To search this blog

Sunday, August 21, 2022

celebrating birth of Sri Krishna - Sri Jayanthi 2022

பாஹி பாஹி ஜகன் மோஹன க்ருஷ்ணா!  பரமானந்த ஸ்ரீக்ருஷ்ணா !!! 

தேவகீவஸுதேவ, நந்தன க்ருஷ்ணா!  …திவ்ய ஸுந்தர ஸ்ரீக்ருஷ்ணா !!!

Sreekrishna at Thiruvelukkai divyadesam

 

Today 21.8.2022 is   a day of great significance, for we Celebrate the ‘Birth  of Bhagwan Sri Krishna’ following Pancharathnam at Thiruvallikkeni and other divyadesams.  Ithihasa Puranas are the fundamentals to tenets of Vaishnava philosophy and one can learn everything in Sri Ramayana and Mahabaratha.  Srijayanthi denotes the birth of Bhagwan Sree Krishna is the  most acclaimed day  ~     -  Sri Periyazhwar sings that – people living in those beautiful mansions, spilled oil and turmeric powder on one another, in celebrations thus slushing the portico of Sri Krishna’s house.  .. ..

श्री कृष्णं भज मानस सततं

श्रित जन परिपालं गोपालं बालम् !!  

Mathura is the holy place where Lord Krishna was born…. ~ the centre of what is fondly referred as Braj bhoomi.  Remember Lord was born in a prison cell at Mathura, the capital of   Surasena kingdom ruled by Kamsa, the maternal uncle of the Lord.  This is a very old place dating back to Ramayana days.  According to the Archeologists, the Ikshwaku prince Shatrughna slayed a demon called Lavanasura and claimed this  land.  By some accounts this place was a densely wooded Madhuvan.   This place was closely associated with history too.  Centuries later,  Mathura was one of the capitals of Kushan dynasty. Megasthenes, writing in the early 3rd century BCE, mentions Mathura as a great city.

பரம்பொருள் எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர்  அவதார மஹிமை- ஸ்ரீ வேதவியாசர் அருளிச்செய்த ஸ்ரீ மஹா  பாகவதத்தில்  சிறப்புற கூறப்பட்டுள்ளது.

பகவானாகிய ஸ்ரீமந்நாரணர்   பூமிபார நிவர்த்திக்காக வசுதேவரது இருதய கமலத்தில் பிரவேசித்ததினால் சூரிய பகவானைப் போல விளங்கிக்கொண்டிருக்கிற  அவ்வசுதேவரிடத்தினின்று சுசீலையான தேவகி தேவியானவள் பகவத் ரூபமான கர்ப்பத்தை யடைந்தாள் . அக் காலத்தில் குளிர்ந்த முகாரவிந்தத்தையுடைய தேவகிதேவியை கம்சன் பார்த்து இந்தப்  புண்ணியவதி கர்ப்பத்தில் தற்போது விளங்குகின்ற இந்தக் குழந்தை என்பிராணனை அபகரிக்க வந்த ஸ்ரீ ஹரியேயாக இருக்க வேண்டும் . இவள் பூர்வத்தில் வகித்த கர்ப்பங்களில் இப்படிப்பட்ட ஓளியை நான் கண்டதில்லை என்று , உடனே தேவகிதேவியைக் கொல்ல நினைந்தும் , அப்படிச் செய்வதால் பழியும் பாவமும் தன்னைச் சூழ்வதோடு சகலராலும் வெறுக்கப்பட்டு கடைசியில் கொடு நரகிற்கிரையாக வேண்டுமேயெனும் பயத்தால் அவ்விதம் செய்யாதொழிந்து, ஸ்ரீஹரியினது திவ்வியாவதாரத்தையே எதிர்பார்த்துக்  கொண்டிருந்தான் .

இந்தச் சமயத்தில் சதுர்முகனும் , சங்கரனும் , இந்திராதி தேவர்களும் , ஸ்ரீ நாரதாதி சமவ்த ரிஷிகளும் ஆகாயத்தில் எழுந்தருளி , இரண்டு கைகளையும் சிரசின்மேல் குவித்துக்கொண்டு, வசுதேவர் தேவகிதேவி இவர்களுக்கு மாத்திரம் பிரசன்னமாகும்படி ஸ்ரீ ஹரியைத் துதி  செய்யத் தொடங்கினார்கள் .  கொடிய இருளை நீக்கி பூமியை விளங்கவைக்கின்ற  குளிர்ந்த கிரணங்களை வீசும் வெள்ளியச் சந்திரன் கீழ்த்திசையில் உதிப்பதுபோல் , தெளிந்த அமுதம்போலும் அழகுவாய்ந்த தேவகிதேவியினிடத்தினின்றும் பிரகாசம் பொருந்திய நீலமணியினது நிறம்போலும் திருமேனியுடைய பகவான் ஆவணி மாதத்தில் அஷ்டமி திருநாளில், ரோகிணி நக்ஷத்திரத்தில் அவதரித்தார் .

                     The dark ocean-hued Lord Krishna should come to our homes – at our homes we should have Him leave His imprints of one foot etched with the conch (Sangam) and the other with the discuss-(Chakram) giving us waves of lasting joy that rise over and over again,  as Lord Krishna comes  toddling.

Bhagwan Sri Krishna at home



கண்ணன் பிறந்த இந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லாரது இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடுகிறோம். யசோதை ஸ்ரீக்ருஷ்ணருடைய திருப்பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும்  இட்டு கண்ணனை கொஞ்சி சீராட்டி வளர்த்தாக பெரியாழ்வார் பாடியுள்ளார்.  அந்த குழந்தை கண்ணன் நம் இல்லங்களுக்கு தவழ்ந்து தளர்நடையிட்டு வரும் அனுபத்தை ரசித்து, இல்லங்களில் கண்ணனின் திருப்பாதங்களை வரைந்து,  பூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும் பக்ஷனங்களையும் படைத்தது நாம் கொண்டாடுகிறோம்.

குழவி தளர்நடை காண்டல் இனிதே  .. .. .. தளர்நடை !    குழந்தைகள் வளரும் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு விதமான இனிமை.  குழந்தை தவழ்ந்த  பிறகு, நின்று, இரண்டொறு அடிகள் எடுத்து வைக்கும் போது - விழுந்துவிடுமோ என பெற்றோர் ஐயுறுவர்.  இந்த பருவத்திலே  குழந்தைகள் தடுமாறி நடப்பது போன்ற நடை.  தளர்நடை.  மாயக்கண்ணனின் பிறப்பின் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து பாடிய பெரியாழ்வார் - தளர்நடை பருவத்தையும் சிலாகிக்கிறார். 

Mathura is the holy place where Lord Krishna was born….  by some accounts this place was a densely wooded Madhuvan.   This place was closely associated with history too.   The land of Braj is full of sacred places, revered on account of their being the reputed haunts and homes of Krishna. The pilgrims can never rest until they have made the round of these holy shrines, and hence, especially upon the occasion of Krishna's birthday, called JanmAshtami, falling in the month Bhadon, corresponding with our August-September, in the midst of the rainy season, they may be found by the thousands making the Ban Jathra, or perambulation of Braj. The distance travelled is popularly said to be eighty-four kos, or one hundred and sixty-eight miles, with Mathura as the central point in the circle.  The pilgrims naturally start from the holiest place in the holy city of Mathura, namely, Visrant Ghat. The first halting place is Mahaban, some four or five miles southwest of Mathura, in the present village of Maholi, lying back from the river about the same distance.   

At the place where Lord Krishna was born now exists a Temple popularly known as ‘Janmasthan temple’  -  Kesava Deo Temple considered most sacred for all Hindus.  There is a huge complex comprising of a small temple, the Janmasthan, gallery, a huge temple later built by Dalmiyas – the prison cell – the exact place where Lord Krishna was born is under a doom – all heavily fortified and guarded these days.  At the Janmasthan is the most beautiful  Kehsav Dev(Krishna), the worshipped  deity of this temple. According to traditions the original deity was installed by the  great-grandson of Krishna. 

This temple is considered a monument of Gupta period (320 to 550 CE)which was destroyed in 1661 CE by Aurangzeb. Vrindavan is the twin town of Mathura and there are other holy places of Gokulam and Govardhana giri – all in the vicinity.   Here some history ~~ of the plunder and ruins that the place has withstood :  

 ‘Mathura’ as recorded in British history –  states that a few centuries ago, the District was widely the two tracts differing in  character.  Varaha Mihira, writing in the latter half of the fifth century to speak of Mathura as consisting at that time also of two very dissimilar portions. For, in the 16th section of the Brihat Sanhita, he includes its eastern half, with all river lands (such as is the Doab), the western half, with the Bharatas and Purohits and other managers of religious ceremonies.  The Chinese pilgrim, Hwen Thsang, describes the circumference of the kingdom of Mathura as 5,000 li, i. e., 950 miles, taking the Chinese li as not quite one-fifth of an English mile. The people, he says, are of a soft and easy nature and delight to perform meritorious works with a view to a future life. The soil is rich and fertile and specially adapted to the cultivaiion of grain.  He mentions of Cotton stuffs of fine texture; obtainable  gold ; while the mango trees are so abundant that they form complete forests.  








