To search this blog

Friday, August 13, 2021

Praying Lord Azhagiya Singar for well-being of World - வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்

இன்று ஆடி வெள்ளிக்கிழமை ... .. என்னே ஒரு கொடுமை ! - வெள்ளி, சனி ஞாயிறு தினங்களில் திருக்கோவில்களில் பக்தர்களுக்கு சேவிக்க அனுமதியில்லை.  கொரோனா கொடியது ! மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் .. .. ஆனால் தெருக்களிலே மக்கள் கூட்டம்கூட்டமாக அலைகின்றனர்.  கடைகளில் மக்கள் கூட்டமாக காணப்படுகின்றனர். நகரத்தில் பஸ்களிலும் இரயிலிலும் மக்கள் கூட்டம் உள்ளது.  மாஸ்க் என்பதை கழுத்திலோ, மோவாய்கட்டிலோ, மணிக்கட்டை சுற்றியோ அணிந்துள்ளனர் .. ..  ஆனால் திருக்கோவில்களில் மட்டும் வெள்ளி, சனி ஞாயிறு - மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை


கொரோனா தீநுண்மி    (பரிவட்ட நச்சுயிரி)  ஒரு கொடிய வைரசு -   இவை    மனிதர்களுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தி  பயங்கர நோயை பரப்புகின்றன.  உலகமே இந்நோயினால் பீடிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் மாண்டுள்ளனர்.    சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்பு தான்  இது அலையலையாக பரவினாலும், உலக சுகாதார மையம் - இந்நோயின் பெயர் அது ஆரம்பித்த இடத்தையோ, நாட்டையோ குறிக்கக்கூடாது என அதற்கு :கோவிட்  19" என பெயரிட்டது.  ஆனால்  பின்னர் - தெற்கு ஆப்பிரிக்க வைரஸ், இந்திய வைரஸ் என அழைக்கப்படும்போது வாய்மூடி மௌனியாக உள்ளது.    நமது இப்போதைய பயம் -  கரோனா தீநுண்மி பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்தாலோ, எளிதில் பாதிக்கப்பட்டக் கூடியா்களுக்கு வேகமாக பரவினாலோ இந்தியாவில் மூன்றாம் அலை பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது  என்பதும் அதனால் மறுபடி பலர் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற கிலேசம் தான்.  

பல மாதங்களுக்கு முன்னர் சீன வைராலஜிஸ்ட் லி மெங் யான்,  என்பவர், கொரோனா நோய்த்தொற்றை தயாரித்தது சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில்தான் என்ற தகவலை  உறுதிபட கூறினார்.  சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற வைராலஜிஸ்ட் லி மெங் யான், கொரோனா வைரஸ் உண்மையில் வூஹான் ஆய்வகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார். பின்னர்  ஒரு நேர்காணலில், சீன அரசாங்கம் கோவிட்-19 பரவுவதைப் பற்றி அறிந்திருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு அதை மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.  எது எப்படி இருப்பினும் சீனாவுக்கு அதிக பாதிப்பு இல்லை !!!

Covid Patient Zero may have been a Wuhan lab worker infected by a bat after all, WHO chief admits after originally ruling out virus escape theory !! Dr Peter Embarek, who led the WHO probe in China, said the world's first Covid-19 patient may have been infected by a bat while working in a Wuhan lab. He had initially dismissed the notion that the virus escaped from lab as unlikely.  Recently, Dr Embarek told Denmark's television station TV2: 'An employee who was infected in the field by taking samples falls under one of the probable hypotheses.  'This is where the virus jumps directly from a bat to a human.' He explained: 'In that case, it would then be a laboratory worker instead of a random villager or other person who has regular contact with bats. So it is actually in the probable category.' The Danish scientist stressed that the WHO investigators found no direct evidence of this.

