To search this blog

Thursday, April 26, 2012

Thiruvallikkeni Udayavar Uthsavam - day 7 & 8


The grand Uthsavam of Swami Emperumanar (Ramanujar) is underway at all Divyadesams.  At Thiruvallikkeni, this is a 10 day festival with purappadus both in the morning and Evening.  On all mornings (except the 6th day Kuthirai vahanam and 9th day (today- 26th Apr 12) when there is no morning purappadu) – it is the pallakku (palanquin).  Here are a couple of photos taken on the morning of 7th day and 8th day.  You can have darshan of Ramanujar adorning ‘kondai (crown)’ on one day and a different head gear ‘thalaippagai’ on the other.   Some photos taken on the evening of 6th day Uthsavam (23.4.12) can also be seen.

'கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன் * தொண்டர் குலவும் இராமானுசன்' - என எழில் வாய்ந்த திருவரங்கத்தில் வாழும் பெரிய பெருமாளுடைய தொண்டர்களால் கொண்டாடப்பட்டவரும், வேதங்களை இப்பூவுலகிலே ஓங்கி வளரச் செய்த பரம உதாரருமான ஸ்ரீ ராமானுஜரின் திருவவதார உத்சவம், ஏனைய திவ்யதேசங்களில் நடப்பதை போன்றே, திருவல்லிக்கேணியிலும் சிறப்பாக நடந்து வருகிறது. 

திருவல்லிக்கேணியில் உடையவர் உத்சவம் -  பத்து நாட்கள் காலை, இரவு, என இரண்டு வேலைகள் வீதி புறப்பாடும், மங்களாசாசனம், திருப்பாவை சாற்றுமுறை, திருவாய்மொழி சாற்றுமுறை, கண்ணாடி அறையில் எழுந்து அருளப் பண்ணுதல் என மிக சீர்மையாக நடைபெறும் உத்சவம்.  காலை புறப்பாடுகளில் (ஆறாம் நாள் காலை; ஒன்பதாம் நாள் தவிர) - பல்லக்கு புறப்பாடு.  

ஏழு எட்டாம் நாட்களில் பல்லக்கில் எழுந்து அருளி இருந்த உடையவரை கீழே சேவிக்கலாம்.  ஒரு நாள் அலங்கார கொண்டை, மற்றொரு நாள் சிறந்த தலைப்பாகை என ஒவ்வொரு நாளும் காரேய் கருணை இராமனுஜனரின் திருமுகம் அழகு பொலிந்து, சேவிப்பவர்களை பரவசப்படுத்தும். 


ஆறாம் நாள் மாலை தங்க கேடயத்தில் எழுந்து அருளிய அவசரமும் இங்கே காணப் பெறலாம். 



அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 

No comments:

Post a Comment