To search this blog

Wednesday, September 8, 2010

Dusi Mamandur Samprokshanam : தூசி மாமண்டூர் - அருள் மிகு சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில் சம்ப்ரோக்ஷணம்.


ஸ்ரீமதே ராமானுஜாய நம :

The city of Kanchi is known for its temples besides being famous for silk.  It was once the capital of Pallava kingdom which placed premium importance on architecture, with Mahabalipuram emerging as the greatest of exhibition of ‘rock architecture’.

Approx 9 kilometers away from the famous Kachi, after the river Palar lies the village of Mamandur,  for easy identification called as “Dusi Mamandur”.    In this serene village, is the small but beautiful temple of Lord Lakshmi Narayanar.    The Moolavar idol is that of Lakshmi Narayanar – Perumal in sitting posture having Sri Lakshmi on his lap.  Uthsavar is Lakshmi Narayanar and Thayar is Sundaravalli Thayar. 

After 1950, the temple was renovated with works commencing on 25.3.10 culminating with Maha Samprokshanam on 5th Sept. 2010.  Hundreds of people with lineage of this village descended on that day at the Temple and witnessed, the Samprokshanam which was conducted in the presence of the Two great Saints – Sreemath Paramahamsa Appan Parakala Ramanuja Embaar Jeeyar Swami and Sree Govinda Yathiraja Jeeyar Swami, both hailing from Sriperumpudur. 

It was indeed a memorable occasion and here are some photos taken on that great day.


ஸ்ரீமன் நாராயணனை வணங்கும் ஸ்ரீ வைஷ்ணவத்தில் எம்பெருமான் :-  பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற 5 நிலைகளில் வாத்சல்ய சௌசீல்யனாய் அருள் பாலிக்கிறார்.

தொண்டை மண்டலத்தில் காஞ்சியில் பல திவ்ய தேசங்கள் உள்ளன. நகரேஷு காஞ்சி என கோவில்களுக்கு பிரசித்தியான காஞ்சி நகரில் இருந்து சுமார் ஒன்பது கி.மீ.  தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நமது “மாமண்டூர்” . மா வண்டூர் மருவி அருகில் உள்ள தூசியுடன் இணைந்து தூசி மாமண்டூர் ஆனது.  இங்கே உள்ள சிறிய குன்றில் மீது பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனின் கல்வெட்டு உள்ளது.  திவ்ய தேசங்கள் பல இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தாங்கள் பிறந்த மண்ணும் ஊரும் பெருமைக்கு உரியன அல்லவா ! அரசாணிப்பாறை என்ற ஆறு அருகிலுள்ள பெரிய ஏரியிலிருந்து பாய்ந்து ஊருக்கு வளம் சேர்க்கிறது.

தூசி, மாமண்டூர் - இவ்விரண்டும் முறையே சடகோபுரம், மனவாளபுரம் என பழங்காலத்தில் வழங்கப்பட்டதாக ஸ்ரீ கோவிந்த யதிராஜ ஜீயர் சுவாமி தமது மங்களாசாசனத்தில் குறிப்பிட்டு உள்ளார். மறை ஓதும் அந்தணர்கள் பலர் வாழ்ந்த இப்புண்ணிய பூமியில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வைகானச ஆகமத்தின் படி உள்ள          இக்கோவிலில் மூலவர்   ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் தமது மடியில் லக்ஷ்மி தேவியை இறுத்தி இடக்கையால் அணைத்து எழுந்து அருளியுள்ளார். உத்சவர் சதுர் புஜங்களுடன் சங்கு சக்ரம் ஏந்தி சேவை சாதிக்கிறார். தாயார் ஸ்ரீ சுந்தரவல்லி மிக அழகாக எழுந்து அருளி உள்ளார். தவிர ஆண்டாள், நம்மாழ்வார், கலியன், உடையவர், மணவாள மாமுனிகள் விக்ரஹங்களும் உள்ளன.

இவ்வாறு சீர்மை வாய்ந்த மாமண்டூரில் நிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாசம் 20௦ஆம் தேதி (ஞாயிறு : 05/09/2010 அன்று) காலை 0630 மணி அளவில் ஸ்ரீ சுந்தரவல்லி சமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் விமரிசையாய் நடை பெற்றது. ஸ்ரீமத் பரமஹம்ச அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமி, ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் ஸ்ரீ கோவிந்த யதிராஜ ஜீயர் சுவாமி , ஸ்ரீ பெரும்புதூர் என இரண்டு  யதிசார்வ பௌம மகான்கள் எழுந்து அருளி இருந்து சிறப்பித்தனர்.

1950 க்கு பிறகு 25/03/210 அன்று பாலாலயம் எழுப்பப்பட்டு குறுகிய காலத்திலேயே திருப்பணிகள் முடிந்து 03/09/10 வெள்ளியன்று யாக சாலை அங்குரார்ப்பணம் துவங்கி ஞாயிறன்று (05/09/2010) மகா பூர்ணாஹூதியுடன் சம்ப்ரோக்ஷணம் மிக சிறப்பாக நடை பெற்றது. இவ்வூர் ஸ்தலத்தார் பலர் சேர்ந்து பொருள் உதவியும், சரீர சேவையும் - தெள்ளிய திட்டத்துடனும் மிக சிறப்பாக திருப்பணிகளை நடத்தி - திரு கோவில், மதில்கள், கோபுரம், விமானம், சன்னதிகள், திருமடப்பள்ளி, பிரகாரம் எல்லாம் அழகுற மிளிர்கின்றன.

திருப்பணிகளை முன்னின்று நடத்திய சபையாருக்கும் - பெரிய அளவில் பொருள் வழங்கிய மகானுபாவர்களுக்கும் - அடியேனுடைய க்ருதக்ஞைகளை தெரிவித்து கொள்கிறேன்.

சம்ப்ரோக்ஷண படங்கள் சில இங்கே

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

----------------------------------------------------------------------
மாமண்டூர்
கோவில் வாசல்
இரட்டை தெரு

யாக சாலை


பெருமாள்
தாயார்

ஆழ்வார் ஆச்சார்யர்கள்
புதிதாக சமர்பிக்கப்பட்ட வட்டில்கள் 
கோஷ்டி

 கூடியிருந்த ஊர் மக்கள்

பூர்ணாஹுதி
பெருமாள் புறப்பாடு
கோபுர சம்ப்ரோக்ஷணம்

ஸ்ரீ பெரும்புதூர் ஜீயர் சுவாமிகள்

கல்யாண உத்சவம்
 
கல்வெட்டு 

3 comments:

  1. Good depiction. Will visit and pray to God at Mamandur soon - Sundar

    ReplyDelete
  2. Very good one.. Shankar

    ReplyDelete
  3. Excellent post... everyone should feel proud of their ancestral roots and that way it should give you great pleasure - Sujatha

    ReplyDelete