To search this blog

Friday, October 7, 2011

Vijayadasami Paarvettai Purappadu at Thiruvallikkeni -6th Oct 2011 - திருவல்லிக்கேணியில் "விஜயதசமி" புறப்பாடு.


Vijayadasami Paarvettai purappadu at Thiruvallikkeni  :    திருவல்லிக்கேணியில் இன்று [06/10/2011]  "விஜயதசமி" புறப்பாடு.

In the month of Purattasi is celebrated the nine days festival of Navarathiri.  In all these days, there will be grand purappadu of Vedavalli Thayar inside the temple premises.  ‘Siriya Thirumadal’ will be rendered during the purappadu.  The last day is celebrated as Saraswathi Pooja, the day of reverence to the Lord of Learning.  In the same day, it is a practice in all shops and establishments to cleanse the shop, place all the tools and implements of work before the Lord, celebrating the same as Ayudha Pooja.

The next day is Vijayadasami.  The day considered most auspicious for starting learning.  Children are put to schools and taught the first syllable known as “Aksharabyasam”. Vijayadasami fell on 6th Oct 2011.  On this day at Thiruvallikkeni, there was purapadu of Lord Parthasarathi on ‘kuthirai vahanam’ – the Lord in pure white silk riding a horse was great darshan to all bakthas.  The day was also the birth celebrations of Swami Vedanta Desikar.

In the epic Mahabaratha, during their exile Pandavas had to spend a year without revealing their identities.  This period was spent on Virada desam.  This is explained in detail in Virada parvam of Mahabaratha.  On Vijayadasami day which coincided with completion of their one year in exile,  in the war to protect Virada kingdom, Arjuna took back his bows and arrows hitherto hidden in a ‘vanni tree’.  This is symbolically celebrated; in olden days this act called ‘paarvettai’ took place in Vasantha Mantapam.  Now this mantap is no longer there. 

At the entrance of the temple, leaves of vanni were symbolically placed and the Lord came near the tree gesturing taking out of arms.  Here are some photos taken during the purappadu on Thursday -6th Oct 11.


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருகோவிலில் நவராத்திரி ஒன்பது நாளும் ஸ்ரீ வேதவல்லி தாயார் இரவு 7 மணி அளவில் புறப்பாடு கண்டு அருள்கிறார். கோவில் த்வஜஸ்தம்பம் சுற்றி வேதவல்லி தாயார் - கமலா வாகனம், கிளி வாகனம், சேஷ வாகனம், யாளி வாகனம், வெள்ளி சிம்ஹ வாகனம், குதிரை வாகனம், அம்ச வாகனம், யானை வாகனம் என பல வாகனங்களில் புறப்பாடு கண்டு அருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சரஸ்வதி பூஜை அன்று தாயார் புறப்பாடு முடிந்தவுடன் , கோவிலில் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு மங்களமாக வழங்கப் படுகிறது. 

நவராத்திரி முடிந்து இன்று (06/10/2011) விஜயதசமி நன்னாள். விஜயதசமி என்று கல்வியை போற்றும் வெற்றித் திருநாளாகவும் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று பார்வேட்டை புறப்பாடு.  இன்று   ஸ்ரீ வேதாந்தா சார்யர் சாற்றுமுறை.

"பார் எல்லாம் புகழ்ந்திடும்  பார்த்தனுக்கு தேர் ஓட்டும் சாரதியான  எங்கள்  பார்த்தசாரதி இன்று குதிரை வாகனத்தில் கம்பீரமாக எழுந்து அருளினார்.  புரட்டாசி மாத இவ்வுத்சவத்தின் சிறப்பை "  வன்னி மர பார்வேட்டை கண்டு அருள வலம் வரவே ! மன்னவனும் எழுந்து அருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்; அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு அலங்காரம் ஒன்பது நாள் - நவராத்திரி நன்னாள் ". என பாட்டில் வெளிப்படுத்தி உள்ளனர்.   

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக் கூடியதாம்.  மிக சிறந்த இதிகாசமான மகாபாரதத்தில் விராட பர்வம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது. 

பாண்டவர்கள் தங்கள்  ஓராண்டுகால அஞ்ஞாத வாசத்தை  விராட நாட்டில் நிறைவேற்றினர்.   தர்மத்தில் சிறந்த தருமர் துறவுக்கோலம்  பூண்டு மன்னனுக்கு கங்க பட்டராகவும், பீமன்  மன்னனுக்கு சுவையான உணவு அளிக்கும் பணியிலும், வில் விதையில் நிகரற்ற அர்ஜுனன், பிருகன்னளை என்ற பெயருடன்..அரசகுமாரிக்கு நடனம், இசை ஆகியவை கற்றுத் தரும் பணியிலும் என மறைந்து வாழ்ந்தனர். 

இந்த கால கட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும்போது, தங்கள் போர் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கின்றது. வன்னி மரம் புனிதமாக கருதப்படுகிறது. மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்ததாக ஏட்டில் உள்ளது. மலை நாட்டு திவ்யதேசமான "திருவாரன்விளை" எனும் புண்ணிய தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததாக கூறுவர். இங்கு அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக கூறப்படும் வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள் என சில புத்தகங்களில் கூறப்படுகிறது.

விஜயதசமி அன்று ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பார்வேட்டை புறப்பாடு கண்டு அருள்கிறார். பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்துஅருளி வன்னி மரத்தில் அம்பு எய்யும் வைபவம் நடக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை பெருமாள் வேங்கடரங்கம் தெருவில் உள்ள வசந்த பங்களாவிற்கு புறப்பாடு கண்டு அங்கே பார்வேட்டை நடக்கும். பிறகு பெருமாள் பெசன்ட் ரோடு வழியாக சாத்தானி தெரு எனப்படும் துளசிங்க பெருமாள் கோவில் தெரு பக்கம் வழியாக பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருள்வார். இப்போது இந்த பங்களா இல்லாதபடியால் பார்வேட்டை வைபவம் கோவில் வாசலிலேயே நடக்கிறது. புறப்பாட்டில் தாடி பஞ்சகம் மற்றும் ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னம் சேவிக்கபடுகிறது. திருவல்லிகேணியில் இன்று 06/10/2011  நடந்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன் 


திருக்கோவில் வாசலில் வன்னி மர கிளைகள்




  குதிரை வாகனத்தில் கம்பீரமாய் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்

உபய நாச்சிமார் தனி பல்லக்கில்
 ஸ்தோத்ர பாடல் கோஷ்டி 

No comments:

Post a Comment