சமீபத்தில்
24.5.2017 அன்று
திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் உள்ள திருவெள்ளறை திவ்யதேசம் சேவிக்கும்
பாக்கியம் அமைந்தது. திருப் புண்டரீகாக்ஷ பெருமாள்கோவில் ஒரு பெரிய அழகான கோவில்.
இக்கோயில், வெண்பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு
வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக்
கருதப்படுவதால், ஆதிவெள்ளறை என்றும் அறியப்படுகிறது. கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது.
Here is something on
temple – divyadesam of Thiruvellarai, situate around 25 kms away from
Srirangam. On the way to Thuraiyur from Trichy / Srirangam tollgate
via mannachanallur. This is a huge
temple – much like a fortress. A tall imposing unfinished gopuram is
in the vanguard. As some renovation work is on, now we have to enter
the temple through eastern gate and behind the half gopuram, there is another Gopuram and prakaram. The exteriors of the fortress look so neat
and clean, with flowering plants. In fact it is so one with nature that there
were so many monkeys, parrots, cuckoos, and .. .. many peacocks too .
There is Periya thiruvadi
sannathi on the banks of Thirukulam before which dwajastham and ‘Nazhi kettan
vasal’ exists. Once you enter the precincts, there are two gates coinciding
with the movement of Sun known as ‘Utharanayanam’ and ‘Dakshinayanam’.
One of the gate is open alternately for 6 months cycle. This is a collaged
photo taken on two different occasion and hence both are seen open !
The Lord here is
Pundarikakshar in standing posture, also known as Senthamaraikkannan.
There are so many intricately carved figurines on the wall of the main
sannathi. There are thousands of
devas. Suryan and Chandiran are
showering ven samaram. Garudazhwar and
Adhiseshasan are standing on either sides.
Markendeya maharishi and Booma devi are in sitting posture on either
sides. Perumal is beautiful Sri
PundariKakshar (Senthamarai Kannan) His consort is
Pankajavalli. Legend has it that this temple was constructed by Sibi
Chakravarthi of Raghu vamsam, predating even Lord Rama.
On the left side of the
pond as you stand facing the dwajastham, there is thayar sannathi of
Sengamalavalli Nachiyar. Sri
Chakrathazhwar in beautiful form is there in the next sannathi. On the prakaram, there is Anjaneyar, a
special form as his eyes are so special, would appear as He is seeing us
directly. Two acharyas – Uyyakkondar and
Engalazhwaan were born at this
divyadesam.
The Manavala Mamunigal
sannathi on the outer precincts appears so neat and majestic. Outside the temple, in front of the mottai
gopuram is the sannathi of Emperumanar.
Regards – S. Sampathkumar
*****************************************************
சமீபத்தில் மறுபடி திருவெள்ளறை
திவ்யதேசம் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது.
பிரம்மாண்டமான மதில்கள் உடைய கோட்டை போன்ற பெரிய கோவில். பிரகாரம் சுத்தமாகவும் மணம் கமழும் பூக்களை உடைய
நந்தவனத்துடன் மிளிர்கிறது. கோவில் வாசலில்
ஒரு பெரிய மொட்டை கோபுரம் உள்ளது. இங்கே புதுப்பிக்கும்
பணி நடைபெறுவதால், கிழக்கு கோபுரம் வழியாக
உள் செல்கிறோம். சுற்றி வந்து,
பாதி முடிந்த நிலையில் உள்ள கோபுரத்தை
தாண்டி உள்ளே செல்ல மற்றொரு கோபுரம், திருக்குளம், பலிபீடம் த்வஜஸ்தம்பம் ஆகியன உள்ளன. இந்த பலி பீடத்திற்கு கூட விசேஷ திருமஞ்சனம் நடைபெறுமாம்.
த்வஜஸ்தம்பத்தை சேவித்து உள்ளே சென்றால் பெருமாளின்
அழகான வரைபடம் உள்ளது. பிரதட்சிணமாக
சென்றால் 'தட்சிணாயனம் உத்திராயணம்' என இரண்டு வாசல்கள். வைகாசி மாதம் ஆதலால் உத்திராயண படிக்கட்டுகள் ஏறி
மேலே சென்றால் அழகான நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக்கண்ணன் பெருமாள் எழுந்து
அருளி உள்ளார். நின்ற திருக்கோலத்தில் நெடிய பெருமாள்
மார்கண்டேய மகரிஷிக்கும் பூமா தேவிக்கும் சேவை அருளும் பெருமாள். பெருமாளுக்கு சூரியசந்திரர்கள் வெண்சாமரம் வீச; அருகில் கருட ஆழ்வாரும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்திலும் மார்கண்டேய மகரிஷியும் பூமாதேவியும்
மண்டியிட்டு அமர்ந்தும் பெருமாளை வணங்கிக்கொண்டு
உள்ளனர். புண்டரீகாக்ஷ பெருமாள் உத்சவருடன் பங்கஜவல்லி தாயார் உள்ளார். பெருமாள் சன்னதி அருகே வலது புறம் மிக அழகாக எல்லா
ஆழ்வார்களும் மறு புறத்தில் ஆசார்யர்களும் எழுந்துஅருளி உள்ளனர்.
கீழே புஷ்கரிணிக்கு இடது புறத்தில் தாயார் சன்னதி பெரியதாக உள்ளது.
தாயார் செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் தனிக்கோவில்
நாச்சியார் - அழகாக சேவை சாதிக்கிறார்.
சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் உள்ளன. இங்கு உள்ள சிறிய திருவடி
ஆஞ்சநேயர் மிகவும் விசேஷம். மூலவரின் திருக்கண்கள்
நம்மை நேரே நோக்குவது போல உள்ளன. வெளிப்பிரகாரத்தில்
நம் ஆசார்யர் மணவாள மாமுனிகள் சன்னதி புதுப்பொலிவுடன் திகழ்கிறது. கோவிலுக்கு வெளியில் மொட்டை கோபுரத்துக்கு எதிரில்
எம்பெருமானார் சன்னதி உள்ளது.
இந்த திவ்ய தேசத்தில்
திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே
அமைந்துள்ளனவாம். பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனை காப்பிட அழைக்கும்
பாசுரத்தில் "சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,
அந்தியம் போதிதுவாகும் அழகனே! காப்பிட
வாராய்" என பத்து பாடல்கள் மங்களாசாசனம்
செய்துள்ளார். திருமங்கை ஆழ்வார் இத்திருத்தலத்தை பற்றி பத்து
பாசுரங்கள் சிறப்பித்துள்ளார். ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி மாமழுவேந்தி
முன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ ! .................. தென்றல்
மாமணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே ! பத்தாவது பாடலில் "
மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை அதன் மேய ............... எஞ்சலின்றி
நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே " என மங்களாசாசனம் பண்ணி
உள்ளார்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
PS : As
I circulate these, a good friend of mine quipped that he is not able to
understand anything as he could not read Tamil.. that is the primary
reason why you find an English version
too in my tamil articles.
Thank you keep giving such good things may God bless me to have this temple darshan
ReplyDelete