To search this blog

Sunday, September 22, 2019

Celebrating the glory of Acarya Ramanuja ~ புரட்டாசி மாச திருவாதிரை 2019


Glory to num Iramanusan !  ~ today is Thiruvathirai nakshathiram in the month of Purattasi – we hail the birth star [monthly] of our Great Acarya Swami Ramanujar.


இன்று புரட்டாசி மாச திருவாதிரை நக்ஷத்திரம் ~ எம்பெருமானார் ராமானுஜர் திருவவதார தின - மாச சிறப்பு.  திருவரங்கத்தமுதனார்  - மானுடர்களை,  மேகம்போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’ என்று (அதிவாதமாகச்) [exaggeration] சொல்லி புகழ மாட்டேன் என்கிறார் !!   

People naturally get attracted to poems, nay not the variety the modern day blokes write for Cinema.  Poets tend to exaggerate.  In philosophy, poiesis (from Ancient Greek) is "the activity in which a person brings something into being that did not exist before."  Poiesis is etymologically derived from the ancient Greek term that  means "to make".  Figurative language refers to the color we use to amplify our writing. It takes an ordinary statement and dresses it up in an evocative frock. It gently alludes to something without directly stating it.  A metaphor is a figure of speech in which a term or phrase is applied to something to which it is not really applicable in order to suggest a resemblance, the cliché is ‘like the moon !’


கவிதை - என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய  இலக்கியக் கலை வடிவம் ஆகும்.  பல சிறந்த கவிஞர்கள் ஏழ்மையில் வாழ்ந்ததாய் வரலாறு உரைக்கிறது.  அரசவை கவிஞர்கள் அரசனை, சந்திரனுக்கும் கடலுக்கும் ஒப்பிட்டு, அவர்களை மிக உயர்வாக போற்றி பாடி பரிசுகள் பெற்றனராம்.  திருவல்லிக்கேணி மண்ணிலே வாழ்ந்த பாரதியார் அப்படிப்பட்டவரல்ல ! -   இன்றைய சினிமா பாடலாசிரியர்கள் போலல்லாமல் பாரதியார் உரைத்தது : - 'நமக்கு தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்;  இமைப்பொழுதும்  சோராது இருத்தல்".   புகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்கும் - அனாதி காலமாகவே அளவைஉயர்த்தி புகழ்தல் வழக்கில் இருந்துள்ளது போலும். 

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு சிறப்பான பிரபந்தம் 'இராமானுச நூற்றந்தாதி' - இது திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது.  நம் திவ்யதேசங்களிலே - ஆழ்வார் ஆசார்யர் சாற்றுமுறை தினங்களிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் 'இராமானுச நூற்றந்தாதி'  சேவிக்கப்பெறுகிறது.  திருவரங்கத்தமுதனார் திருவரங்கத்திலே மூங்கில் குடியில் பங்குனித் திங்கள் அஸ்த நன்னாளில் அவதரித்தவர். திருவரங்கக் கோவில் பணிகளைச் செய்துவந்த இவர்,  திருவரங்கத்து திருக்கோவிலை நிர்வாகம் செய்து,  “பெரிய கோயில்நம்பி” எனும் பெயர் பெற்று திகழ்ந்து வந்தார். ஸ்ரீமத் ராமானுசர் கோயில் வழிபாட்டு முறையினை ஒழுங்குபடுத்தினார்.

ராமானுஜரால் ஈர்க்கப்பெற்ற திருவரங்கத்தமுதனார் ராமானுஜரின்  அடியாரை மாறிய பின், குருவின் பெருமையைப் போற்றும் விதமாக ராமானுஜரைப் பற்றி ஒரு அந்தாதி எழுதிக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றிய போற்றுதல் அதிகமாக இருப்பதால், அந்த ஓலைச் சுவடியை வாங்கி வைத்துக்கொண்டார். அவரின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய திருவரங்கத்தமுதனார், இன்னொரு முறை முயற்சித்தார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். இதை ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக்கொண்டாராம்.

எம்பெருமானாரை தவிர ஒரு தெய்வத்தையும் வணங்க மாட்டேன்; எந்த மானுடரையை உயர்த்தி கவி பட மாட்டேன், என உடையவரையே தஞ்சமாக கொண்டு அமுதனார் பாடிய இராமானுச நூற்றந்தாதியில் இருந்து ஒரு சிறப்பான பாடல் இங்கே: -

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்*
புயலே எனக்கவி போற்றி செய்யேன், பொன்னரங்கமென்னில்
மயலே பெருகும் இராமனுசன்  மன்னு மாமலர்த்தாள்*
அயரேன் அருவினை என்னையெவ்வாறின்றடர்ப்பதுவே?


Thiruvarangathu Amuthanar in his glorious work contemplates that he shall seldom offer worship to any other God on earth, will not praise some mortal with high sounding words like  ‘you are akin to a cloud that gives rain’ – one shall never forget the lotus feet of our Acharyar  Sri Ramanujar who unbountiful love flows like a cloud on the mere mention of holy Thiruvarangam.  To those, karma can never approach nor do any harm.  



Today  [22.9.19] had the fortune of worshipping Sri Adhi Kesava Perumal and Sri Mayuravalli thayar at Thirumayilai and could attend thiruveethi purappadu of our Acaryar Swami Ramanujar in the mada veethis around Chithirai kulam. Here are some photos of the purappadu.  Immediately thereafter could attend Ramanuja noorranthathi rendering at Sri Madhava Perumal koil also.

உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி.  நம் ஆசார்யர்  ஸ்ரீ ராமானுசரின்
புகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை  கற்று, பாடி  அனுபவிப்போம்.

adiyen Srinivasa dhasan.










No comments:

Post a Comment