Krishna's birthplace is shown at the back of the Katra, near the site of the temple of Kesva Deva, now occupied by the mosque of Aurangzeb, built in 1669. It is on the margin of a large quadrangular tank called Potara  Kund, where it is said Krishna's "baby linen" was washed. It is a small room called Janam Bhoomi, "the birthplace/' or Karagrah, "the prison house," where the parents of Krishna, Basudeva and Devaki, were imprisoned. The Arina, where Krishna killed Kansa, is to be found outside of the city opposite the civil dispensary, and is known by the name of Kans ka Tila, or Rang Bhumi. The four principal entrances to the city are called the Brindaban, Dig, Bharatpur, and Holi Gates. The latter is also called the Hardinge Gate, in honor of the late Mr. Bradford Hardinge, who was magistrate and collector at the time the beautiful and elaborately carved stone arch was erected over the main street leading from the civil station into the city. The center of the portal is surmounted with a clock.  

In 1944, Madan Mohan Malviya was distressed at plight of the site and arranged for purchase of land from Raja Krishna Das of Benaras; then  Jugal Kishore Birla of Birla group took  the leading role to fulfill the wishes of Malviyaji and formed a private trust in 1951 to which the rights of land were later transferred. Jaidayal Dalmia of Dalmia Group was another leading personality, who took untiring efforts and the temple was finally constructed over the site. The trust which runs the temple has a glorious list of Trustees besides Birla and Dalmia family members.   

Though this modern temple attracts pilgrims, the original place of birth lies within the complex -  a small room  of  a prison cell, where it is  fully believed that Lord Krishna was born.  There is a mosque overlooking this place.  Here are some photos of Sri Janmasthan of Sri Krishna at Mathura ~ photos of the entrance only as the temple premises is heavily guarded and cameras are not allowed these days.  On the day of Gokulashtami huge crowds would gather and sing paeans in praise of our Great Lord Krishna

The birth of Lord Sri Krishna at Mathura to Vasudeva and Devaki is celebrated with gaiety everywhere.  While some celebrate the coming of Lord Krishna to this Universe on Ashtami day as ‘Gokulashtami’ – in South India, it is more with the star of ‘Rohini’ and the birth day is being celebrated as : Krishna Jayanthi, Janmashtami, Gokulaashtami, Sri Jayanthi and more – all various names celebrating the birth of Bhagwan Lord Sri Krishna in this Universe on the Ashtami (8th day of dark half of Krishna paksha) on the Rohini Nakshathiram.  This year, Srijayanthi is being  celebrated grandly at Thiruvallikkeni and other divyadesams today 21.8.2022. .

Sreekrishna at Pejawar mutt above and at  Dusi Mamandur below



திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் வாழும் நமக்கு - கண்ணன் - வட மதுரையிலும், கோகுலத்தில், விருந்தாவனத்திலும், குருவாயூரிலும், உடுப்பி, இன்ன பிற புண்ணிய ஸ்தலங்களிலும் - எங்கும் உளன்.  எங்குமுளன் கண்ணன் !  ~ அத்தகைய சிறப்பு வாய்ந்த மஹாபுருஷன், இன்று நம் இல்லங்களிலே குழந்தையாக  பிறந்து தவழ்ந்து, தளர்நடையிட்டு, நமக்கு அருள் பாலிப்பதை கொண்டாடி மகிழ்வோமாக ! பாலகண்ணன் பிறந்து வளர்ந்த வைபவத்தை விமர்சையாக பாசுரமிட்டு  கொண்டாடும் பெரியாழ்வாரின் வார்த்தைகள் இங்கே.  

கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்  என்பன நவரத்தினங்களாம்.  கால்களுக்கு இடுகின்ற செம்பஞ்சு மருதாணி என்பனபோல  ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில்  பத்து விரலும் - நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என திருவாய்ப்பாடி பெண்டிர்களை அழைத்து மகிழ்த்தனராம். 

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்  எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே   ஒண்ணுதலீர்  வந்து காணீரே. 

பெரியாழ்வார் தாமே யசோதையாக - திருவாய்ப்பாடி மகளிரை அழைத்து கண்ணனது பெருமைகளை உரைக்கிறார்.  முத்துக்களையும், ரத்னங்களையும், வஜ்ரங்களையும், பளபளக்கும் மாற்றுயர்ந்த பொன்னையும் மாறிமாறிப் பதித்து  சேர்த்தாற்போலே, திருமேனியெங்கும், மணிவண்ணன் என மணிபோன்ற வர்ணத்தையுடையனான குழந்தை கண்ணனது  திருவடிகளிலுள்ள பத்து விரலும் ஒன்றோடொன்று  ஒத்து  அமைந்திருக்கும்படியை, ஒளிபொருந்திய நெற்றியையுடையீர்காள் !  காணீர் !  வந்து காணீர்!

Children as Krishna @ Thiruvallikkeni  

பாசுர விளக்கம் : அற்புத சம்பிரதாய களஞ்சியம் - திராவிடவேதா இணையம்.  கச்சி ஸ்வாமிகள் ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை.  

At every house, We celebrate the birth of Lord Sri Krishna –

Happy Sri Jayanthi 2022  

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.8.2022

  

1 comment: