To search this blog

Sunday, December 3, 2017

Swami Nampillai Sarrumurai 2017 ~ தெள்ளியதா நம்பிள்ளை

Swami Nampillai Sarrumurai # Thiruvallikkeni # 2017

தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி தன்னை*
வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்த*
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது*
ஈடு முப்பத்து ஆறாயிரம்*.......

the immortal words of Swami Manavala Mamunigal in his Upadesa Rathinamalai.  இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்தது. அவரது வாய்மொழியை கேட்க குவிந்த ஸ்ரீவைணவர்களின் குழு -  நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ என்று கண்டவர் வியக்கும் வண்ணம் நம்பிள்ளையின் காலக்ஷேபங்கள் அமைந்தனவாம்.


3 decades ago or so, when traffic was much less, we used to play Cricket infront of Peyalwar sannathi in Triplicane .. .. closer was the gate of Komutti bungalow, from which some street cricketers emerged.  Inside was this tiled portion housing a small sannathi called Nampillai Sannathi. Things have changed for the better and yesterday there were close to hundred chanting Thiruvaimozhi and Iramanusa Noorranthathi – here is something on Acharyar Nampillai sarrumurai.Sri Nampillai, in the Acharya paramparai is known for his scholastic excellence.  In the Guru parampara lineage, he was the disciple of Sri Nanjeeyar and acharyar of Vadakku Thiruveethipillai. His commentary on Thiruvoimozhi known as Muppathu Aarayira(m)ppadi -  is considered as the best amongst the vyakyanams; considered equivalent to Thiruvoimozhi itself and  is celebrated as “Eedu” . 


Nam Swami was born as “Varadhacharyar” Prabhva year, 4249 kali yugadi, in Karthigai  Month in Krithikai Nakshatram.   He lived a life of 105 years in this world – from  1147 AD – 1252AD.    His life time was during the era of Chola dynasty and he was a witness to its glory, disintegration, defeat and annexation to Pandya kingdom. His Eedu also chronicles some part of the history of his time, as they are related to the temple of Srirangam. The Chola King Sundara Pandyan reportedly did the golden cover to the temple tower.Nampillai discoursed the lectures of Parasara Bhattar to his disciples Periavachaan Pillai and Vadakku Thiruveedi Pillai. who in turn employed them in their respective commentaries. “Muppathu aarayirappadi” of Vadakku thiruveethipillai based on the discourses of Swami Nampillai is considered the best.  The Oranvazhi acharya paramparai mantle passed on from Parasara Bhattar to Namjeeyar and Nampillai. Namjeeyar appreciated Varadhacharyar on his writings on Thiruvoimozhi and called him “Nampillai” Swami Manavalamamunigal has hailed Nampillai in “Upadesa Rathinamalai” which you read at the start of this post.

Nampillai of this fame has a sannadhi at Triplicane, situate at the front of Sri Bhandaram Committee place commonly known as “Komutti bungalow”. Around 100 years earlier, there was a great person by name Yogi Parthasarathi Iyengar and his wife was Yogi Singamma. Sri Yogi Parthasarathi Iyengar in his wisdom created a press for re-publishing on paper edition,  the great granthams of our Vaishnavaite mahans and in this venture established a press and persons to take care known as -  “Saraswathi Bhandram Committee” – saraswathi bhandaram meaning ‘library / treasure house’ of the works of Goddess of Learning Saraswathi. He spent his fortune towards establishing this and on this place built a temple for Sri Nampillai as the rightful person to own this treasure house. The idol of Namperumal was also installed alongside. He ensured that there would be festivities at least once a year.

This Nampillai sannadhi was renovated and re-built decoratively recently by the Committee, spearheaded by Sri MA Venkata Krishnan Swami. It now sports a broad attractive look and has entrance on Peyalwar koil street and inside the bungalow. Every year, Swami Nampillai avathara uthsavam is grandly celebrated  and here are some photos taken at sannithi today.  Sri Parthasarathi and Sri Thelliya Singar have mandagapadi here on day 5 of Brahmothsavam.நம்பூர் என்ற ஒரு சிறிய அழகிய கிராமத்திலே  வரதராஜன் என்னும் திருநாமத்தோடு திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரசித்தர் ஆனார்.  இவரது பல பெயர்களில் முக்கியமானவை :  திருக்கலிக்கன்றிதாசர், லோகாசார்யர், என்றதிருநாமங்கள்.

