To search this blog

Sunday, April 2, 2023

Swami U. Ve. Madhurakavi Annaviyar passes away !

Sad to hear the passing away of sampradhaya semmal Madhurakavi Annaviyar swami.

 


Sri Vaishnavam  dates back to centuries – following glorious principles  handed over to us through many generations by our Azhwargal and later by  Acharyars which include Sri Ramanujar and Sri Manavalamanunigal.   

    ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர். ஸ்வாமி  நம்மாழ்வாரை மட்டுமே கொண்டாடிய மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் மறைவுக்கு பின்னர் அவருடைய தங்கத்தினாலான திருமேனியை ஊர் ஊராக எடுத்துச் சென்று அவர் புகழ் பாடி வந்தார்.   

"தேவு மற்றறியேன்" என ஆசார்யனான  நம்மாழ்வாரை மட்டுமே பூஜித்த மதுரகவிகள், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்த  பதினொரு பாடல்களிலும் எம்பெருமானைப் பற்றி கூட  பாடாமல் தனது ஆச்சாரியரான நம்மாழ்வாரை பற்றி மட்டும் பாடியிருப்பதன் மூலம் ஆச்சாரிய சம்பந்தத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.  இவரது வம்சத்தவர் சுவாமி மதுரகவி அண்ணாவியார்.    ஸ்ரீ உ வே மதுரகவி வகுளாபரண பட்டர் அண்ணாவியார் ஸ்ரீனிவாசன் சுவாமி  தம் 75வது வயதில்  இன்று திருநாடு அலங்கரித்தார் 

சம்பிரதாய புலமை சிறப்புற பெற்று, ஆழ்வார் திருநகரியில் கைங்கர்யம் செய்து வந்த இவர், அற்புதமாக கவிதை எழுத வல்லவர். மறைந்த கவிஞர் கண்ணதாசன் போன்றொருடன் நட்பு கொண்டவர். திருவல்லிக்கேணி ஏனைய திவ்யதேசங்கள் சென்று வருவார். திருவல்லிக்கேணியில் ஸ்ரீமன் MA வேங்கடகிருஷ்ணன் கீதாசார்யன் பத்திரிகை ஆரம்பித்த காலத்தில் (1977 முதலே) இவருடன் சற்று பரிச்சயம் ஏற்பட்டது.  ஓரிரு தடவை நவ திருப்பதி செல்லும்போது இவரை சந்தித்து அளவளாவி இருக்கிறேன். மிக அன்புடன், இன்சொல் பேசி பழகும் சமர்த்தர்.

 


இவரது மறைவு ஸ்ரீவைஷ்ணவ பேரவைக்கு, நம் தென்னாசார்ய சம்பிரதாயத்திற்கு பேரிழப்பு.  மண்ணுலகில் இருந்து சென்று ஸ்ரீமன் நாரணனுக்கு அங்கேயே கைங்கர்யம் அவரே அழைத்துக்கொண்டார் போலும்.

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
2.4.2023 

No comments:

Post a Comment