China has long been accused at home and abroad of covering up the initial outbreak and concealing information when it first emerged in Wuhan in December 2019.   .. .. .. and WHO supported it so strongly denying all allegations against China !  .. .. Dr Embarek's comments are a marked reversal on those he made while still in China on the fact-finding mission when he called on scientists to stop investigating the possibility the virus escaped from a lab. He also initially insisted there is no evidence  of transmission 'in Wuhan or elsewhere' before December 2019. But a week later he backtracked and said his team had discovered there were at least 13 Covid variants in Wuhan in December, suggesting the virus had been in development for some time to allow these different strains to develop.  He also revealed that up to 1,000 people in Wuhan could have been infected in early December - an estimate based on Chinese data that showed 174 severe cases of the disease.    

Chinese scientists and officials have been keen to point the finger of blame outside their own borders - variously suggesting that the virus could have originated in Bangladesh, the US, Greece, Australia, India, Italy, Czech Republic, Russia or Serbia. The Wuhan Institute of Virology has been collecting numerous coronaviruses from bats ever since the SARS outbreak in 2002. They have also published papers describing how these bat viruses have interacted with human cells. US Embassy staff visited the lab in 2018 and 'had grave safety concerns' over the protocols which were being observed at the facility. The lab is just eight miles from the Huanan wet market which is where the first cluster of infections erupted in Wuhan. The market is just a few hundred yards from another lab called the Wuhan Centers for Disease Prevention and Control (WHCDC).


மனிதகுலம் பேரழிவுகளை சந்தித்துள்ளது.  நநம்மை எத்தகைய கொடிய இடர்களிடம் இருந்தும் காக்கவல்லன் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் ஒருவனே ! அவ்வெம்பெருமானையே பல்வேறு திருத்தலங்களிலும், அவதார பரம்பொருட்கள் ஆகவும், பரமபதத்தில் வீற்று இருப்பவனாகவும்,  திருப்பாற்கடலிலே சயனித்த பெருமானாகவும் நாம் வணங்குகின்றோம்.  திருநாட்டில் திருவனந்தாழ்வான் மீது பெரியபிராட்டியாரோடுகூட எழுந்தருளியிருந்து “பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்” உலகமெல்லாம் செங்கோல் செலுத்தி நியமிப்பவனாய், திருக்குணங்கள் நிரம்பப்பெற்றவனாய் தன்னுடைய ப்ரபுத்வத்தினால் கொடுங்கோன்மை காட்டாதே சாந்தியோடே யிருந்து ஆள்பவனாய்,  பல பல அவதாரங்கள் எடுத்து துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலனம் பண்ணுகிறான்.   தேவாதி  தேவர்களுக்கெல்லாம் தலைவனாம் எம்பெருமானைப்  போற்றிப்பாடி, வழிபட்டால் நமது தடைகள் அனைத்தையும் நீக்கி,  நம் தேவைகளை ஆராய்ந்து அறிந்து அருள்புரிவான். 

எம்பெருமான் கிருஷ்ணாவதாரத்தில் கொடுஞ்சிறையில் ஜனித்த, அப்போதே வெள்ளம் புரளும் யமுனை நதியை கடந்து, கோகுலத்தில் கண்வளர்ந்தான்.  கண்ணனால் தனக்கு அழிவு என்று அசரீரியாகத் துர்க்கை சொல்லக் கேட்ட கம்சன், கண்ணனைக் கொல்லவும், அவன் வாழும் கோகுலத்தின் மக்களை அச்சுறுத்தவும் தொடர்ச்சியாக தனது பலமிக்க அரக்கர்கள் ஒவ்வொருவராகக் கோகுலத்திற்கு அனுப்பிக் கொண்டே இருந்தான்.  பூதகி, அவளது சகோதரர்களான பகாசூரன் மற்றும் அகாசூரன், கம்சனின் அரக்கர்குல நண்பர்களான சகடாசுரன், திருணாவர்த்தன் என, தான் அனுப்பிய அனைவரும் கண்ணனால் கொல்லப்பட்டதைக் கேட்டு, கவலையோடு அரண்மனையில் வீற்றிருந்தான் கம்சன். அப்போது, கம்சனின் கவலைக்கான காரணத்தைக் கேட்ட அவனது உயிர் நண்பனும், எடுத்த காரியங்கள் அனைத்தையும் இடையூறின்றி முடிப்பவனுமான அரக்கன் கேசி, "நான் கண்ணனை அழித்து வெற்றியுடன் திரும்பி வருகிறேன்..." என்று சபதமிட்டு கோகுலத்திற்குச் சென்றான்.   கோகுலத்திற்குள் நுழைந்தவுடன், குதிரை வடிவை எடுத்த அரக்கன் கேசி, பிடரியைச் சிலிர்த்து, உரக்கக் கனைத்தான். அந்த ஒலி கேட்டு கோகுலமே அதிர்ந்து நடுங்கியது.  பெரிய உடலுடனும், குகையைப் போலுள்ள ஆழமான வாயுடனும் கால் குளம்புகளால் பூமியை உதைத்து, இடி இடிப்பதைப் போலக் கர்ஜித்துக் கொண்டு, கேசி எனும் அக்கொடிய  அசுரன் குதிரை வடிவத்துடன் கிராமத்துக்குள்  சுற்றிய போது, பக்ஷிகள் பயந்து ஓடின .கோகுலவாசிகள் கூக்குரலிட்டு, உன்னை அழைத்தனர்.  கண்ணனும், கேசியை நேரெதிராக எதிர்கொண்டான். கண்ணனைக் கண்ட கேசி, சிங்கம் போல் கர்ஜித்தபடி தனது கடினமான கால்களால் கண்ணனை மிதிக்க முயற்சி செய்யவும்,    வாயைப் பிளந்தபடி கேசி கோபத்துடன் கண்ணனைத் தாக்க முற்பட, கண்ணன் தனது கையால் அந்தக் குதிரையின் வாயைப் பிளந்து, கேசியை வதம் செய்தான்.  கேசியை வதம் செய்த காரணத்தால்தான், கேசவன் என்ற பெயரைப் பெற்றான்  ! கேசவனுக்குத் தடைகளை நீக்குபவன் என்றும், அழகிய கேசங்களை உடையவன் என்றும்கூட சொல்லலாம்.  

இவ்வாறு எம்பெருமானை பல்வேறு இடங்களிலே தர்சனம் செய்யப்பெற்ற மாறன் சடகோபன் - அவதாரங்களின் அனுபவத்தையும், திருநாட்டில் அநுபவத்தையும் இங்கிருந்தே அநுபவிக்கப் பெற்ற நான் ‘அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறையுடை யேனல்லேன் என்றவாறு நமக்கு அருளிச்செய்யும் திருவாய்மொழி பாசுரம் இங்கே :. 

 

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,

ஆற்றல் மிக்காளும் அம்மானை  வெம்மா பிளந்தான் தன்னை,

போற்றியென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்,

ஏற்ற நோற்றேற்கு  இனியென்ன  குறை எழுமையுமே? 

எம்பெருமானது அற்புதமான உறைவிடமான பரமபதத்திலே எழுந்தருளியிருந்து மண் விண் பாதாளம் என எல்லா உலகங்களிலும்,  தனது சிறப்பான செங்கோல் கீழ் நல்லாட்சி  நடக்கும்படி மிக்க ஆற்றலுடன்   ஆள்கின்ற ஸ்வாமியாய், ,  முன்னொரு நாள் கிருஷ்ணாவதாரத்திலே  கொடிய (கேசி என்னும் அசுரனான) குதிரையை வாய்பிளந்து கொன்ற பெருமானை போற்றி போற்றி என்று வாழ்த்திக்கொண்டே கைகளின் விடாய் தீரும்படி அஞ்சலி பண்ணி  சொற்களாகிற மாலைகளை எம்பெருமான் உகக்கும்படி ஸமர்ப்பிக்கைக்கு புண்ணியஞ் செய்துள்ள எனக்கு  இனிமேல் ஏழேழு  ஜன்மங்களிலும் எந்த குறையும் வாராது என அறுதியிட்டு உரைக்கின்றார் நம் ஸ்வாமி நம்மாழ்வார்.

Reminiscing the good olden days, here are some photos of Sri Azhagiya Singar Dharmathipeeda purappadu on Aani brahmothsavam on 15th June 2016.   

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.8.2021. 


1 comment: