To search this blog

Saturday, June 11, 2022

Vaikasi Swathi - Sri Azhagiya Singar 2022 - எழில் கொண்ட .. நெடுமால் நிறம்போல!!

இன்று 11.6.2022  வைகாசி ஸ்வாதி - திருவல்லிக்கேணியில் ஸ்ரீ அழகிய சிங்கர் சிறிய மாட வீதி புறப்பாடு - எம்பெருமான் வடிவழகை எவ்வாறு சொல்வது .. நெற்றி சுட்டி என்ன ! நீலமேகம் என்ன ! அரும்பு முல்லை மொட்டுகள் என்ன ! திருமார்பில் லக்ஷ்மீ பதக்கம், அழைத்து அருள் பாலிக்கும் திருக்கரங்களில் சிவப்பு ரூபி கற்கள் என்ன ! காசுமாலை என்ன ! கிரீடம் என்ன ! - புன்முறுவல் தவழும் திருமுகம் என்ன .. .. அவர்தம் வடிவழகை கண்டவர் பாக்கியசாலிகள் ! - வேறு ஒன்றையும் காணாமல், அவரையே கண்டு இன்புறுவர்கள் அல்லவா !! முதல் பால பாடம்.  ஒரு மொழியின் சொல்லுக்கு பிறிதொரு மொழியில் பொருள் தேடக்கூடாது.  கார் என்றால் ஆங்கில கார் [car]  அல்ல - சாலையில் செல்லும் மகிழுந்துகள்- வண்டி அல்ல. தமிழில் கார் என்ற சொல் மிகவும் அழகானது.  கார்மேகம், கார்முகில், காரிருள், கார்குழல் என்று பல கேள்வியுற்று இருப்பீர்கள்.   . கருமை + மேகம்தான் கார்மேகம். பண்புத்தொகைப் புணர்ச்சியில் கருமை, கார் என்று ஆகிவிடும். மழைபெய்வதற்கு முன்னுள்ள மேகம் கறுத்துத் திரண்டு இருப்பதால், அது கார்மேகம். கார்முகில். கரிய நிறத்தவன் என்பதால், கண்ணனுக்கு, கார்வண்ணன் என்று பெயர்.   

Digressing something on clouds and lightning that are referred in the verse of Sri Peyalwar.  All of us get fascinated by rain clouds – watching them hover over is really interesting as we look forward to good rains.   Clouds form through the process of condensation when water vapor, primarily from the oceans, rises into the atmosphere where it cools and condenses into cloud formations. If the condensed droplets in a cloud get large enough, they’ll fall as precipitation. Rain clouds, or nimbus, produce everything from drizzle to downpours; more violent relatives of theirs may unleash rain as part of intense thunderstorms.  

Nimbus is an ancient Latin word meaning “rain storm.” Rain or nimbus clouds tend to appear dark gray because their depth and/or density of large water droplets obscures sunlight. Depending on temperature, nimbus clouds may precipitate hail or snow instead of liquid rain. Cumulonimbus clouds are also called thunderheads. Thunderheads produce rain, thunder, and lightning.   

Lightning is an electrical discharge caused by imbalances between storm clouds and the ground, or within the clouds themselves. Most lightning occurs within the clouds.  During a storm, colliding particles of rain, ice, or snow inside storm clouds increase the imbalance between storm clouds and the ground, and often negatively charge the lower reaches of storm clouds. Objects on the ground, like steeples, trees, and the Earth itself, become positively charged—creating an imbalance that nature seeks to remedy by passing current between the two charges. Lightning is extremely hot—a flash can heat the air around it to temperatures five times hotter than the sun’s surface. This heat causes surrounding air to rapidly expand and vibrate, which creates the pealing thunder we hear a short time after seeing a lightning flash. 


எம்பெருமானுடைய அழகானது ஒருவருடைய பேச்சுக்கு நிலமன்றாகிலும் பேசாதிருக்க முடியாதன்றோ, ‘திருவடி அப்படியிருக்கிறது, திருக்கண் இப்படியிருக்கிறது‘ என்றாற் போலே உவமையிட்டாவது சொல்லிக்கொண்டுதானே யிருக்க வேண்டும், ஆகவே உபமாந முகத்தால் எம்பெருமானது வடிவைப் பேசி அநுபவிக்கிறார் தமிழ் தலைவன் ஸ்ரீபேயாழ்வார் என மிக அழகாக உரைத்துள்ளார் நம் கச்சி சுவாமி எனப்படும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி.  இதோ இங்கே பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரம்.:   

எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்

தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், – எழில் கொண்ட

நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,

கார்வானம் காட்டும் கலந்து. 

Lord Krishna battled fiercely overcoming seven black bulls for the sake of Nappinnai – the mighty Lord  looked like the dark radiant rain-cloud lit by its lightning, charging against other dark clouds in the sky – Peyalwar seemingly is telling. 

கார் காலத்து ஆகாசமானது எம்பெருமானுடைய திருமேனி நிறத்தை ஒத்துள்ளது. கார்காலத்து ஆகாசம் எங்ஙனே யிருக்குமென்றால், அழகிய நீர் கொண்டெழுந்த மேகம் மின்னற் கொடியோடு சேர்ந்து வேகமாகத் திரிந்து கொண்டிருக்கனுடைய காளமேகம்போன்ற திருமேனியும் பெற்றிருக்கும். எம்பெருமானுடைய காளமேகம் போன்ற திருமேனியும் மின்னற்கொடி போன்ற பெரிய பிராட்டியாரோடு கூடியும், ஸ்ரீகஜேந்திராழ்வான் போன்ற ஒடித் திரிந்துகொண்டும், ‘ஆணைவரும் பின்ன மணி யோசைவரும் முன்னே‘ என்கிறாப்போலே அன்பர்களிடம் தான் வருவதற்க முன்னமே அறிகுறியாக முழக்கத்தைச் செய்து கொண்டிராநின்ற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடைத்தாகியுமிருக்கும்.  அத்தகைய எம்பெருமானான ஸ்ரீகண்ணபிரான் இன்று திருவல்லிக்கேணி தனிலே ஸ்ரீதெள்ளியசிங்கனாக பக்தர்களுக்கு அருள் பாலித்தான். 

புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11th June 2022.  

1 comment: