To search this blog

Saturday, March 12, 2011

திருவல்லிக்கேணி தெப்போத்சவ திருவிழா - Varatharajar Theppam


The annual float festival at Triplicane is a grand festival.  Starting on the Amavayai day of the month of Maasi – this is held for 7 days.  The first 3 days are for Lord Parthasarathi, then followed by Sri Azhagiyasingar, Sree Ramar, Sri Ranganathar and Varatharajar. 

There is a beautiful pond by name ‘kairavini’ which was also known as ‘allikkeni’ due to the abundant lily flowers present there.  The place derived its name because of this pond – Thiruvallikkeni because of the existence of the pond having lily flowers.  
On concluding day – 10th of March 11 – Lord Varadhar was taken on the float.  The God was in the form in which he saved the mighty elephant was attacked by the crocodile.  Lord released his chakra to save the elephant and this posture of ‘Gajendra moksham’ was depicted.  One of the arms was in prayoga posture, having released the chakra – holding the azhi or the sangu in the other, holding Gatha in one and abhaya hastham on the fourth thirukaram.  It was indeed a great darshan of the Lord.  Here are some photos depicting the Theppam, Thirukolam and one taken during the hastham purappadu.

**************************************************
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் மாசி மாதம் அம்மாவாசை முதல் தெப்போத்சவம் விமர்சையாக நடை பெறுகிறது.   பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஆன திருவல்லிகேணியில் அழகான திருக்குளம் உள்ளது - இதற்கு 'கைரவிணி புஷ்கரிணி' என்று பெயர்.  இந்த திருகுளத்தில்தான் தெப்பம் நடைபெறுகிறது. திவ்யதேசத்துக்கு பெயர் வரக் காரணமே இந்த புஷ்கரிணி தான்.  ஒரு காலத்தில் அல்லி மலர்கள் மிகுந்து காணப்பட்ட இத் திருக்குளத்தில் தற்சமயம் அல்லியோ தாமரையோ இல்லை.  

முதல் மூன்று நாட்கள்  ஸ்ரீபார்த்தருக்கும். அடுத்து அழகியசிங்கர், ஸ்ரீமந்நாதர்,  ஸ்ரீராமர், வரதருக்கும் தெப்போத்சவம் நடக்கிறது. ஏழாம் நாளான 10/03/2011 அன்று வரதர் தெப்போத்சவம்.   " கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீர - ஆழி தொட்டானை' என திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்தபடி - ஆனைக்கு அருள் செய்த பெருமாளாக - சக்கரத்தினை பிரயோகம் செய்த திருகரங்களோடு ஒரு கையில் ஆழி (சங்கு) ஏந்தி, ஒரு கையில் கதை தாங்கி மற்றொரு கையால் அபயம் அளிக்கும் பெருமாளாக - வரதர் புறப்பாடு கண்டு அருளினார். 

தெப்பம், வரதர் சாத்துப்படி அழகு இங்கே சில புகைபடங்களாக.  இந்த திருகோலத்தை நன்கு கண்டுற  வரதர் ஹஸ்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு படமும் இங்கே : 
theppam - the float 
varadhar gajendra moksham thirukolam 


 varadhar during hastham purappadu 


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்  

No comments:

Post a Comment