To search this blog

Friday, April 4, 2025

Sree Ramar Yanai vahanam 2022 - ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே

Sree Ramar Yanai vahanam 2022 - ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ணிய கதை  இராமனின் கதையே !   அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்கு யாகத்தின் பலனாய் ஸ்ரீராமபிரான் அவதரித்தார்.  அவர் தம் காதை  "ஸ்ரீ இராமாயணம்".  தந்தை சொல் காக்க இராஜ்ஜிய பரிபாலனம் துறந்து, மரவுரி தரித்து,   கொடிய வனம் புகுந்து, கானகம் எல்லாம் திரிந்து, தர்மம் காத்தவன்   ஸ்ரீராமபிரான்.  அந்த யுக புருஷருக்கு  அவர்தம் பிறந்த புண்ணிய மண்ணிலே அற்புத ஆலயம் மிக்க ஆனந்தத்தை தருகிறது.


தொன்மங்கள் என்பது 'பழைமை' என்று பொருள்படும். இலக்கியங்களில் பழைமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வது தொன்மங்கள் ஆகும். பழமை என்பதை வடமொழியில் 'புராணம்' என்று   அழைக்கப்படுகிறது.   தொன்மை இலக்கியங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் சான்றுகளாக உள்ளன.  எந்த ஒரு இலக்கியத்தில் தொன்மங்கள் அதிகமாக உள்ளதோ அது பழம்பெரும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. ~ கம்பராமாயணம் ஒரு அற்புத இலக்கிய விருந்து.  வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு  தமிழின் சுவை கூட்டி  கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இயற்றப்பட்டதாகும். 

எம்பெருமான் ஸ்ரீராமனை நினைத்து கேட்டு இன்புறவல்ல ஒரு சினிமா பாடல் இங்கே : 

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே **

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே

இந்தக் கதை கேட்கும் எல்லோருமே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே




படம் :  லவகுசா  - வரிகள் மதுரகாசி - 1963ஆம் ஆண்டு  வெளிவந்த லவகுசா திரைப்படம் தெலுங்கிலும் தமிழிலுமாக இரு மொழிகளில் வந்து ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  பல பக்தி படங்களில் அருமையாக நடித்த திரு என்.டி. ராமாராவ் ஸ்ரீராமர்! சீதையாக அஞ்சலி தேவி.  இசை கே.வி.மஹாதேவன்.   படத்தை இயக்கியவர்: புல்லையா.  தெலுங்குப் படத்தில் 37 பாடல்கள் பாடப்பட்டு அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தின. தமிழிலோ *ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே* என்ற பாடல் சிரஞ்சீவி வரம் பெற்று இன்றும்  எல்லா இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் கேட்கப்படுகிறது. மருதகாசியின் அற்புதமான சொற்களுக்கு கே.வி.மஹாதேவன் இசையில் பி.சுசீலாவும். பி.லீலாவும் பாடிய பாடல் இது.  இதை இணையத்தில் கேட்டு மகிழலாம். :

Telegu tinseldom (tollywood) can have justifiable pride in showcasing so many beautiful movies based on puranic / ithihasa stories, without deviation.  Pulliah was a great name of yesteryears.  Two masters of Telugu cinema, besides having a similar name, shared the distinction of huge success in  remaking their earlier box office hits. While Poludasu Pullaiah remade his 1939 big hit, Sri Venkateswara Mahatmyam in 1960, his contemporary Chithajallu Pullaiah came up in 1963, with the remake of his 1934 blockbuster hit, Lava Kusa. Interestingly both the remakes starred N.T. Ramarao in the lead.   

Lava Kusa, released in 1963 was obviously the life story of Sri Ramachandramurthi as told by Lava & Kusa, directed by CS. Rao and his father C. Pullaiah. The film's script was written by Samudrala Sr. The film was produced by Sankara Reddy under Lalita Sivajyothi Films. The film was shot in both Telugu and Tamil languages with the same title, but with slight differences in the cast. The film was a remake of 1934 film of same name which was also directed by C. Pullaiah. The story was  an adaptation of the Uttara Kanda from Ramayana and revolved around the around the roles of Lava and Kusa.  NTR was cast as Rama and Anjali Devi as Seethadevi. The Telugu version starred Kanta Rao, Shoban Babu, S. Varalakshmi, Kaikala Satyanarayana in supporting roles, replaced in that order by MR Radha and Manorama in Tamil.

Have read that production of remake started in 1958 but was hampered by financial constraints, then C Pullaiah’s health was a concern, so   his son C. S. Rao took over. The soundtrack featured 27 songs, with the musical score primarily composed by Ghantasala and KV Mahadevan, and the lyrics by Vempati Sadasiva and Samudrala Sr. (Telugu) and Maruthakasi (Tamil). The Telugu version of Lava Kusa was released on 29 March 1963, while the Tamil version was released the following month, on 19 April 1963. The former won the National Film Award for Best Feature Film in Telugu for that year. It was also dubbed in Kannada, and later in Hindi in 1974. This film was later remade with the title Sri Rama Rajyam in 2011.

At Thiruvallikkeni divyadesam, today was day 6 of ongoing Sree Ramanavami Uthsavam and Sri Ramapiran was on white silver elephant.  It was Thiruvasiriyam and Periya thiruvanthathi in the goshti;  

Could not attend today’s purappadu and here are some photos taken during last year Yanai vahana purappadu.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3.4.2025  











Thursday, April 3, 2025

Sree Ramapiran Nachiyar thirukolam 2025 ~ உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

 

மனத்தாலும் வாயாலும் சிந்தையாலும் சொல்ல சொல்ல நன்மை பயக்கும் நாமம் 'இராம நாமம்'  - மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம் - மாதா பிதா குருவை மதித்த மன்னவன் நாமம்.  கம்ப ராமாயணம் இப்படி துவங்குகின்றது. 

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,

அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!

அன்னவர்க்கே சரண் நாங்களே"  

உடையவர்     எம்பெருமானாரைப் 108 பாடல்களால்  பாடிய    திருவரங்கத்தமுதனார் -  தமது இராமானுச நூற்றந்தாதியில் - ‘படிகொண்ட   கீர்த்தி   இராமாயணம்   என்னும்    பக்தி  வெள்ளம் - குடிகொண்ட   கோயில்   இராமானுசன்’  என்று    பாடினார்.  உலகம் முழுவதையும்  தன் புகழால் அகப்படுத்திக்   கொண்டது எனவும் பக்தி வெள்ளம்     எனவும்    இராமாயணத்தை      திருவரங்கத்தமுதனார் சிறப்பிக்கிறார். இந்தப் புகழின்உலக  மகா   காப்பியங்களுள்  தலை  சிறந்து  விளங்கும்  கம்பநாடனுடைய இராமகாதை ஆறு காண்டங்களாக வகுக்கப் பெற்றுள்ளது.  இராமாயணம் என்பது முதல்நூலால் வந்த காரணப் பெயர்.  இராமன் என்ற  சொல்லுக்கு   எல்லார்க்கும்    மனக்களிப்பு அளிப்பவன்   என்பது பொருள்.   இராம  சரிதத்துக்கு  இடமாயுள்ள  நூல்   - இராமாயணம்.  “ராமனை அடைவதற்கு  அல்லது  அறிதற்குக்   கருவியாயுள்ள நூல்”;  ‘ஸ்ரீராமாயணத்தால்  சிறையிருந்தவளேற்றஞ்   சொல்லுகிறது”   என்னும் ஸ்ரீவசநபூஷண        வாக்ய       பலத்தால்.          பிராட்டியின் வைபவத்தை உணர்த்தும்  நூல்  என்றும்   கூறலாம்.  

உலகங்கள் யாவையும் உருவாக்கி, காத்து, அழித்தலுமான விளையாட்டைச் செய்கின்ற தலைவன்   ஒருவனே. இவை அனைத்தும் அவன் ஒருவன் செயல்களே என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான் கம்பன்.  இவற்றை மிகவும் எளிதாகச் செய்வதைச் சொல்லும்படியாக அவை அந்தத் தலைவனுக்கு இது வெறும் விளையாட்டே என்றும் சொல்கிறான். தொடர்ந்து செய்யப்படுவதால் இதை முடிவே இல்லாத அளவிட முடியாத அலகிலா விளையாட்டு என்றும் சொல்கிறான்.  அதி முக்கியமாக - அந்த தலைவனுக்கு வணங்குகிறோம், வாழ்த்துகிறோம் என்றெல்லாம் சொல்லாமல்,   சரண் அடைகிறேன் என்று அடிபணிகின்றான் கம்பன் -  ராமாயணத்தில் தொடர்ந்து சொல்லப்படும் சிறப்பு  தத்துவம் - சரணாகதித் தத்துவம்.  மங்கலச்     சொல்லொடு  தொடங்கவேண்டும்    என்பது   மரபு; அம்மரபின்படி ‘உலகம்’ என்ற  மங்கலச் சொல்  கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில்  முதலாக  எழுகிறது.  

 


இராமாயண நாயகனின் திருவவதார மஹோத்சவம் ஸ்ரீராமநவமி.  திருவல்லிக்கேணியில் ஐந்தாம் உத்சவத்தில் [2.4.2025] - ஸ்ரீராமபிரான் நாச்சியார் திருக்கோலத்தில், காருண்யம் மிகுந்த சீதா பிராட்டியாக சேவை சாதித்தார்.  அவர் கீழ் அண்ட ப்ரம்மாண்டங்களும், திருக்கோவில் கோபுரங்களும் அனைத்தும் அடக்கம்.   தாய் சீதையின் சிறப்பு கம்ப நாட்டாழ்வாரின் வரிகளில் : 

மொய் வளர் குவளை பூத்த    முளரியின் முளைத்த. முந்நாள்

மெய் வளர் மதியின் நாப்பண்    மீன் உண்டேல். அனையது ஏய்ப்ப.

வையக மடந்தைமார்க்கும்.    நாகர் கோதையர்க்கும். வானத்

தெய்வ மங்கையர்க்கும். எல்லாம்    திலகத்தைத் திலகம் செய்தார். 

தாமரையில்  குவளை  பூத்தது  போன்றன.  பிராட்டியின்  முகத்தே விளங்கும்  கண்கள்;  தாமரையின் உதித்த மூன்றாம் பிறை   போன்றது அவள்  முகத்தே  தோன்றும்  நெற்றி.  மூன்றாம் நாள்  திங்களிடையே உதித்த  விண்மீன் ஒன்று போன்றது அவள் நெற்றியில்  இட்ட  திலகம். திலம்  போலச் சிறந்து விளங்கும் பிராட்டியின் (நெற்றியில் தோழிமார்) திலகமிட்டு அழகு செய்தனர். 

 


எம்பெருமான் ஸ்ரீராமனின்  தாள் பணிந்து அவனிடம் சரண் அடைந்து உய்வோமாக !!

அடியேன் ஸ்ரீனிவாசதாசன் 
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
3.4.2025 

 

 

Wednesday, April 2, 2025

Thiruvallikkeni Sun going down behind the gopuram

 


Sunsetting behind Thiruvallikkeni Sri Parthasarathi thirukkovil gopuram

Thirumanjana kudam

 


Thirumanjana kudam @ Thiruvallikkeni Thavana uthsava bungalow

Sri Seshadri kainkaryabarar (at Thirumadapalli also)

Tuesday, April 1, 2025

Thiruvallikkeni Sri Rama Piran ~ Kamba Ramayanam 2025

 

மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய மிக மிக சிறந்த யுகா புருஷன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.    அவன் அவதரித்த அழகிய திருநாடு கோசல நாடு. அது பழம் பெருமைமிக்கது; அதைச் சத்திய விரதன் ஆகிய தசரதன், சக்கரவர்த்தி என்ற பெருமையோடு ஆண்டு வந்தான். அவன் உதித்த குலம் சூரிய குலம் என்பர். 

கோசல நாட்டில் பருவ மழை தவறாது பெய்தது. வெள்ளிப் பனிமலை மீது உலவிய கரிய மேகங்கள் அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக் கெடுத்தது; அது சரயூநதியாகப் பாய்ந்தது. மலைபடு பொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும், சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள்ளம் அடித்து வர அலைபடு பொருள்கள் ஆயின. 

சீர்மிகு இராமனின் வாழ்க்கையை உரைப்பது ஸ்ரீராமாயணம்.  அதை செந்தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் நயம்பட உரைத்துள்ளார்.

 

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்

இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்

தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை

சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.

 

நல்வழியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றமாக நிகழ்ந்தது புகழ்மிக்க இராமாவதாரம். அந்த மகத்தான கதையைக் கூறும் செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காவியம், வள்ளல் சடையனின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது (காவியம் முழுவதும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது பெயரை எங்கும் கூறவில்லை. தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பெயரை மட்டுமே தொடக்கத்திலும் வெகுசில இடங்களிலும் கூறுகிறார்).

 


இன்று காலை திருவல்லிக்கேணியில் ஸ்ரீராமநவமி உத்சவத்தில் நான்காம் நாள் - தவன உத்சவம்.  ஸ்ரீராமபிரானை கண்டு களியுங்கள்.

 
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
1.4.2025

Ikshvahu kula Thilaka !! ~ Sree Ramapiran and Sun rays !!

ఇక్ష్వాకు కులతిలక ఇకనైన పలుకవె రామచంద్రా నన్ను

రక్షింపకున్నను రక్షకులెవరింక రామచంద్రా ఇ..

 

ikvāku kulatilaka ikanaina palukave rāmachandrā nannu

rakimpakunnanu rakakulevarika rāmachandrā i..

 


Oh Ramachandra, the noblest person of Ikshvaku dynasty, if you don’t protect me, who else is there for me?" laments - Kancharla Gopanna (Bhadrachala Ramadasu)  –  a famous Vaggeyakara (classical composer) of the Telugu classical era. He lived in the village of Nelakondapalli, near the town of Bhadrachalam, during the 17th century and is renowned for constructing a famous temple for Lord Sri Rama at Bhadrachalam.    

On serene nightsky we see glowing stars !!  -  A star is a hot, glowing ball of gas. Can you see any stars during the daytime? Of course, Yes! The light of daytime comes from our closest star: the Sun.  Our Sun is a 4.5 billion-year-old yellow dwarf star – a hot glowing ball of hydrogen and helium – at the center of our solar system. It’s about 93 million miles (150 million kilometers) from Earth and it’s our solar system’s only star. Without the Sun’s energy, life as we know it could not exist on our home planet. 

The gravity of the Sun  holds the solar system together, keeping everything — from the biggest planets to the smallest bits of debris — in its orbit. The connection and interactions between the Sun and Earth drive the seasons, ocean currents, weather, climate, radiation belts and auroras. Though it is special to us, there are billions of stars like our Sun scattered across the Milky Way galaxy. 

The Sun has many names in many cultures. The Latin word for Sun is “sol,” which is the main adjective for all things Sun-related: solar.   The hottest part of the Sun is its core, where temperatures top 27 million °F (15 million °C). The part of the Sun we call its surface – the photosphere – is a relatively cool 10,000 °F (5,500 °C). In one of the Sun’s biggest mysteries, the Sun’s outer atmosphere, the corona, gets hotter the farther it stretches from the surface. The corona reaches up to 3.5 million °F (2 million °C) – much, much hotter than the photosphere.  Sun rays, also known as solar radiation or sunlight, are the electromagnetic radiation emitted by the sun, encompassing visible light, infrared radiation (heat), and ultraviolet (UV) rays.   

Sun rays are a form of energy that travels from the sun to Earth in the form of electromagnetic waves.  Crepuscular rays, sometimes colloquially referred to as god rays, are sunbeams that originate when the Sun appears to be just above or below a layer of clouds, during the twilight period.  Crepuscular rays are noticeable when the contrast between light and dark is most obvious.    

Ever thought what will happen if Sun goes on leave for an earth day ?? If the sun's rays ceased to reach Earth, the planet would plunge into a long, cold night, halting photosynthesis, and ultimately leading to the demise of most life forms due to the lack of energy and warmth.  Without the sun's warmth, Earth's temperature would plummet rapidly, potentially reaching temperatures far below freezing within a few days.  The death of plants would trigger a chain reaction, as animals that depend on plants for food would also perish, eventually leading to the extinction of most life forms on Earth, including humans.  The oceans and other bodies of water would eventually freeze over, further exacerbating the cold and making it impossible for life to survive.

 


The subject matter of this Post is  “Sun Race” (Ikshvahu kulam) and not Sun Rays!!!

இக்ஷ்வாகு குலதனம் ஸ்ரீராமபிரான்.  பேராற்றல்வாய்ந்தவனும், தன்னொளியுடன் கூடியவனும், உறுதிமிக்கவனும், புலனடக்கம் கொண்டவனுமான இராமன் - மிக சிறந்த புத்திமானாகவும், நீதிமானாகவும், நாநயமிக்கவனாகவும், எதிரிகளை அழிப்பவனாகவும், விரிந்த தோள்களையும், நீண்ட கைகளையும், உயர்ந்த தாடைகளையும்,  யானை போன்ற கம்பீர நடையும் கொண்டவனாக திகழ்ந்தான். ரகுவம்சத்தின் கதாநாயகன்  ராமபிரானுடைய மூதாதையர்  வம்சத்தை உருவாக்கி சிறப்புற வளர்த்தார்கள்.  சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதன், வசிஷ்ட முனிவர், சத்தியத்தை காத்த ஹரிச்சந்திரன், முல்லைக்கு தேர் கொடுத்த சிபி மன்னன் மற்றும் சாகரர்  போன்றவர்கள். 

சூரியனின் மகன் மனுவிற்கு அறுபது மகன்கள் பிறந்து  அவர்களுக்குள்ளேயே எழுந்த பகையினால் ஐம்பது பேர்கள் மாண்டார்கள். மீதி வாழ்ந்திருந்த பத்து மகன்களில் ஒருவரே இஷ்வாகு.  சூரிய வம்சத்தின் முதல் மன்னனாக பூமியிலே த்ரேதா யுகத்தில் சூரியனின் பேரரான இஷ்வாகு சிறப்புற ஆட்சி செய்தார்.  இஷ்வாகுவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களை இஷ்வாகு பரம்பரை என்று அழைத்தார்கள். அவர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இஷ்வாகுவை தொடர்ந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த பரம்பரையை அவர் பெயரிலேயே அமைந்த இஷ்வாகு ராஜவம்சம் என்றே அழைத்தார்கள்  . 

ஒரு காலத்தில், தீவுகளுடன் கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்} ஆண்டனர்,{அவர்களில்} சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப் புறப்பட்டு சாகரத்தை {பெருங்கடலை} ஆழமாக்கினான்.  இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும், இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம் தோன்றியது.  தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருந்தது. அங்கே மனிதர்களின் மன்னனான மனுவால் கட்டப்பட்ட , அயோத்தி என்ற பெயரில் உலகங்களில் புகழ்பெற்ற நகரம்  இருந்தது.





 அந்த திவ்ய நகரத்தில், ஓர் அற்புத நாளில், தசரத சக்ரவர்த்தியின் ராஜபத்தினியான கெஸல்யை குமாரனாக ஸ்ரீராமபிரான் திருவவதாரம் பண்ணினார்.   அந்த அற்புத க்ஷணத்தில், கந்தர்வர்கள் மெல்லிசை பாடினர், அப்சரஸ்கள் நாட்டியம் ஆடினர், தேவதுந்துபிகள் ஒலித்தன, சொர்க்கத்திலிருந்து மலர்மாரி பொழிந்தது. அயோத்தியின் ஜனகுலங்கள் அந்நிகழ்வை மஹோத்சவமாகக் கொண்டாடினர். அப்பெருநகரத்தின் அனைத்து வீதிகளிலும்  ஜனங்கள் நிறைந்திருந்தனர், நடர்களும், நர்த்தகர்களும், பாடகர்களும் விரைந்து வந்தனர், வாத்தியங்கள் இசைப்பவர்களும், பார்வையாளர்களும் ஆர்ப்பரித்தனர், வீதிகள் எங்கும் அனைத்து வகை ரத்தினங்களும் விரவிக் கிடந்தன.

இராமபிரான் திருவவரித்த நன்னாள் ஸ்ரீராம நவமி. 

Here are some photos of   Sree Rama piran  with Sun rays  behind him during the Garuda sevai purappadu at Thiruvallikkeni on 31.3.2025

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.4.2025 






Monday, March 31, 2025

Thirumadaipalli Thiruvallikkeni Sampath mama

 

 

For decades he served Sri Parthasarathi Emperuman so well in madapalli.

 


Madapalli Sampath mama's delicacies ~ the chakkaraipongal and puliyodarai were made with dedication - and for sure Emperuman was always pleased with the prasadams offered to him. Now he lives a peaceful retired life.. had occasion to meet and talk to him during Panchangam release at Gangaikondan mantap today.

31.3.2019

Thirumazhisai Samprokshanam

 


திருமழிசை ஸம்ப்ரோக்ஷணம் - ஆழ்வார் சன்னதி ப்ரோக்ஷணம் முடிந்து யாக சாலை கும்ப தீர்த்தம், ஆழ்வார் கோபுரத்திலிருந்து, பக்தர்களுக்கு தெளிப்பு - 23.3.2022

Sri Ramar Garuda Sevai Gopura vasal darshan 2025

 


Sri Rama Navami Uthsava Garuda Sevai 2025 – Gopura vasal darsanam

Sunday, March 30, 2025

Marugelara ! O Raghava !! - Sree Ramanavami Uthsavam 2- 2025

Marugelara ! O Raghava !! - Sree Ramanavami Uthsavam 2- 2025

మరుగేలరా రాఘవా!

మరుగేల - చరా చర రూపపరాత్పర సూర్య సుధాకర లోచన 

நற்பண்புகள் அனைத்துக்கும் சிகரம் ஸ்ரீராமபிரான்அற்புதமான நகரம் திரு அயோத்திதசரத சக்ரவர்த்திக்கு இக்ஷ்வாகு குலத்தனமாம் இராமனும் இலக்குவண பரத சத்ருக்கணனும் பிறந்த  செய்தியை அரசவை காவலர்கள்  யானை மீதேறி முரசறைந்து அறிவித்தனர்மக்கள் அளக்கமுடியாத இன்பம் கொண்டனர் 



The Greatest of Ithihasa purana ‘Sri Ramayanam’  is the undiluted history of the Greatest Person who descended on this Universe, on the banks of river Sarayu, in a prosperous country called ‘Koshala’.  In the immortal Ramayana, there are learning of life ….. For the Universe, Sri Rama and Sita are the Ideal persons.  Sri Rama is all pervading principle of Truth, character, steadfastness, sincerity, valour, skill, correctness, just, compassionate, righteous and more.  

Sree Rama Navami – is  the day on which Lord Sri Ramachandramurthy,  the supreme avatar of Maryada Purush  was born in the blessed land of Ayodhya.  Lord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue.  



The starting words are that of famous Thiyagaraja keerthana – marugelara !  

marug(E)larA O rAghava

marug(E)la car(A)cara rUpa parAt-para sUrya sudhA-kara lOcana (marugu)  

In this keerthana, Tyagayaa continues his quest for Rama. Here, he searches hard within himself and finds a slightly different answer to the question, "Where is Rama?"  He queries – Oh, Son  of Raghu - Why (ElarA) this screen (marugu) between You and me ?  and pleads Lord Rama, O Lord of the form (rUpa) of both moving (cara) and non-moving (acara) (carAcara)! The Supreme who is beyond everything, one who provided nectar, remove the inner screen and take me. 

  Having searched all over my inner recess (antarangamuna), I have understood that  You alone is Supreme and everything.  I shall never think of anything else other than Ninnu (your esteemed self). The Universe itself is your form! The Sun and the moon are your eyes. By deep contemplation, inquiry, and search, I have directly perceived that you are everything, and everything is within you.  There is no place in my mind for any other God. Please protect me.  

In this  beautiful popular keerthana, Thiyagaiyar asks Rama to come before him. He says O Rama, why are you concealing yourself? Lord is concealed with a screen called maya. Only the lord can remove the screen. Thiyagaiyar says that inspite of you having the screen, I have perceived you. Your trick of having the screen hence is useless. Why keep it any longer? Please remove it and come before me.  

Saptapadi (Seven steps)  was another beautiful film written and directed by K Vishwanath, released in 1981. The film garnered the National Film Award for Best Feature Film on National Integration.  The film is not only about the seven steps that one takes to become a part of the institution of marriage and a ritualistic exercise that completes the act of shedding the bachelorhood and entering a more stable state but talks about an individual's journey breaking away from the shackles from the conservatism to finding a path of understanding, encompassing and enlightenment.

Here is the Thiyagara keerthana ‘Marugelara O Raghava’ sung by  S Janaki: 
https://www.youtube.com/watch?v=RSWlmnD2qyY


Today 30.3.2025 is Ugadi New Years Day and day 2 of Sree Rama Navami uthsavam – here are some photos of today’s purappadu.    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasa dhasan
30.3.2025