To search this blog

Monday, February 28, 2011

Thirukurugoor divyadesam [Azhwar Thirunagari] - Nava Tirupathi - Mathurakavigal purappadu

Sri Vaishnavam or Vaishnava culture dates back to centuries handed over to us through many generations by our Acharyars which include Sri Ramanujar and Sri Manavalamanunigal.  The collection of songs by Azhwars were organised by Sri Nathamunigal.   The followers of Sri Vaishnavam will worship Lord Mahavishnu in his Supreme form as Sriman Narayana and do service to all other srivaishnavaites.

Worshipping at temples and doing kainkaryam at temples, especially in the Divyadesams (those temples on which Azhwars have sung hymns) is of great significance.  Blessed are those who live in the punya bhoomi where Lord performed his leelas thousands of years ago and places visited by Azhwaars and Acharyans .  

There are many divyadesams in the vicinity of Tirunelveli also known as Nellai, an ancient city with rich cultural heritage.  This place is located on the western side of Tamirabarani river and is known for its tamil literature.   Tamirabarani is known as “van poru nal” in divya prabandham.  This river originates from the famous Agastyar koodam peak in the hills of Western Ghats and winds its way  to the sea near punnaikayal.  It provides water for irrigation and the belt is rich with paddy and plantain crops.  From Nellai, one can visit the divyadesams of ‘Nava Tirupathi’. The nava thirupathi divyadesams are located on either side of Thamarabarani river as one travels towards Thiruchendur.  Amongst the Nava Tirupathi sthalams is the famous Thirukurugoor.

The Moolavar here is Aathi Nathan in standing posture. The lotus feet of the Moolavar idol is believed to be inside the earth. Uthsavar is ‘Polinthu Nindra Piraan’ and thaayar is – Aathinatha nayaki / Thirukurugoor nayaki.  

This temple was sung by Sri Nammazhwar in this Thiruvoimozhi (10 songs). It is here Sri Nammazhwar was born.   His birth occurred on the auspicious poornima day of Tamil Vaikasi month in Visakha nakshathiram.  He was born to Kari and Udayanangai.  Udayanangai’s birth place was Thiruvanpathisaram (of which I made a recent post : -  திருவண்பரிசாரம் )

The Azhwar at his birth was unusual, refused to take milk, did not respond to people and lived in the tamarind tree at Thirukurugoor.  This tree is now inside the temple precincts and is worshipped, it flowers but does not yield fruits.  The other Azhwar Sri Mathurakavigal born in nearby Thirukkolur was lead from Ayodhya by a divine light to this place.  He came and identified the genius of Nammazhwaar.  Mathurakavigal was so attached to Nammazhwaar that he sang only in praise of Nammazhwaar and considered his duty to spend life devoted to Nammazhwaar.

Nammazhwaar has greatly contributed and his works are Thiruvaimozhi (1102 verses), Thiruvirutham (100), Thiruvasiriyam (7) and Periya Thiruvanthathi (87).  It is further believed that the presiding idol of Nammazhwar was made by Mathurakavigal by boiling the water of Tamirabarani, which contains copper.  This is also the divyadesam where our Acharyan Sri Manavala Mamunigal was born. 

Recently had the great fortune of worshipping at this place.  It was evening and could partake in the purappadu of Sri Mathurakavi azhwaar also.

Some photos taken during my visit are also posted here.  Adiyen – Srinivasa dhasan.

                                                              **************************************


திவ்யதேசங்களில் தொழுதல் மிகவும் உகந்தது. பல திருப்பதிகள் அருகுஅருகே திகழும் இடம் திருநெல்வேலி.  இங்கே நவ திருப்பதிகளுள்  ஒன்றாக திகழும் திவ்யதேசம் திருக் குருகூர். 

திருவாய்மொழி தனியனில்   : -
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து.

நம்மாழ்வார் தமது திருவாய்மொழி நான்காம் பத்து - பத்தாவது திருவாய்மொழியில் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தை விளக்கி இவ்வூரின் பெருமையைப் பாடியுள்ளார்.

" நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் *
வீடில் சீர்ப்புகழாதிப்பிரான், அவன் மேவி உறைகோவில் *
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருகுருகூரதனை *
பாடியடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் ! பரந்தே "

பாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் (வண்பொருநல்) பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.   இந்த பொருநல் ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது.

108 திருப்பதிகளுள் ஒன்றான திருக்குருகூர்,   தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது.  நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.  இங்கு  மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது  தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.

மூலவர்     :       ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.   
உற்சவர்   :  பொலிந்து நின்ற பிரான்.
தாயார்      :  ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி.
       
ஸ்ரீரங்கத்தைப்  போலவே இங்கும் அரையர்  சேவை நடக்கிறது.   வைகாசி விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும்  (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்) - நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம்.  சடம் என்றால் காற்று.  வாயுவை முறிததனால் சடகோபன் என பெயர் பெற்றாராம்.  இந்த சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார். 

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும்.  மதுரகவியாழ்வார்ஒரு சமயம்  அயோத்தியில் இருந்து  தென் திசை நோக்கி  வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத் தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு  வந்ததும் மறைந்து விட்டது.

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்கா' புளிய மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது.  இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம்.  அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த  மதுரகவியாழ்வார்ஞான முத்திரையுடன்  மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.  

"செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என  சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத்  தின்று அங்கே கிடக்கும்"என்றார்.  மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.

இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார்   அழைத்தார். இந்த திவ்யதேசத்தை நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்து உள்ளார். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார்.

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே.

இங்குள்ள நம்மாழ்வாரின்  விக்ரஹம் மதுரகவிகளால் தாமிரபரணி நீரை காய்ச்சி உருக்கி செய்யப்பட்டதாக கொண்டாடப்படுகிறது.  நமது தென்னசார்ய சம்ப்ரதாத்துக்கு மாசற்ற செம்பொன் விசதவாக் சிகாமணிகள் என்றும், ஆதிசேஷனுடைய அவதாரம் என்றும், யதீந்த்ரரான இராமானுசருடைய மறுஅவதாரம் என்றும் புகழ் பெற்ற ஆச்சர்யர் மணவாள மாமுனிகள் ஐப்பசியில் திருமூலத்தில் அவதரித்த ஸ்தலமும் இதே

நாங்கள் திருக்கோவில் சென்ற மாலை வேளையில் மதுரகவிகள் நம்மாழ்வார் சன்னதியில் எழுந்து அருளி இருந்தார்.  வீதி புறப்பாடு கண்டு அருளினார். ஜீயர் சுவாமி கோஷ்டி துவக்கி வைத்தார். இராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டியில் அந்வயிக்கும் பாக்கியம் கிட்டியது.  இந்த திவ்ய தேசத்தில் பட்டர்கள் திருவீதியிலும் பெருமாள் தீர்த்தத்தை அளிக்கின்றனர்.

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.

புறப்பாட்டின் பொழுது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :
facade of the temple




azhwar purappadu 

 

2 comments:

  1. Great to know about the guru bakthi of Madurakavigal to Nammazhwar - Narayanan

    ReplyDelete
  2. Thirukurugoor divyadesam patriya intha katturai arumai - Adiyen dhasan Ramanan

    ReplyDelete