To search this blog

Tuesday, March 17, 2020

Thirumylai Churnabhishekam 2020 : உரல், உலக்கை, "சூர்ணம்"இன்று காலை திருமயிலை ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள் கோவிலில், எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும் பட்டர் உரலில் உலக்கையால் இடித்து "சூர்ணம்" செய்வதை பக்தர்கள் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது.  இன்று திருமயிலை ப்ரஹ்மோத்சவத்திலே - ஆறாம் நாள் - "சூர்ணாபிஷேகம்"

சிறப்பான சமையலை சாப்பிட்டால் நளபாகம் என உயர்வாக சொல்லுவர் ! மகாபாரத்தின் கிளைக்கதைகளில் ஒன்று நளசரிதம். இதன் தலைவன் நளன், நீதி வழுவாமல், நிடத நாட்டை ஆண்டு வந்தான். இவன் சமையல் கலையில் வல்லவன். ஆதலால் "நள பாகம்" என்றானதாம்.  புஜபல பராக்கிரமம் கொண்ட பீமன் கூட சமையல் கலையில் வல்லவனாம்.

கை குத்தல் அரிசி  கேள்விபட்டுள்ளீர்களா ?  கை குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். கை குத்தல் அரிசியில் உமி நீக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது .வெள்ளை அரிசியில் பல கட்டங்களாக தோல் நீக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைகிறது..கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது .இதற்கு தேவை நெல்மணிகள் - அவற்றை குத்த உலக்கையும் உரலும் !

ஸ்ரீரங்கத்து உலக்கை என்றொரு வழக்காடு உண்டு. ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெருமாளுக்கு அமுது செய்விக்க  மாவு இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும் மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார்.  வேடிக்கையாக,  யாராவது அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள், இதோ வருகிறேன் என்று உலக்கையைக் கை மாற்றுவார்கள்  - . மாற்று ஆள் வந்து உலக்கை பிடிக்கும் வரை, சூரிய அஸ்தமன நேரம் வந்தாலும் இடை விடாமல் மாவு இடித்தாக வேண்டுமாம் ! 

உரல்  என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு  இரும்பு பூண் கொண்ட மர  உஉரலில் உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்.  பொடிக்கு சூர்ணம் என்றொரு பெயருண்டு.
Today (17.3.2020)  is the 6th day of Brahmothsavam at Thirumayilai for Sri Adhi Kesava Perumal. There was  ‘Choornabishekam’,  and later Perumal   had purappadu in ‘Punniya Kodi vimanam’.   In the purappadu,  ‘Thiruchanda Virutham’ composed by Sri Thirumazhisai Azhwaar was rendered.   These 120 songs fall under the type ‘virutha paa’ – they are replete with numbers and fall under a specialized category of tamil grammar called ‘enn adukki cheyyul’.

சூர்ணாபிஷேகம்  சிறப்பு.:   சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும்,  பெரியவாகனங்களில் எழுந்து  அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.  திருக்கோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம் மற்றும் நறுமணம் கொண்ட எண்ணெய்,  அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப்  புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.

Here are some photos taken this morning at Thirumylai.

~adiyen Srinivasa dhasan [Mamandur veeravalli Srinivasan Sampathkumar]
17.3.2020
Photo credit (in sapparam) 1 Badrinath Vasudevan & 2 Sriram Mukundan (both mylai vasigal); rest taken by me.

No comments:

Post a Comment