To search this blog

Monday, December 18, 2023

Listen to Sri Andal Thiruppavai every day ! *வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு *விசேஷ காரியங்கள் பகவத் சங்கல்பமும் நம் முயற்சிகளும் இல்லாமல் தலைக்கூடா !  அக்காரியம் தலைக்கட்டுமளவும் சிலவற்றைப் பரிஹரிக்க வேண்டுமென்றும் சிலவற்றைப் பற்றவேண்டுமென்றும் அந்த வீடுபற்றுக்களை முதலில் ஸங்கல்பித்துக்கொள்ள வேண்டும்.  திருப்பாவை ஓர் அற்புத காவியம். மார்கழி மாதத்தில் பல இடங்களில் திருப்பாவை உபன்யாசங்கள் நடைபெறும்.  திருக்கச்சி ஸ்ரீநிதி அக்காரக்கனி ஸ்வாமியின் இனிய வார்த்தைகள் சில இங்கே :   

                உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் திருப்பாவை உபந்யாஸம் எங்கு நடந்தாலும்; நாள் தவறாமல் அவசியம் அதில் கலந்து கொண்டு கேளுங்கள். செவிச் செல்வத்திற்கு இணையான செல்வமில்லை.. திருப்பாவைக்கு இணையான நூலில்லை!  நற்போது போக்குவதற்கு மார்கழி மாதம் போல் துணையாவதொரு மாதமுமில்லை. கேட்பதற்குத் திரளாக மக்கள் கூடினால் தான் பிரவசனம் செய்பவருக்கும் உற்சாகம் உண்டாகும்.  எனவே எத்தனை வேலைகள் இருந்தாலும் அவைகளை ஒதுக்கி வைத்து,  தயவுசெய்து இந்த ஒரு மாத காலம் ஆண்டாள் புகழைக் கேட்டும் பாடியும் இன்புறுங்கள். 

திருப்பாவை உபந்யாஸங்களை ஆதரிப்பீர்!  ஆண்டாள் ரங்கமன்னர் அருள் உண்டாகுக!

 


For Srivaishnavaites, margazhi has added significance –  there would be Adhyayana Uthsavam and during the month the Thiruppavai of Andal is recited in the morning.    

நேற்று இரவு  "தனுர் மாதப்பிறப்பு"  மார்கழி ஒரு அற்புதமான காலம்.  அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் அதி காலையில் ஆண்டாள் அருளிய  "திருப்பாவை"   சேவிக்கப்பெரும்.  ஆண்டாள் மட்டுமே -  பிராட்டி/ஆழ்வார் கோஷ்டி இரண்டிலும் இருப்பவர்.  திருப்பாவை பாவை நோன்பின் உயர்வை பறை சாற்றுவது.  முதல் பாட்டில் ஆய்ப்பாடி சிறுமிகளை அழைத்ததற்கு ஏற்ப கூடிய கோபிகைகளின் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து வையத்து வாழ்வீர்காள்!” என்று ஆச்சரியப்பட்டு அழைத்து நாம் செய்ய வேண்டிய நோன்பிற்கு செய்யவேண்டிய கிரியைகளை கேளுங்கள் என்கிறாள்.  திருப்பாவையில் இரண்டாவது பாசுரம்  பாவை நோன்பின் போது எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும், பாவை நோன்பில் எவ்வாறு ஈடுபட வேண்டும் ஆகியவற்றை  விளக்குகிறது. : 

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு *

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் *

பையத்துயின்ற பரமனடி பாடி *

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி *

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் *

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் *

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி *

உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்! தினமும் விடியலில் நீராட வேண்டும்; கண்ணுக்கு மை இட்டுக்கொள்வது, கூந்தலுக்கு மலர் சூடிக் கொள்வது போன்று நம்மை அழகு படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது; நமது முன்னோர்கள் தவிர்த்த தீய காரியங்களை நாமும் தவிர்க்க வேண்டும்; பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீணாக அடுத்தவர் மீது கோள் சொல்லக் கூடாது; குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு தானமும், துறவிகளுக்கு பிச்சையும், அவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு இடவேண்டும்; அவ்வாறு செய்த பின்னரும், நாம் புகழத்தக்க செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றும், இன்னும் செய்ய வேண்டிய நற்செயல்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்; மேலே குறிப்பிட்டவாறு செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும், தவிர்க்க வேண்டிய செயல்களைத் தவிர்த்தும், நாம் உய்யும் வழியினை நினைத்தவாறே, பாவை நோன்பில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக. 

Thinking of Sriman Narayana and surrendering at the Lotus feet of Lord Narayana only will lead to us salvation. In 30 beautiful pasurams, Andal eulogies Lord Sriman Narayana showing us the way to get near the lotus feet of Lord.    Here are some photos of Sri Andal Nachiyar at Thiruvallikkeni divyadesam taken during Neeratta uthsavam earlier this year (Jan 2023)

Sri Andal thiruvadigale saranam.

 
adiyen  Srinivasa  dhasan.
Mamandur  Veeravalli  Srinivasan  Sampathkumar
18.12.2023 

No comments:

Post a Comment