To search this blog

Sunday, January 14, 2018

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் ~ praying our Emperuman to resolve all troubles

ஹிந்து தர்மம் ~ வேத இதிஹாச புராணங்களினாலே கட்டமைக்கப்பட்ட அநாதியான மதம்.  நாம் மென்மையானவர்கள், ஆண்டவனிடத்திலே ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.  நமக்கு கைங்கர்யமே பிரதானம். எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருத்தல் ~ அதையும் ஒரு தர்மமாக, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்தல் - நமக்கு அமைந்தது.

நமது ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்.  ஸ்ரீமந்நாராயனை கண்டவுடன் அவனுக்கு ஒருகுறையும், எவ்வித கண் த்ருஷ்டியும் படலாகாதே என திருப்பல்லாண்டு பாடியவர் நம் பெரியாழ்வார். அவருக்கு மகளாய் பூமி பிராட்டியாய் அவதரித்து, மிக எளிய பாடல்கள் மூலம் நமக்கு பக்தி இலக்கியத்தை, தீந்தமிழில் நாம் அனுதினமும் அனுசந்திக்கப்பண்ணியவர் நம் கோதைப்பிராட்டி. 

பக்தி இலக்கியத்தில் அதி உன்னதமான திருப்பாவையில் அவர் ஸ்ரீமன் நாராயணனை விளிப்பது '**குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!**'  ~  அக்கண்ணனிடத்திலே விழைந்தது  எப்பேர்ப்பட்ட உறவு ? என்றென்றும் பிரிவில்லாத, எக்காரணத்தை கொண்டும் விலகாத ஆத்ம உறவு.  ஏதோ கோவத்தில் விலக்கும் சாதாரணமான  பந்தம் அல்ல.  எம்பெருமானிடத்திலே மையல் கொண்டு, அவனிடம் கலந்த பின், அவ்வுறவு என்றென்றும் அழிக்கவே இயலாதது.  'உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது'  ~  எம்பெருமான் கூட அவ்வுறவை மாற்றவல்லனல்லன்.  இதுவல்லவோ உன்னத உயர்ந்த பக்தி நிலை. 

In legal parlance, a trust is a vehicle to pass assets to a trustee, who in turn holds those assets for a third party such as an heir.  People can create trusts and also control how and to whom the assets shall get disbursed.  To ensure that the intended purpose is served, trustees too can be chosen.  People create will, documents, register them trying to create a legacy.  Yet things can go wrong. 

Theoretically there are ‘irrevocable acts’  ~ in contract,  such are not to be changed, reversed , rectified, amended or changed even when circumstances change.  Can you imagine a perfect certain ‘irrevocable bond’ ??

Lord Sri Krishna took the avathar with birth among those who graze cattle in dense forests, grew among cowherd folks – when we dedicate ourselves to our mighty Lord, the bond with the faultless Govindha is irrevocable – eternal and ever lasting – a bond, even God cannot separate.  Thiruppavai and Nachiyar thirumozhi glitter with simple yet most powerful words that lift us and make us surrender to the eternal Sriman Naryaana.

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் *
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் *
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம் *
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு *
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது *
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை*
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே*
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

எம்பெருமான் மாசற்றவன். குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் *  காடுகளிலே கறவையினங்கள் மேய்த்த ஆயரிடையே வந்து உதித்த நம் கோவிந்தனை நமக்கு அருளுபவனாய் பெற்றது நமது பெரும் பாக்கியம்.  ஸ்வாமியான கண்ணபிரானோடு எங்களுக்குண்டான  உறவானது, யாராலும், (உன்னாலும் எம்மாலும்) ஒழிக்க ஒழியமாட்டாது.  ஞானமும் மார்க்கமும் அறியாத சாதாரணர்களான  நாங்கள் மிகுந்த அனுப்பினால் பல்வேறு நாமங்களால் அழைத்ததைக் குறித்தும், ஆச்ரிதவத்ஸலனான  நீ கோபித்தருளாமல், எல்லா அருள்களையும் தந்து, எங்களை காத்து அருள வேண்டும். 

நிற்க !  இவ்வளவு அமுதமான கவியை நமக்கு அளித்து, நமக்கு சரியான பாதையை காட்டித்தந்த கோதைப்பிராட்டியை ஒரு சத்தத்துக்கு பாட்டு இட்டுக்கட்டும் ஒரு மூர்க்கன் அரற்றியது நம்மை கண்ணீர் கசிய வைத்துள்ளது. ஆசார்யர்களும், மறை வல்லார்களும், அறிஞர்களும், நம் போன்ற சாதாரணர்களும் வருத்தத்துடன் இந்த கொடிய நிகழ்விற்கு வருத்தமும் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர். தவறு என்று நன்கு தெரிந்து இருந்தும், மூர்க்கத்தனமும், அறிவிழந்த தன்மையும் ஒருவர கலந்த தன்னிலை, தன்னெறி பிறழ்ந்தோர் மனம் திருந்தி மன்னிப்பு இன்னமும் கோரவில்லை.   இவ்வீணர்களிடம் வாதம் செய்வது நமக்கு தேவையற்றது.   




தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்து, அவனை ஆதரித்த, ஆதரிக்க நினைத்த மாக்கள் உணருமாறு நடக்க வேண்டும் என எல்லாம் வல்ல நம் இறைவனை பிரார்த்தித்து - நாம் முன்னெப்போதும் தவற விட்ட அனுஷ்டானங்களை சற்றும் விடாமல் பின்பற்றி, நம் வருங்கால சந்ததியினரையும் சரியாக ஸம்ப்ரதாயத்திலே ஈடுபடுத்துவோம்.

உபய கலையாரும்;  சைவ, மத்வ, ஸ்ரீவைணவர்களும், பக்தர்கள்,  இறைவனிடத்தில் நம்பிக்கை குறையாத ஆஸ்திகர்கள் அனைவரும்  என்றென்றும் ஒன்று சேர்ந்து, கைகோர்த்து - பிறர் மனம் நோகாமல், சற்றும் தளராமல், நம் ஸம்ப்ரதாயம் காப்போமாக !!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் **
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் **
ஸ்ரீமன் நாராயணனே சரணம் **

~  அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)

14th Jan 2018.

No comments:

Post a Comment