To search this blog

Monday, May 1, 2017

Sri Udayavar (Ramanujar) Sarrumurai 2017 : சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

நமது பாரததேசம் புண்ணிய பூமி.  ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு வேதமும்  ஆச்சயார்களுமே பிரதானம். தீமனம் கெடுத்து, ஸ்ரீமன் நாராயணனை தொழும் மனமே தந்து, அறியாதன அறிவித்து, பரமபுருஷனைக் காட்டிக்கொடுக்கும் ஆச்சார்யர் மிக உயர்ந்தவர்.  அவர் நமக்கு உலாவும் பெருமான். ஆச்சார்ய ரத்னஹாரத்தில் நடுநாயகர் ஆன நம் சுவாமி எம்பெருமானார் சாற்றுமுறை - சித்திரையில் செய்ய திருவாதிரை -  இன்று,  இந்த நல்லுலகமே  எதிர்பார்த்து காத்து இருந்த ~  சீரிய நாள் - ஒப்புயர்வற்ற நம்மிராமாநுச முனியின் ஆயிரமாவது பிறந்த நாள் சாற்றுமுறை. திருவல்லிக்கேணி வீதிதனிலே அத்யாபகர்கள் 'வாழிய ராமானுஜன்; அவரடித்தாளினை வழி' என விஜயீ  பவ ; விஜயீ  பவ ; விஜயீ பவா  எத்சரிகை' என 'வெள்ளை விசிறி'  [தங்கள் உத்தரீவங்களை விசிறி] ஆர்ப்பரித்தனர்.


Of the three great exponents of Vedanta philosophy, Bhagwad Ramanuja with his aesthetic beautiful interpretations occupies the central place.  Sri Ramanujar has the pride of place in the list of our Acharyars; he is hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar, Yathirajar, Thiruppavai Jeeyar, Num Kovil annan, amongst other names was born in the year 1017 at Sri Perumpudur on ‘Thiruvathirai’ thirunakshathiram in the month of Chithirai.  This year Udayavar sarrumurai assumes greater significance for today 1st May 2017 is His millennium year – it is 1000 years since he was born at Sriperumpudur.  [Chithiraiyil seyya Thiruvathirai]Our darsana Sthapakar, Sri Ramanujar  rightly reverred as ‘Yathi Rajar’ ~ the king among yathis [hermits and sages], the  greatest reformer he was, Ramanuja gave us many vedantic treatises - toured the entire Country, making the Srivaishnavatie tradition flourish in all his path.  He was a great administrator too. Our Acharyar formulated a faith in which none were devoid of Divine Grace.  The great social reformer, had the vision of introducing most acceptable way of life for every baktha inculcating respect and love among fellow human beings.  Today we talk of codes and SOPs – thousand years ago, this Great Acharyar  gave us Niyamanappadi ~ the manual for the services to be performed in the Temple, all supported by endowements in his blue book.  When Sri Ramanujar went to Melukote, he was 82 and he returned to Thiruvarangam at ripe age of 94. – and more was to happen in Srirangam, guided by his indomitable spirit of service to Lord. He created flawless systems, corrected the administration of Sri Rangam ensuring the proper maintenance of the wealth of Lord Ranganatha and creating teams to properly continue all kainkaryams to the Lord. 
                      The fountain of knowledge, he was,  handed over to the generation his wealth of knowledge through his many works which include the Magnum Opus ‘Sri Bashyam – the Vishishtavaida commentary of Brahma sutram of Vyasa Bhagavan.; Vedantha Deepam, Vedanta Saram, Vedanta Sangraham, Gadyathrayam and many many more …. The  3 Gadyams – Saranagati Gadyam, Sriranga Gadyam and Vaikunda Gadyam are collectively known as ‘Gadyatraya’.

The  3 Gadyams – Saranagati Gadyam, Sriranga Gadyam and Vaikunda Gadyam collectively known as ‘Gadyatraya’ are in someways considered to be swan song of our Acharyar.  The Saranagati Gadyam is live exposition of the doctrine of ‘prapatti’ – the total saranagati.  Sri Ramanujar prays that thee Lord may be pleased to bless his sincere and true saranagati at the lotus feet of Srimannathan be accepted as truly and well-performed and lead to the desired end without any interruption.  Our Acharyar describes the unique qualities of NamPerumal  with words ‘Sathyakama, Sathyasankalpa’ which would mean the most loveable quality of resolve to protect His devotees and the will to be incarnated in any form to come to the succour of devotees – He is Creator, Protector and Sustainer.

Let us fall at the lotus feet of our Acharyar which only  will relieve us of all our sins and steer us towards good thinking, good deeds and towards salvation through service to Lord and His bakthas.

Some photos taken this morning during the Emperumanar purappadu at Thiruvallikkeni are posted here :
இன்று 1.5.2017 -  சித்திரையில் செய்ய திருவாதிரை நந்நாள்.  நம் ஆச்சார்யன் இவ்வுலகத்தில் வந்துதித்த சீரிய நாள். செங்கயல் வாவிகள் சீர்வயல்கள் சூழ்ந்த ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வார் எனும் ராமானுஜர் அவதரித்த நந்நாள்.  எம்பெருமானாரின் பிறப்பு உலகத்தவர்கள் உடனே பெறுதற்கான  நண்ணறு ஞானத்தை அனைவருக்கும் அருளி அவர்களை ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் பக்தி செலுத்துமாறு மாற்றிய அவதார திருநாள்.   

உடையவர் ஒரு தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் * பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று "ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தை" நிலை நாட்டினவர். ஸ்ரீவைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர்.   ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார்.   ஸ்ரீ பாஷ்யம் அவரது தலை சிறந்த படைப்பு. வியாச   பகவானின் ப்ருஹ்ம  சூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத பிரமாணமாய் கீதா பாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண் புகுதலை பற்றி சரணாகதி கத்யம், ஸ்ரீ ரங்கநாதரை தன்னை தாசனாக கொள்ளும்படி ஸ்ரீரங்ககத்யம், மஹாவிஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்ட கத்யம் என்பன இவரது பிற நூல்கள். 

                                லோகோபகாரியாராகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும்  ரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமி கூரேசர் வாக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்த நாள் அதி விசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே ( சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைஷ்ணவ தலங்களிலும் சேவாகாலம் முடியும் போது "ராமானுஜார்ய திவ்யாக்ஞா - வர்ததாம் அபிவர்ததாம்" என அவரது கட்டளைகள் சிறப்புற நடைமுறையில் உள்ளதை பாராட்டுவர். 

இவ்வுலகில் இனிஒன்றும் எண்ணாதே  நெஞ்சே ! இரவுபகல் எதிராசர் எமக்கினி மேலருளும் ....எனநம்  ஆச்சார்யர்க்கு ஆளாவோம் நாம்.. பெரியகடலை போன்ற கருணைகொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள்பணிவோர்க்கு எல்லாநலமும் பெருகும்அவரைப்பற்றி சிந்திப்போர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும்  

இன்று  காலை - உடையவர் சாற்றுமுறை சிறப்பாக நடை பெற்றது. காலை புறப்பாட்டில் உடையவர் அழகிய பல்லக்கில் எழுந்து அருளினார்.   காலை புறப்பாட்டில் ஸ்தோத்ர பாடல் கோஷ்டி ஆனது. எம்பெருமானார் பிறந்த நாளை அத்யாபக சுவாமிகள் மேல் உத்தரீவத்தை விண்ணை நோக்கி விசிறி ஆர்ப்பரித்து கொண்டாடினர்.  

அடியேன் - ஸ்ரீனிவாசதாசன்


No comments:

Post a Comment