To search this blog

Saturday, February 6, 2021

கைத்தலம் நோவாமே அம்புலீ கடிதோடி வா. `Moon's attraction .. Chandra Prabhai 2021

கைத்தலம் நோவாமே அம்புலீ கடிதோடி வா. `Moon's attraction .. Chandra Prabhai 




Jupiter has 53 named ones – there are more awaiting official names. Combined, scientists now think Jupiter has 79 of them !!  There are many interesting similar ones  orbiting the planet, but the ones of most scientific interest are the first four discovered beyond Earth—the Galilean satellites.  The planet Jupiter's four largest are called the Galilean satellites after Italian astronomer Galileo Galilei, who first observed them in 1610. The German astronomer Simon Marius claimed to have seen them  around the same time, but he did not publish his observations and so Galileo is given the credit for their discovery. They are the  moons !! These large moons, named Io, Europa, Ganymede, and Callisto, are each distinctive worlds.  

Moon  has attracted humanity through centuries – in mythology, history and in life.  The Moon (or Luna) is the Earth’s only natural satellite and was formed 4.6 billion years ago around some 30–50 million years after the formation of the solar system. The Moon does not shine with its own light. It simply reflects light coming from the Sun.  The Moon is in synchronous rotation with Earth meaning the same side is always facing the Earth.  From Earth, it might look like the Moon is changing shape each night – from a tiny sliver to a half moon to a full moon and back again. What’s actually happening is that from our spot on Earth, we see different parts of the Moon lit up by the Sun as the Moon travels in its orbit.

Man has always had the unsatiable urge to explore moon. The first unmanned mission to the Moon was in 1959 by the Soviet Lunar Program with the first manned landing being Apollo 11 in 1969.   India too is heading to explore and land in moon.   It took 400,000 Nasa employees and contractors to put Neil Armstrong and Buzz Aldrin on the moon in 1969 – but only one man to spread the idea that it was all a hoax.  It began as “a hunch, an intuition”, before turning into “a true conviction” – that the US lacked the technical prowess to make it to the moon (or, at least, to the moon and back).   In 1976, a campaigner published a pamphlet called We Never Went to the Moon.. .. .. for centuries Moon has attracted people .. ..

6.2.2021 was a great  day – day 4 of Special Brahmothsavam at Thiruvallikkeni -  Surya Prabhai purappadu in the morning  ~  and,  real cool Chandra Prabhai that of moon, in the evening. 

சந்திரன் குளிர்ச்சியானவன்; சந்திரனுக்கு அம்புலி, வெண்மதி,  பிறை,   கலாநிதி,    நிசாகரன், மதி,   சுதாகரன்,  என பெயர்கள் உண்டு. முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர வல்லது.  நிலவை  நோக்கி  கைநீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம் - அம்புலிப்பருவம்.




புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும், தொன்மைக்காலத்திலிருந்தே மனித  சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில்,   குளிர்ச்சியான சந்திரன்  மிகுந்த தாக்கமேற்படுத்தி உள்ளது.  பல கவிஞர்கள் 'நிலாவே வா'  என பாட்டு படித்தாலும்   "நிலா' என்பது சந்திரனிலிருந்து கிடைக்கப்பெறும் ஒளியின் பெயரே அன்றி வானில் வட்ட வடிவமாகத் தெரிவது அல்ல எனலாம்.   சூரியனின் ஒளியைப் "பகலொளி' என்றும், சந்திரனிலிருந்து வரும் ஒளியை "நிலவொளி' என்றும் சங்க பாடல்களில் கட்டப்பட்டுள்ளது.  நாலடியார்  பாடலில்,  "அங்கண் விசும்பின் அகல்நிலாப்பாரிக்கும்/திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்'  எனுமிடத்தில் . "இடமகன்ற அழகிய வானின்கண் மிகுதியாக நிலாவினை (ஒளியினை) தோற்றுவிக்கும் சந்திரனும் சான்றோரும் ஒப்பர்' என்பது பொருள்.  

விஷ்ணுசித்தனான பெரியாழ்வார் கண்ணனது ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து பாசுரங்கள் அருளியுள்ளார்.  வளரும் கண்ணனுக்கு யசோதை அம்புலியை  அழைக்கும் ஒரு பாசுரம் இங்கே :

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே அம்புலீ   கடிதோடி   வா.  

சந்திரன் குளிர்ச்சியும் அழகும் மிக்கவன்.  மாமதி!  மகிழ்ந்தோடிவா’’ என்று அழைக்கச் செய்தேயும் சந்திரன் ஓடிவரக் காணாமையாலே ‘அழகில் தன்னோடொப்பார் ஒருவருமில்லை’ என்கிற கர்வத்தினால் இவன் வாராமலரிருக்கிறான் என்று கொண்டு அந்தச் செருக்கு அடங்கப் பேசுகிறாள், யசோதா. .  சந்திரா! நீ இப்போது  நாள்தோறும் தேய்வதும் வளர்வதுமாய் இருக்கின்றாய்; களங்கமுடையனாயும் இருக்கின்றாய்;  நீ எவ்வளவு செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும் அற்புத  குழந்தை கண்ணனது திருமுகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய்.  ஆகையாலே நாமே அழகிற் சிறந்துள்ளோம் என்கிற செருக்கை ஒழித்து உன்னைக் காட்டிலும் மிக அழகிய முகமண்டலத்தை உடையவனான இவன் உன்னைக் கைகளால் அழைப்பதைப் பரம பாக்யமாக அநுஸந்தித்து விரைந்து ஓடிவா; வாராவிட்டால் வெகுகாலமாக உன்னை அழைக்கிற இக்குழந்தைக்குக் கைநோவு ஒன்றே மிகும்; இவ்வபசாரத்தை நீ அடைந்திடாதே என்றவாறு, அம்புலியை உடனே வந்திடுமாறு அழைக்கிறார் நம் பெரியாழ்வார்.     

திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் நான்காம் நாள் காலை சூர்யப்பிரபை.  மாலை சந்திரப்ரபை வாகனங்கள்.   

Moon has enamoured mankind for ages – in our literature and in Divyaprabhandnam too, there is mention of moon in many a places.  Moon is characterised as a cool, pleasant one.  During the brahmothsavam at Thiruvallikkeni divyadesam,  on day 4  there is  Surya prabhai purappadu in the morning and in the evening -  Chandra prabhai.  Here are some photos of Sri Parthasarathi Chandra prabhai purappadu of 6.2.2021.

  

adiyen Srinivasa dhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar)
6.2.2021
பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.

















  

1 comment: