To search this blog

Tuesday, June 7, 2022

Vaikasi Puram - Sri Andal masa thirunakshathiram 2022

Andal’s birth occurred in the 98th year of Kali Yuga – Nala Varudam – in the month of Aadi – shukla paksham – chathurthasi day.   She was found in a thulsi garden at  Sri Villiputhur by Vishnu Chithar [Periyazhwaar]. This year Thiruvadipuram occurs on 16th of Aadi – 1st day of August 2022.  Today is Puram in the month of Vaikasi – Andal masa thirunakshathiram. 





Today (7.6.2022)  being day 5 of Vasantha uthsavam and Swami Nammalwar uthsavam – there is periya mada veethi purappadu of Sri Parthasarathi Perumal

ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சொல்லழகும் பொருள் அழகும் சிறப்புற மிளிர்பவை.  "நம்மையுடைவன் நாராயணன்" என மானுடவரான  நாம் 'பரம்பொருளின் உடமை' என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஆண்டாள் அபரிமிதமான பக்திக்கு உன்னத உதாரணம்.  கோதைப்பிராட்டி தான் கொண்ட பக்தியினாலே , எம்பெருமான் வாக்கு மாறமாட்டான், நம்மை ரக்ஷிப்பான், தம்மைக் கைக்கொள்வான் என்று உறுதியாக இருந்தாள்.  அவரது பாசுரங்களில் நாரணன் தன்னை ஏற்க தாமதாவதில் வருத்தமும் அதே சமயத்தில், ஸ்ரீமன் நாராயணனையே கை பிடிப்பேன் என்ற மனதிண்ணமும் விளங்கும்.   இதோ இங்கே ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் இருந்து ஒரு பாசுரம் : -

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்

அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்

செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்

எங்கோல் வளையால்  இடர்  தீர்வராகாதே !!

பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும்,விண் உலகமும், எந்தக் குறையுமின்றி,தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான், செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார், என் வளையாலா துன்பம் தீரப் பெறுவார்? அது முடியாதே என நினைந்து ஆண்டாள் உடல் மெலிந்ததாம்.வளையல்கள் கழண்டதாம் !   எம்பெருமானையே நினைத்து பாடி மகிழ்ந்து, பரிதவித்து, மாலை சூடி கொடுத்து, எம்பெருமானையே கைப்பிடித்த கோதை பிராட்டியின் திருவவதார உத்சவ சமயத்தில், ஆண்டாளின் தாள் பணிந்து தொழுவோம்.

Here are some photos of Sri Andal neeratta uthsavam at Thiruvallikkeni day 7 on 11.1.2022 which was Koodaraivalli too.

Sri Andal thiruvadigale saranam !

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7th June 2022 









1 comment: