  for Perumal.
ஸ்ரீவைஷ்ணவ ஆலயங்களில் திருத்தேர் புறப்பாடு முக்கியமானது.  பல நூறு பேர்கள் கலந்து கொள்ளும் ஒரு அற்புத நிகழ்ச்சி.  திருத்தேரில் பற்பல சிற்பங்கள் அழகாய் அமைந்து இருக்கும்.  பூதங்கள், யாளி, சிம்ஹம், பாய்ந்து இழுக்கும் குதிரைகள், தேர்ப்பாகன் போன்ற பொம்மைகளும் தோரணங்களாக வண்ண திரைசீலைகளும் இருக்கும்.  

எம்பெருமானுடைய பல்லாயிர திருநாமங்களை கூவி 'கோவிந்தா!, மாதவா!, கேசவா!, நாராயணா!, கண்ணா!, மதுசூதனா, ஹ்ரிஷீகேசா' எனப்பாடி ஆனந்தித்து அவனை அவனுறையும் பல்வேறு கோவில்களில் சென்று சேவித்து, அவனது உத்சவங்களில் வாகன சேவைகளில் கண்டு இன்புறுகிறோம். இவற்றிற்கு மகுடமானது வருடாந்திர ப்ரஹ்மோத்சவம்.  இந்த பத்து நாட்கள் விசேஷ வைபவத்தில் , திருத்தேர் கம்பீரமானது.  அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள் எங்கும் மக்கள்  வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவர்.      
This morning Sri  Parthasarathi Perumal  had siriya mada veethi purappadu to Thiruther @ 04.15   am  -  and @ 7 am it was -  thiruther vadam.  Thousands of devotees together pulling the gigantic chariot of Sriman Narayana.  0ne will realise the grandeur  of rolling juggernaut, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by.  Thiruther is a grand occasion of togetherness of people.  During Brahmothsavam thousands throng Temple and have darshan of Perumal in His veethi purappadu ~ significantly, during Thiruther, thousands partake – they pull, go around, push, offer buttermilk and panakam [jaggery water] to devotees and there is celebrations on the air, clearly visible.    In the goshti, first it was Thiruvezhukkoorirukkai and then  Thirumozhi of Thirumangai Mannan.   

Could recall that the Thiruther of yore was even bigger ~ in 1980s for a couple of years, there was no Thiruther purappadu as it was under repair – when made again, in tune with times, it got reduced a bit – also now it has steel wheels; the earlier one had wooden wheel… it now runs on concrete cement road.  Thiruther, the chariot, is easily the most grandeur and most attended by bakthas too. 

Ratha [the chariot] has existed in puranic days, historic days and more.  We have heard of Kings of recent past having had platoons of horse and horse-driven chariots. On screen too, we have seen many – one got enamoured by the scene of Arjuna wading through the forces in Mahabaratha  - even those chariots were quite attractive.  Ratha is not only fleet-footed mode during war, it symbolizes energy and zeal to move forward.  It was on the chariot steered by Lord Krishna, Geethopadesam occurred to Arjuna, the mighty warrior.  The rath itself according to legend was given by Agni.  The battle formation was unconceivably bigger ~ by some accounts an Akshauhini is described as a formation consisting of 21870 chariots, 21870 elephants, 65160 cavalry and more than a lakh of infantry. 

திருமங்கை மன்னனின் திருக்குறுந்தாண்டகம் ஒரு அற்புத பிரபந்தம்.  இறைவனைப் பெருநிதியாக வர்ணித்து மாந்தர்களாகிய நமக்கு எது செல்வம், எது உயர்ந்தது, நாம் என் செய்ய வேண்டும் என போதிப்பது !! ~ இங்கே ஒரு பாசுரம் :  

கேட்கயான் உற்றதுண்டு*  கேழல்ஆய் உலகம் கொண்ட,*

பூக்கெழு வண்ணனாரைப்*  போதரக் கனவில் கண்டு,*

வாக்கினால் கருமம் தன்னால்*  மனத்தினால் சிரத்தை தன்னால்,*

வேட்கை மீதூர வாங்கி*  விழுங்கினேற்கு இனியவாறே. 

மனிதர்களுக்கு தேவைகள் : உணவு, உடுப்பு, இருப்பிடம் .. .. இவை கிடைத்தாயின், மேலும் பணம், பொருள், போகம், என தேடல் .. .. .. பண்டைய கால மன்னர்கள் -  தண்ணீர், வெற்றிலைப்பாக்கு, வாசனை திரவியம், மண்,  மாதர், ஆடையாபரணம், சூது சதுரங்கம்  என உல்லாசித்தனர்.  மனிதர்களின் வாய்வெகுவுதலும், பொழுது போக்குதலும்,  இப்பொருள்களிலேயே  மாறிமாறி நடந்தன  !! 

ஆயிரம் ஆண்டுகள் முன்பு திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில் வெகுவாக பொருந்தும்.  நிலை கேட்ட மாந்தர்களே ! ~ பொருளையும் பிற இன்பத்தையும் தேடி அலையாதீர்.  ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.

 

 
Here are some photos of Sri Parthasarathi perumal  thiruther vaibhavam on 9.2.2021.
 
~ adiyen Srinivasa dhasan (mamandur Veervalli Srinivasan Sampathkumar) 

  

1 comment: