To search this blog

Saturday, August 28, 2010

Thiruvallikkeni Pavithrothsavam - 2010

திருவல்லிக்கேணி திவ்ய ஸ்தலத்தில் நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருகோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சர்யர்களால் யாக யக்னங்களும்,
அத்யாபகர்களால்  திவ்யப்ரபந்த திருவாய்மொழி கோஷ்டியும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய பவித்ர மாலை சாற்றப்படுகிறது.

சனிக்கிழமை 21/08/2010 அன்று பெருமாள் புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே. மழை தூறல் காரணமாக பெருமாளுக்கு போர்வை போர்த்தி இருந்த அவசரமும் சேவிக்கலாம்.

திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி வலையில் தேடியதில் படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)

அடியேன் : சம்பத்குமார்






*********************************************************************************************




1 comment:

  1. Enjoyed the photos as also the write up on the uthsavam - Sumathi

    ReplyDelete