To search this blog

Sunday, February 7, 2021

Sri Parthasarathi Perumal Nachiyar thirukolam 2021

Many a times, we experience that ‘mankind’ and ‘kindness’ do not go together. Effrontery is insolent or impertinent behaviour. Some of its synonyms are : impudence; impertinence; insolence; audacity; temerity; brazenness; impoliteness; disrespect; malapertness; procacity.  Of those synonyms, temerity (from the Latin temere, meaning "blindly" or "recklessly") suggests boldness arising from contempt of danger, while audacity implies a disregard of the restraints commonly imposed by convention or prudence.



Our scriptures teach us of doing kainkaryarm, respecting people and doing service to them all – and all mercy flows from our Supreme Lord Sriman Narayana, who is the most kindest of them all – Nachiyar thirukkolam symbolizes grace, kindness, divine blessings and more.

மனிதப்பிறவி அரிதாயினும் அதுவே மிகுதியும் அஞ்சத்தக்கது.  கோபம், ஆத்திரம், கேடு நினைத்தல் போன்ற கொடிய எண்ணங்களை உடைய மானுடர்கள் -  இளமை, செல்வம், யாக்கை ஆகியவைகள் நிலையற்றவை என்பதை உணர்ந்தால் அந்நினைவு அகற்றுவர்.  இளமை, செல்வம், யாக்கை ஆகியவை இருக்கும் போதே எம்பெருமானை வணங்கி, கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். மனத்தால் எப்போதும் நமோ நாராயணா என நினைத்து எம்பெருமான் திருநாமங்களை எப்போதும் உச்சரிக்க வேண்டும்.  



Aesthetics,  is a branch of philosophy that deals with the nature of beauty and taste, as well as the philosophy of art. It examines subjective and sensori-emotional values, or sometimes called judgments of sentiment and taste.

Perhaps there could never be an apt definition of ‘beauty !’ – it is the  quality present in a thing or person that gives intense pleasure or deep satisfaction to the mind, whether arising from sensory manifestations or something else.   Beauty has varied throughout time, various cultures and the vast different perceptions of the world. Beauty has been described and depicted through pictures and concepts penetrating our minds. Beauty has been defined in so many ways.  Beauty is happiness. Beauty is often distorted, misunderstood and shadowed by a wide amount of conflicting pressures.   .. .. beauty is the one that makes you forget everything and feel very blissful, forgetting your surroundings, your present state of affairs and more ! beauty gives tranquility and peace of mind. .. ..        ……….   

Today 7.2.2021 is day 5 of Sri Parthasarathi Perumal Special  brahmothsavam –  Srimannarayana- the ever merciful Lord is always our esteemed protector. He is our Rakshak. He is glorified in the Vedas as the Supreme entity. He is "Veda Mudalvan". The sublime beauty and oozing benevolence as exceptionally visible in the Thirumugam [face] of Perumal – Nachiyar.  Day 5 is that day where one would feel this life is not enough – one may feel like being with the Emperuman throughout – those days, the morning purappadu would start around 530 am – mandagappadi at Komutti bungalow; Thavana Uthsava bungalow; Nataraja Stores; Gangaikondan mantap; Kuthirai vahana mantap;   kulakkarai Hanumar temple; Sri Yadugiri Yatiraja mantap;  Krishnan kovil at Sunkuwar; tranquilty at Vasantha uthsava bungalow (its vast expanse mesmerizing); kannadi pallakku mantap; Sri Nammalwar sannathi; Andal Sannathi .. .. and purappadu culminating after South Mada Street – it might take around 6 hours + for completion.  .. .. not these days !

Being day 5, it is Swami Nammalwar’s Thiruvirutham, the essence of Rig veda in the morning purappadu.  Nammalwar experiencing ‘Parankusanayaki’ expresses her attachment to the immortal Sriman Narayana and that perhaps is the reason for Nachiyar thirukolam on this morning purappadu.  

.....  the beautiful women of Thiruvallikkeni would circle  around to have darshan of Him, look and envy the best of silk saree – Rose (lotus pink!) colour,  tastefully worn (some may debate on the colour / border combination !)  - among the dazzling ornaments could be the  ‘pavalam’[red coral] – simply marvellous. The golden parrot  ensconced above the abhaya hastham of Nachiyar.     More than the ornate style of dressing,  it is always His  benevolence [karunyam] showering blessings to His devotees.  

ஐந்தாம் நாள் புறப்பாட்டில்  ஸ்ரீபார்த்தசாரதி  பெருமாளின் அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. கருத்துக்கு மிக எளியனான அப்பெருமாளின் கருணைமிகுந்த திருக்கோலத்தை காண பக்தர்களுக்கு ஆசை வருவது இயல்பு.  பெருமாள் தனது வாத்சல்யம், சௌலப்யம் போன்ற கல்யாணகுணங்களை எல்லாம் நமக்கு அருளி, மிகஅழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து அபயஹஸ்தத்துடன் காட்சிதரும் எழில்மிகு திருக்கோலமே  நாச்சியார்திருக்கோலம். 

திருவல்லிக்கேணியில் எல்லா பெரிய உத்சவங்களிலும் ஐந்தாம்நாள் ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவிருத்தம்' சேவிக்கப்பெறுகிறது. ருக்வேதசாரமான திருவிருத்தம்   100 பாடல்கள் கொண்ட  அந்தாதி;  கட்டளைக் கலித்துறை பாடல்களால்  ஆனது. நம்மாழ்வார் ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தாமான தன்மையழந்து 'நாயகியாய்' தம்மை பாவித்து பிராட்டி நிலைமையடைந்து ‘பராங்குச நாயகி’யானார்.  நாயகன் ஆன எம்பெருமானின் ரூப வைலக்ஷண்யமுரைத்த பாசுரம் இது:

 

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ  அவையே*

வண்ணம் கரியது ஓர் மால்வரை போன்று மதிவிகற்பால்*

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்*

எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே?

 

எம்பெருமானுடைய திருக்கண்கள்; திருக்கைகள்;  திருவடி என்னுமுறுப்புகள் ஸாக்ஷாத் தாமரைமலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சனமாமலை போன்றுள்ளது;ஞானத்தில் மேம்பட்ட பரமபதத்து நித்யஸூரிகளும் விவரிக்க  முடியாத அதிரூபசௌந்தர்யம்  எம்பெருமானது திருமேனியழகு. ஐந்தாம் நாள்  காலை பக்தர்களுக்கு அருள்பாலித்த நாச்சியார் திருக்கோலத்தில்   எடுக்கப்பட்ட படங்கள் இங்கே: 

Here are some photos of Sri Parthasarathi Perumal Nachiyar thirukolam purappadu taken this morning.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7/2/2021. 
















No comments:

Post a Comment