To search this blog

Thursday, August 27, 2026

Sri Parthasarathi Perumal Muthangi ~ some history !!

 

சமீப காலகட்டத்தில், பெருமாள் புறப்பாடுகள் பலராலும் புகைப்படம், மற்றும் காணொளி என வலைத்தளங்களில் வலம் வருகின்றன.  முந்தைய நூற்றாண்டின் திருவல்லிக்கேணி புகைப்பட கலைஞர்களில் திரு தஞ்சை மூர்த்தி பிரபலமானவர்.  கைரவிணி திருக்குளத்தின் வடக்கு குளக்கரை தெருவில் இவரது புகைப்பட ஸ்டூடியோ அமைந்து இருந்தது.  This post has some photos of 1983 !!




நம் எம்பெருமானுடைய  கடாக்ஷம் பெறப்பெறின்  எத்தகைய மனக்களிப்பு உண்டாகும் ? முத்துக்களோ, வைரங்களோ, நன்பொன்னோ  ~ வேறு ஏதும் விலை மிக அதிகமான பொருளோ ? - நமக்கு எதிலே நாட்டம் ?? ஐயம் கிஞ்சித்தும் உளதோ ??  :  சுவாமி நம்மாழ்வாரின் வைர வரிகள் : 

*பெருங்கேழலார் தம்  பெருங்கண் மலர்ப்புண்டரீகம்

நம்மேல் ஒருங்கே (பிறழுவதே) **

~  அன்று  பிரளய  வெள்ளத்திலழுந்தின பூமியை மீட்டு எடுத்த மஹாவராஹ ரூபாய மயமானவர்,  எம்பெருமான் தம்முடைய பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை, தன்னை குளிர நோக்கினமை நம்மாழ்வார் கூறியவாறு,  நம்மேல் வைத்த கடாக்ஷத்தை பற்றி மட்டுமே பேருவகை கொள்தல் நலம். 

 

The history of Chennai, is far older than British settlements, the  black town area came to be known as George Town from 1911 in honour of  King George V when he was crowned,  the Emperor of India.  The Western part of George Town is the Muthialpet area, traversed by couple of  roads running from Madras High Court to Clive Battery, nearer Royapuram Railway.   One among the many lanes is  Pavalakkaran Street housing Sri Venugopala Temple.  It was once the place where diamond and coral trade flourished.  

The Jews imported corals, both in the form of beads and in rough. The place in Muthialpet where they lived was known as Pagadalpet [Coral-town] dating back to 1700s.   A book titled – ‘The English Gentleman Merchant at Work: Madras and the City of London 1660-1740’ by Soren Mentz, mentions that the financial crisis affecting the English market even ruined some of the private merchants in Madras, through respondentias, as they suffered financial losses when the Captains were declared bankrupt.  After a voyage to Madras in 1721, Captain Martin was declared bankrupt and private merchants like John Adams lost their investment. 

Pearls are attractive.  Palliative care is an approach, an ethic, a multi-disciplinary sub-speciality, not just a new element that can be added and stirred into health systems. Pearl jewellery that glitters needs to be taken care of nicely.    Such news may not be of any interest to us ~ but this dress adorned by Emperuman, made of Pearl [Muthangi] certainly does. On day 5 of annual Pavithrothsavam at Thiruvallikkeni, Emperuman adorned Muthangi.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இன்று 26.8.2026  பவித்ரோத்சவ ஐந்தாம் நாள் புறப்பாட்டின் போது ஸ்ரீ பார்த்தசாரதி முத்தங்கி அணிந்து அற்புத சேவை அளித்தார். 










The photographer  referred to in the first para,  Sri  Thanjai Moorthi devotedly offered  an ornate Muthangi for Emperuman in 1983 – for years Emperuman adorned that beautiful ornament in many purappadus.  Later in 1995 Thiru Thanjai Murthi again made a sacred offering of renewed Muthangi.

First are the photos of Muthangi samarpanai to Sri Parthasarathi Emperuman by Thanjai Moorthi & family in 1983.  The last three photos (below) are of Sri Parthasarathi Perumal Pavithrothsava purappadu day 5 on 26.8.2026

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar  





No comments:

Post a Comment