கார்த்திகையில் கார்த்திகை திருநாளிலே  லோகாச்சாரியரான ஸ்வாமி நம்பிள்ளை  கலியனின் புனரவதாரராக அவதரித்தார். இன்னாள்  திருமங்கைமன்னனுக்கு ஏற்ற நாள்.  திருக்கண்ணமங்கை பெருமாளை கலியன் (பெரிய திருமொழி 7-10-10ல்) மங்களாசாசனம் செய்து - : ‘மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே!”  ` ~ என்று உரைத்ததற்கேற்ப  ‘திருக்கலிகன்றிதாஸர்” என்ற திருநாமத்துடன் இவரும்,  ஆவணி ரோகிணியில்  பெரியவாச்சான் பிள்ளையும்  அவதரித்தனராம்.   கண்ணனுக்கு சாந்தீபினி ரிஷி போல், ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளைக்கு ஸ்வாமி நம்பிள்ளை ஆச்சாரியராக இருந்தருளினார்.. திருக்கண்ணமங்கைப் பாசுரம் உண்மையாயிற்று.

உபதேசரத்தினமாலையில் 66 வது பாசுரத்தில் பின்பழகிய பெருமாள் ஜீயர் தன்னுடைய ஆசார்யரான நம்பிள்ளையிடத்தில் கொண்ட பக்தியினால் தான் பரமபதம் போகவேணும் என்ற எண்ணத்தையே கைவிட்டார் என்று ஸ்ரீமணவாளமாமுனிகள் அருளிச்செய்துள்ளார்.  ஒரு ஆசார்யனின் திருமேனியில் ஒரு சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய முழுப் பற்றுதல் எவ்வளவு என்பதையே இது எடுத்துரைக்கிறது.  அவ்வளவிலே  ஆசார்யன் தனது சிஷ்யனை பேண வல்லன். "ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன், சிஷ்யன் ஆச்சார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்" - ஸ்ரீ வசனபூஷணம்.

திராவிட வேதசாகரமான நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு சில உரைகள் உள்ளன. எம்பெருமானார் காலம்வரை வாய்மொழி ஆகமட்டுமே இருந்து வந்த இவ்உரைகளை உடையவர் ஏடுபடுத்தினார். திருக்குருகைபிள்ளானது உரை "ஆறாயிரப்படி"; நஞ்ஜீயரது உரை ஒன்பதினாயிரப்படி;  நம்பிள்ளை செப்பிய நெறிப்படி பெரியவாச்சான் பிள்ளை அருளியது இருபது நாலாயிரம்; வடக்கு திருவீதிப்பிள்ளை நன்குரைத்தது  *முப்பத்துஆறாயிரப்படி* -  இது திருவாய்மொழிக்கு ஈடாக உள்ளதால் #ஈடு#  என சிறப்புப் பெற்றது. திருவாய்மொழிக்குத் தானே பெரியவாச்சான் பிள்ளை அற்புத  வ்யாக்கியானம் செய்திருப்பினும்,  கலிகன்றி தாஸரான நம்பிள்ளை மூலமே அத்திருவாய்மொழிக்குச் சிறந்ததொரு வ்யாக்யானத்தை வெளியிடுவித்தான் எம்பெருமான். மூலத்துக்கு ஈடான உரை என்றபடி அவ்வ்யானத்திற்கு “ஈடு” என்றே பெயர் வந்தது.
இவ்வாறு நமக்கு அரும்பெரும் வார்த்தைகள் உரைத்த நம்பிள்ளையின் நன்னாளிலே நமது ஆசார்யர்கள் தாள் பற்றி எம்பெருமானிடத்திலே சென்றடைவோமாக.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (  Srinivasan Sampathkumar)                        2nd Dec 2017
No comments:

Post a Comment