To search this blog

Sunday, October 29, 2017

Sri Boothathazhwar Sarrumurai @ Thiruvallikkeni 2017

பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் தாம்  ஆழ்வார்கள் என்று சொல்வர்கள். ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே தனி தெய்வம் என்று  எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருந்தவர்கள், மயர்வற மதிநலம் அருள்பெற்ற ஆழ்வார்கள்இவர்களில் பொய்கை, பூதம், பேய் எனும் மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள்இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும் மதிட்கோவல்  இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர்


Today 29th Oct 2017  being ‘Aippasiyil  Avittam’ marks the birth of  – Sri  Boothath Azhwar.   There was the grand purappadu of Azhwar with Sri Parthasarathi Perumal at Thiruvallikkeni.  It was a great day as adiyen could have darshan of Alwar at avathara sthalam @ Thirukkadanmallai [the present day Mahabalipuram too] ~ all that in a separate post : here is something on Sri Boothath Alwar.For us life is riddled with difficulties – one seeks solace in God – Sri Boothath Alwar tells us the simple way of life and reaching heavenly abode, by chanting the various names of Sriman Narayana.

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்து
அணியமரர்  ஆக்குவிக்கும் அஃதன்றே, நங்கள்
பணியமரர் கோமான் பரிசு.

எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு; அவற்றில், திருமேனி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று ஒரு வகுப்பும், விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும் கொள்ளத் தக்கன.  ஸ்ரீவத்ஸவக்ஷா; புண்டரீகாக்ஷ:, பீதாம்பர:, சார்ங்கீ, சக்ரபாணி:-  இத்யாதி திருநாமங்கள் முந்தின வகுப்பைச் சேர்ந்தவை; லோகாத்யக்ஷ:, ஸுராத்யக்ஷ:, ஜகத்பதி : -  இத்யாதி திருநாமங்கள் பிந்தின வகுப்பைச் சேர்ந்தவை.  ஆக இவ்விரு வகுப்புகளையுந் திருவுள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும், இரண்டாமடியில் “மற்றவன் பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது. 


ஸ்ரீமந் நாராயணனுடைய  திருநாமங்களையும் மற்றும் அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும் ஞானத்தால்  உள்ளபடியறிந்து, அவன் மேல் (ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று அனுசந்திப்போமேயானால்,  நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்யபரர்களாயுமுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,  பரமபதத்திற்கு அலங்காரமான நித்யஸூரிகளாக (நம்மை)ச் செய்துவைக்குமதுவேயாம்.

மகா வித்வான்  ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமி உரை – நன்றி:  திராவிட வேதா.org

Alwar offers a simple solution ~ understand and know through revelations and chant the various names of Sriman Narayana,  chanting His names and worshipping  His many avatars and archavatars will secure us a place by His side in the comity of Gods in heaven.

Azhvaargal literally means those who are immersed in the feet of Sriman Narayana in their devotion and love for Him only.  Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham.  Boothathu Alwar was the incarnation of the divine Mace (Kaumodaki) – he was born at Thirukadanmallai [the present day Mahabalipuram] on a ‘kurukkathi’ flower. 
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - என ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது 'உபதேச ரத்தினமாலையில்'  எப்புவியும் பேசு புகழ்"பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - வந்துதித்த நாள்களை சிறப்பித்தார்.
                      


                            இன்று பூதத்தார் அவதரித்த நாள். வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்   பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது.  அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமைசெய்யப்பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.

The muthalazhwargal vaibhavam is a very interesting one… the divine  trio came together for the first time at Thirukkovalur on a rainy day when there was lightning accompanied by thunders – in the front passage [idai kazhi] of a house referred as ‘dehali or rezhi’……….. the place being very small – it was good enough for Poigai Azhwar to lie down; when Boothathazhwar joined him, they were able to sit ~ and then came Peyalwar who was invited to their fold saying that ‘one can lie; two can sit while there is sufficient place for all the three to stand’……. They were sharing their peregrinations in their divine journeys, they felt strange pressure in total darkness as there was some one more amidst……  being great sages with total dedication to Lord they lit light ~ how great and mighty in their bakthi they were….  Poigai Azhwar made the Great Earth  as the lamp; Ocean as the oil; the Sun as the light – all to be placed at the Lotus Feet of the Supreme Lord  and he sang 100 verses ~ Muthal Thiruvanthathi.  Sri Boothathalwar followed – making ‘love as the lamp; eagerness as the oil – the endearing thoughts as the wick to the lamp and the lit the lamp of wisdom’ – Sri Peyalwar having had the benefit of these lights rendered his ‘Moondram Thiruvanthathi’. 
Adiyen Srinivasadhasan.

PS :  photos here are of Sri Boothath Azhvaar sarrumurai purappadu at Thiruvallikkeni divyadesam 29.10.2017


No comments:

Post a Comment