Thiruvallikkeni Andal
bangles !! - 'கோல்வளை'
Curious about the second pic !! ~ an
attractive ornament now in British Museum.
The British Museum object Af1900,0427.14 is a wrist ornament
(suman) made in the Asante region, dated approximately 1800–1895. It contains –
gold beads, glass beads,gold crotal bells, fibre pendats, twisted vegetable
fibre cord and more. The is Asante wrist
ornament.
Image: © The Trustees of the
British Museum.
திருக்கருப்பறியலூர்
எனும் ஊரை கேள்விப்பட்டு உள்ளீர்களா ? இது சிவபெருமானின் தேவாரப்பாடல்
பெற்ற சிவலாலயங்களில் ஒன்று !.
சில ஆண்டுகளுக்கு
முன்பு வரை கிராமங்களில் திருவிழா என்றவுடன் ராட்டினம், பச்சை குத்துபவர்கள், வளையல்
வண்டிக்கார்கள், பலூன் விற்பவர்கள் எனக் கிராமமே களைகட்டும். பல பழைய படங்களில்,
வளையல் விற்பவர்கள் கதாபாத்திரமாக வருவது நினைவு இருக்கலாம். வாழ்க்கை மாறிவிட்டது.
இது சிறப்பான ஆடி
மாதம். ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வளையல் சார்த்துவதும், வளையல் காணிக்கை, வளையல்
மாலை அணிவிப்பதும் பக்தர்களின் நீண்ட கால நம்பிக்கை. ஸ்ரீவைணவ திருக்கோவில்களில்
கூட, ஆண்டாளுக்கு திருவாடிப்பூரத்தன்று பக்தர்கள் வளையல்களை காணிக்கையாக அளிப்பர்.
Firozabad in UttarPradesh
has earned the name ‘Suhag Nagari’ which means the city of married women,
where the married women wear bangles as a symbol of prosperity. Laad
Bazaar or Choodi Bazaar in Hyderabad is famous for varieties of pearl
bangles. Laad Bazaar is the centuries- bangles market near Charminar in
Hyderabad, which has inspired photographers and poets. Moradabad
city in India is the largest producer of bangles. Nakkavanipalem, a tiny
village near Narsipatnam was once a place where skilled bangle workers were in
existence.
Gold bangles have adorned
and ornamented women’s dainty wrists since ages. This is a symbol of status,
prosperity, and wealth. Wrists vary in size, thickness, texture, strength, and
symbolize kindness as well as for gallantry. Wrists must be decorated with
jewels not because they help establish the human connection! More so because
they are status symbols. Diamond Bangles also sell well ! the
Jewellers cash more in experimentation with so called newer designs, patterns,
styling, engraving and more ! - some would prefer very
delicate thin gold bangles while some would insist them being solid and
weighing more !
Moving away, there are many
Nations, cultures, traditions that are linked to wearing of high value gold
bracelets, bangles and ornaments. Pakistan,
Bangladesh and Nepal have traditions closest to India, while the Gulf countries
too have an age old tradition. In
Ghana, particularly among the Akan and Asante, gold has an extraordinarily
important cultural history. Gold bracelets, armlets and other ornaments were
historically associated with royalty, chiefs, wealth and authority. The Asante
tradition is especially remarkable because gold was not merely decorative. Gold
objects could communicate rank, political authority and social standing.
In Nigeria, elaborate bracelets and bangles are prominent in
Yoruba, Igbo and other traditions. Among wealthy families, gold jewellery may
form an important part of bridal adornment, sometimes including substantial
bracelets worn together with necklaces, earrings and rings. Among the Maasai, colourful beadwork is much
more characteristic than gold. Women
traditionally wear numerous beaded bracelets, arm ornaments and necklaces,
often using strong colours and geometric patterns. These ornaments can
communicate aspects of age, marital status, community identity and ceremonial
participation.
Ghana, particularly the
Akan/Asante tradition, is probably one of the best African examples to compare
with India's tradition of precious bangles and jewellery. For Asante royalty — gold
was much more than jewellery The Asantehene (King of the Asante)
and senior chiefs traditionally appeared in extraordinarily elaborate regalia:
Kente cloth, crowns, rings, gold ornaments, swords with gold-covered hilts,
staffs, soul-washer's badges and other objects.
Gold
had a deep symbolic meaning. In Akan thought it was associated with the sun and the life force (kra), so its presence
on the king was not simply a demonstration of wealth. Royal gold regalia
represented authority,
power, vitality and sacred status. Here is the King wearing
ornaments. Otumfuo Osei Tutu II, 16th
Asantehene, in traditional royal regalia, 2019. Official U.S. Embassy Ghana
photograph by Archibald Sackey. Public domain.
ஆண்டாள் நாச்சியார்
திருமொழி பாசுரத்தில் ஒரு சொல் 'கோல்வளை' - இது பெயர்ச்சொல் - ஒரு வளையல்வகை. வளையல்
என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது.
ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம்,
பிளாட்டினம், கண்ணாடி, எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.
“கோல்வளை” என்பது
சங்கத் தமிழ் மற்றும் செவ்வியல் இலக்கியங்களில் வரும் அழகான சொல். கோல் – நேர்த்தியான, அழகிய வடிவம் / சில இடங்களில்
கோலாகிய அமைப்பு என்ற பொருள். வளை – வளையல், கைவளை. அதனால் “கோல்வளை” என்பது பொதுவாக
அழகிய வளையல்களை அணிந்த பெண் அல்லது அழகிய கைவளையல் என்ற பொருள் சூழலுக்கேற்ப பெறும்.
“கோல்வளை” நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஒரு புகழ்பெற்ற பாசுர வரி. ஸ்வாமி நம்மாழ்வார்
திருக்குளந்தை திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் :
**“கூடச்
சென்றேன் இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்**
இங்கே “கோல்வளை”
என்பதைப் பொதுவாக கோல் + வளை: “கோல் போன்ற
(மெல்லிய/நேரான) வளை” — அதாவது மெல்லிய, அழகிய கைவளைகள் அணிந்த பெண்தன்மை கொண்ட நாயகி
நிலையில் ஆழ்வார் பேசுவதாகக் கொள்வர். பாசுரத்தின் சாரம்: ஆழ்வார், “ எம்பெருமானிடத்திலே
அதீத ஈடுபாடு மிகுதியால், ஆழ்வார் தம் உடல்-உள்ளம்-மரியாதை
எல்லாவற்றையும் இழந்து, அவனோடு ஒன்றிவிட்ட நிலையை மிக உணர்ச்சிபூர்வமாகச் சொல்கிறார்.
பெரிய மாடங்களும், கொடிகள் கட்டப்பட்ட மதில்களும் உடைய தென்குளந்தையில், மேற்குப் பக்கத்தில்
நிற்கும் மாயக்கூத்தன், தன் ஆடும் பறவையாகிய கருடனைக் கொடியில் ஏற்றி, போரில் வெல்லும்
திருவாழியை வலத்தில் கொண்டவனை, நான் ஆசையோடு சேர்ந்துவிட்டேன்.” என்கிறார் மாறன் சடகோபன்.
கோல் + வளை can be understood as a beautiful, well-formed/ornamental
bangle, and கோல்வளை
becomes an epithet describing the woman who wears such bangles.
In classical Tamil, compounds involving வளை frequently extend from the ornament itself to the woman adorned with it.
கோல்வளை பற்றி தேடியபோது
படித்தது ஒரு தேவாரப் பாசுரம். திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமறையில்
- திருவதிகை வீரட்டானம் பற்றி பாடும் போது –
நீறு
கொப்பளித்த மார்பர் நிழறிகழ் மழுவொன்றேந்திக்
கூறு
கொப்பளித்த கோதைக் கோல்வளை மாதோர் பாகம்
ஏறு
கொப்பளித்த பாதமிமையவர் பரவியேத்த
ஆறு
கொப்பளித்த சென்னியதிகை வீரட்டனாரே.
திருநீறு பரந்து
விளங்கும் மார்பினராய், ஒளி விளங்கும் மழுப்படையைக் கையில் ஏந்தி, எல்லோரும் புகழும்
மாலையும் திரண்டவளைகளும் அணிந்து ஒரு பாகத்தை விளக்கும் பார்வதி சமேதராய், காளையைத்
தழும்பேற வைத்த தம் திருவடிகளைத் தேவர்கள் துதிக்குமாறு கங்கை நதி பெருகித்தங்கியிருக்கும்
செஞ்சடையை உடையவராய் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் என பாடியுள்ளார்.
திருக்கருப்பறியலூர்
இறைவன் : குற்றம் பொறுத்த நாதர். இறைவியார் கோல்வளை நாயகி. இந்த தலம் வைத்தீசுவரன்கோயில்
இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 8-கி.மீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, வைதீஸ்வரன்கோயில் ஆகிய இடங்களிலிருந்து
தலைஞாயிறு செல்ல பேருந்து வசதி உள்ளது. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்
உள்ள இவ்வாலயம், கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. உள்மண்டபம்
வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது. “கற்றவன் இருப்பது கருப்பறியலூரே”
என்று ஞானசம்பந்தரும், “கற்றோர்தம் இடர்தீர்க்கும் கருப்பறியலூர்” என்று சுந்தரரும்
இத்தலத்து இறைவனைப் போற்றிப்பாடியுள்ளார்கள்.
திருக்கருப்பறியலூர் தற்போது தலைஞாயிறு என அறியப்படுகிறது.இங்குள்ள ஆலயம்
"கொகுடிக்கோயில்" என்று பெயர் பெறும். கொகுடி என்பது ஒருவகை முல்லை.
இதன் வடிவில் அமைந்த கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது. சீகாழிக்கு மேற்கில்
இருப்பதால் மேலைக்காழி என்றும், சூரியன் வழிபட்டதால்
தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம்
அழைக்கப்படுகிறது.
13.8.2023 was
Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi] –
the most blessed day for all Srivaishnavaites –
marking the birth of Kothai Piratti [Andal]. In the ongoing
Thiruvadipura Uthsavam- on day 9 – it was siriya thiruther for Sri Andal.
Here are some photos of Andal purappadu to thiruther and Andal wearing
beautiful bangles.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
.jpg)

.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment