To search this blog

Friday, February 14, 2014

Thiruvallikkeni Masi Magam Garuda Sevai 2014

Today [14th Feb 2013] is Masi Magam.   At 05300 in the morning  Sri Parthasarathi  adorning beautiful  ornaments had purappadu astride Periya Thiruvadi ‘Garuda Vahanam’.


After a brief halt at Kangai Kondan Mandapam, Sri Parthasarathi visited the shores of Marina beach – the coast of Bay of Bengal.  “Theerthavari’  of Sri Chakkarathazhwaar was conducted.  The sea is not considered auspicious for bathing on ordinary days … but bathing in the sea is considered sacred on Pournami / Amavasyai / Grahana days [Full moon / dark moon / eclipse days]…. On this day, it is appropriate that ‘husband and wife’ together would take bathe … that too only after having a purificatory bath at home and then at Sea..

Hundreds of bakthas accompanied Sri Parthasarathi and had holy bath in the sea.  There was congregation of more Perumals ~ Srinivasa Perumal  from Egmore on Garuda Vahanam;  Mylai Sri Madha Perumal on Mena pallakku and more.   Here are some photos of the purappadu 

Adiyen Srinivasadhasan.

இன்று மாசி மகம் - மாசி மாதத்தில் பௌர்ணமி  நன்னாள். மாசி மகம் அன்று பெருமாள் கடல் மற்றும் நீர் நிலைகளுக்கு எழுந்து அருள்வது வழக்கம். இன்று அதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் அழகாக எழுந்து அருளினார்.   கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி நல்ல தம்பி தெரு வழியாக மெரினா  கடற்கரைக்கு எழுந்து அருளினார். 

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்,   வங்கக் கடலில் மெரினா அருகே (முன்பு சீரணி அரங்கம், திலகர் திடல் இருந்த இடம்) எழுந்து அருளினார்.   முன் காலத்தில் பெருமாளுக்கு அழகான பந்தல் போடப்பட்டு திருமஞ்சனம் கண்டு அருளினது ஞாபகம் உள்ளது. கால போக்கில் பல விழயங்கள் மாறி உள்ளன. சமீபகாலங்களில் பெருமாள் எழுந்து அருள்வது மட்டுமே நடை பெறுகிறது. 

அதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்  கடல் அருகே எழுந்து அருளிய உடன், ஸ்ரீ  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடை பெற்றது.  உடன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்தனர். சாதாரண நாட்களில் கடலில் குளிக்க கூடாது என்பர் பெரியோர் - இன்று போன்ற முக்கிய தினங்களில் குளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இன்று காலை  எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.




 Allikkeni Arulicheyal goshti

 Sri Chakkarathazhwar


No comments:

Post a Comment