To search this blog

Sunday, December 10, 2023

Easy Accessibility ! ~ பத்துடையோர்க்கு என்றும் பரன் எளியனாம்

எளியன்  என்ற  பெயர்ச்சொல்லுக்கு  - 'வறியவன், இலகுவாய் அடையப்படுபவன், வலிமையில்லாதவன், அறிவில்லாதவன், குணத்தில் தாழ்ந்தவன்' - என பொருட்கள் காணப்படுகின்றன.  எனினும் 'எளியன்' என்பது உயர்ந்த குணத்தை குறிக்கும் சொல்.அரசனிடம் அல்லது அமைச்சர்களிடம் அல்லது அரசாங்க அலுவலகத்திடம் நீதிக்கோ உதவிக்கோ வருபவர் காண்பதற்கு தோற்றத்தால் அறிவினால் வறியவராக (எளியவராக, அறிவில்லாதவராக) தோன்றினால் அவரிடம் மனம் வருந்தக்கூடிய கடுமையான வன்மையான சொற்களை பேசாது சினத்தை காண்பிக்காது இருந்தால் அவ்வரசரையும் அந்த அரசையும் அந்த நாட்டையும் போற்றி புகழ் பாடும் இவ்வுலகமும் இந்நாட்டு மக்களும்.  புறநானூற்றுச் செய்தியொன்று சங்கக்காலத்து சேரமன்னனான இரும்பொறை நாட்டினை இவ்வாறுப் போற்றுகிறது.

“மாந்தரல் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே

புத்தேளுலுகத் தற்றெனக் கேட்டுவந்து” (புறம் 22:34-5).

ஆள்பவர்கள் காட்சிக்கு எளியராயும், இனியமொழி உடையராகவும் இருத்தலை, கீழ்காணும் புறநானூற்று வரிகள் தெரிவிக்கின்றன. பொருட்பாலில் இறைமாட்சி என்னும் தலைப்பில் உள்ள திருக்குறள் :

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்” (386)

என்னும் குறட்பா அறிவுறுத்துகின்றது. இறை எனப்படும் அரசனுக்கு இருக்க வேண்டிய மாண்புகளைக் கூறும் பகுதி இது. காட்சிக்கு எளியன் என்னும் அணுத் தொடருக்குள் ஆழ்ந்த அகன்ற அருங் கருத்துகள் பல பொதிந்து கிடக்கின்றன. காட்சிக்கு எளியன் என்றதும், பிறருக்கு எளிதில் காட்சி கொடுப்பவன்-அதாவது-யாரும் வந்து எளிமையாய்க் காணக்கூடியவன் - எப்போதும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும்- மக்கள்  எளிமையாய்க் காணக்கூடியவன் -    எனும் கருத்துரை நினைவுக்கு வரும்
Chief Justice of India DY Chandrachud  stressed on the need for making courts accessible for all and the role that tribunals can play in making that happen. He was speaking on the occasion of the inauguration of the new Central Administrative Tribunal building. 

According to the CJI, “A rightful but weary pensioner or a wrongly-terminated single mother may not withstand long and winded litigation or outlast her much more powerful opponent, usually the state. She may continue to have both the substantive right and the right to enforce it. But the prospect of a prohibitively long and costly legal battle may stifle the right at the very outset or overshadow the right in the course of the journey. So the very existence of administrative tribunals is premised on their ability to make this journey less onerous for litigants in matters of public employment, which I believe that they have,” he said.  It was a statement on Courts becoming more accessible to common man !  

Accessibility can be viewed as the "ability to access" and benefit from some system or entity. The concept focusses on enabling access for people with disabilities, or enabling access through the use of assistive technology; however, research and development in accessibility brings benefits to everyone.  Therefore, an accessible society should eliminate digital divide or knowledge divide. Accessibility is not to be confused with usability, which is the extent to which a product (such as a device, service, or environment) can be used by specified users to achieve specified goals with effectiveness, efficiency, and satisfaction in a specified context of use.  

An official, especially a Bureaucrat, an Elected representative should be accessible to common man, hear their grievances and ensure that they are redressed.  

திருவாய்மொழி நூற்றந்தாதி –  தேன் போன்று இனிமையானது.   ஸ்வாமி  நம்மாழ்வாரின் திராவிட வேத சாகரமான திருவாய்மொழி.  100 பதிகங்கள் கொண்டது.  இதில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் திருவாய்மொழி  நூற்றந்தாதியில் நமக்கு அருளிச்செய்துள்ளார். ஆழ்வாரின் ஒவ்வொரு பதினோரு பாசுரமான ஒரு திருவாய்மொழிக்கு அப்பாசுரங்கள் அனைத்தையும் ஒரே வெண்பாவில் அதாவது பதினைந்து சொற்களில் மாமுனிகள் ஆக்கிவைத்தது உலக இலக்கிய அதிசயம். ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி,  நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது.   

எம்பெருமான் எளியன் - இதோ நம் ஆசார்யர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பாசுரம்:

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்

முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் – பத்தி செய்யும்

என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்

சென்ற பிறப்பாம் அஞ்சிறை

 

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும். 
இன்று 10/12/2023 கார்த்திகை ஞாயிறுக்குக் கிழமை.  பக்தர்கள் பெருமளவில் சோளசிம்மபுரம் சென்று மலைமேல் அமர்ந்து இருக்கும் நரசிம்மரை வணங்குவார்கள்.  இன்று ஸ்வாதி நட்சத்திரமும் கூட.  திருவல்லிக்கேணியில் ஏனைய ஸ்வாதி நாட்களில் அழகிய சிங்கர் புறப்பாடு உண்டு.

 
இதோ இங்கே ஆனி ப்ரஹ்மோத்சவத்தின் 9ம் நாள் இரவு (5.7.2023) சததர்ஷ விமானத்திற்கு எழுந்தருளும் ஸ்ரீ தெள்ளியசிங்கனின் எழில் மிகு திருக்கோல படங்கள் சில.
 
adiyen Srinvasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10/12/2023 

No comments:

Post a Comment