To search this blog

Sunday, August 8, 2021

Sri Andal Thiruvadipura uthsavam - மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்

 

உங்களுக்கு மிகவும் பிடித்த மலர் எது ?   மாலதி  என்ற பெயர்ச்சொல்லுக்கு, : இளம்பெண்; குடமல்லிகை, மல்லிகை; காட்டுமல்லிகை; சிறுசெண்பகம்; நிலவொளி, சந்திரிகை; விளக்குத்தண்டு இன்னமும் பல அர்த்தங்கள் உள்ளன.   மல்லிகை மணமிக்க  பாரம்பரியமான மலர்.  மல்லிகை மலரில் எசென்ஸ் எடுக்கின்றனர்.  சில ஊர்களில் மல்லி டீ பருகுகின்றனர். மல்லிகை மொட்டுக்களால் மட்டும் கட்டப்படும்மண மாலை மிகவும் சிறப்பானது. தலையில் சூடுவதற்காகப் பூக்கள் சரம் சரமாக தொடுக்கப்பட்டு விற்பனையாகிறது. மலர்களிலே பல நிறமும், மணமும் இருந்த போதிலும் வெண்மை நிற மல்லிகை தூய்மை, அமைதி, ஆர்வம் ஆகியவற்றிற்கு இலக்கணமாக இருக்கின்றது. தனது தனித்துவமான மணத்தினால் மல்லிகைக்கு ஈடு இணையான மலரேதுமில்லை எனலாம். 

For Srivaishnavaites, life is blissful – today 8th August is day 7  in Thiruvadipura uthsavam  of Kothai piratti Andal .. .. but   . ……

 India witnessed a single-day rise of 39,070 new coronavirus cases, taking the infection tally to 31,934,455, while the death toll climbed to 4,27,862 with 491 fresh fatalities, the Union health ministry said this morning. The active cases in the country have declined to 4,06,822 -  Kerala remains the top contributor with daily cases breaching the 20,000-mark again.  India has approved Johnson & Johnson’s single-dose Covid-19 vaccine for emergency use, the health minister, Mansukh Mandaviya, said. The pharmaceutical giant had applied for emergency use approval of its vaccine, the company said on Friday. The shot will be brought to India through a supply agreement with the homegrown vaccine-maker Biological E Ltd, J&J had said.  Indian health authorities have so far approved the use of vaccines developed by AstraZeneca, Bharat Biotech, Russia’s Gamaleya Institute and Moderna.

.. but  in Tamil Nadu Temples are out of bounds on  Friday, Sat, Sundays and more importantly this Wednesday, the day of Sri Andal Thiruvadipura uthsavam ! Sad !! 

சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலர் மல்லிகை. இந்தியாவில் மல்லிகை என்றாலே மதுரை.   மல்லிகை ஆலிவ் குடும்பமான ‘ஒலிசியே’ எனும் புதர் மற்றும் கொடிகள் சார்ந்த பேரினம். ‘ஜாஸ்மினும் சம்பக்’ (Jasminum Sambac) எனும் தாவரவியல் பெயரால் அழைக்கப்படும். 

It is another country in turmoil -  a humanitarian crisis is unfolding in Daraa, Syria as around 55,000 civilians – 10,000 families are under siege with little to no access to food, medical care, medicine, or basic human needs. The city of Daraa has been under siege since June 24, 2021. The humanitarian situation is deteriorating rapidly. Many families are risking their lives fleeing to nearby areas in search of safety, while thousands of families remain in a dangerous situation besieged and under attack.

In Tokyo Olympics 2020, Lasha Talakhadze pumped everyone up with three world records on the final day of Olympic competition in weightlifting. The defending champion from Georgia lifted 223 kilograms in the snatch and 265kg in the clean and jerk for a total 488kg.  All three figures broke his own world records in the over-109kg men’s superheavyweight category. Ali Davoudi of Iran was left in second place by the vast margin of 47kg. Man Asaadof Syria won the bronze. 

The capita of Syria, Damascus was built in a strategic site on a plateau 680 m (2,230 ft) above sea level and about 80 km (50 mi) inland from the Mediterranean, sheltered by the Anti-Lebanon mountains, supplied with water by the Barada River, and at a crossroads between trade routes. Damascus is surrounded by the Ghouta, irrigated farmland where many vegetables, cereals and fruits have been farmed since ancient times.  Damascus is  titled the "City of Jasmine".  The Barada River flows through Damascus. Damascus is one of the oldest continuously inhabited cities in the world.

கோதைப்பிராட்டி எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மீது அளவற்ற  பற்றும் ப்ரேமையும் கொண்டவள்  - மானிடவரான தம்மை ஸ்ரீமன் நாராயணன் வந்து ஆட்கொள்ளுவான் என்று ஐயமற நம்பினாள் - அதன்படியே வாழ்ந்தாள் - திருமாலிருஞ்சோலை அழகிய மணவாளனையே மணாளனாக மணமுடித்தாள். ஆண்டாள் அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் திருமொழி தனியன் பாசுரத்தில் 'மல்லி நாடு' எனப்படுவது அக்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை உள்ளடக்கிய ஒரு பெரிய ஊராக திகழ்ந்து, காலப்போக்கில் மாறி இருக்கலாம்.  வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரின்  பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.     'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்கள் மல்லி என்ற பிரதேசத்தினை விளக்குகின்றன.  கௌதுக பேரம் எனப்படும் (செல்வ) ஆண்டாளின் திருப்பெயர் மல்லி வளநாடி. முற்காலத்தில் இந்த பகுதிக்கு 'மல்லி வளநாடு’ என்பது பெயர். இந்த நாட்டை ஆள்பவள் எனும் பொருளில் இப்பெயர் வழங்குகிறது.   கோதைப்பிராட்டி   மல்லிநாடாண்ட மடமயில்!. 

கோதைப்பிராட்டி அருளிச்செய்த நாச்சியார் திருமொழியின் தனியன், திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது,  கட்டளைத் கலித்துறையில் அமைந்த பாசுரம்.  இவர், ஸ்ரீமந் நாதமுனிகளின் சஹோதரியின் குமாரர், ஆனி மாத திருவோண நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில்,தரையைச் சுத்தம் செய்யும் கைங்கர்யத்தை அனவரதமும் செய்து வந்தார். 

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி*

மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்*

ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்*

தென் புதுவை வேயர் பயந்த விளக்கு. 

மல்லி நாட்டை ஆளும், மட மயில் போன்ற மென்மைத் தன்மை உடைய இவள், இடைக்குல வேந்தன் கண்ணனின் திருமேனிக்குப் பொருந்தினாள். ஸ்ரீவில்லிபுத்தூர் வேதியர் பெரியாழ்வாரின் பெண்ணாய் திருவிளக்குப் போல் விளங்கினாள்.  

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் Here are some photos taken by me during Sri Andal Thiruvadipura  uthsavam at  Thirumylai Sri Madhavaperumal thirukovil on day 5  ie.,  6th Aug 2021.    The ones below are of Thiruvallikkeni Andal taken during Neeratta uthsava purappadu on 11th Jan 2021. 

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
8th   Aug 2021.

No comments:

Post a Comment